சிவப்பரம்பொருள்-1
சாந்தா வரதராஜன்
WEST MAMBALAM
varadshantha@yahoo.com
'ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி' எனவும் 'முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்,பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியன்' என்று மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் சிவன் புகழை விளக்குகின்றார். அப்படிப்பட்ட சிவப்பரம் பொருளின் ஜோதி வடிவான லிங்கஸ்வரூபத்தின் பெருமையை லிங்கபுராணம் விவரிக்கின்றது.
'உள்ளம் கசிந்துரிகி என்னிடம் செலுத்தும் அன்பிற்கு நான் அருள்செய்வேன்' என்று உமாதேவியிடம் சிவபெருமான் சொன்னதாக லிங்கபுராணம் கூறுகிறது. சூதமுனிவர் லிங்க வழிபாட்டின் மேன்மையை தவஸ்ரேஷ்டர்களுக்கு விவரித்து கூறியதே லிங்க புராணமாகும்.வியாசபகவான் எழதிய பதினெண் புராணங்களில் பதினொன்றாவதான லிங்க புராணம் இதன் மூலம் ஆகும்.இதை பக்தியுடன் கேட்பவர்கள் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்திருப்பர் என்கிறார் சூத மா முனிவர்.
ஆதி,அந்தமின்றி,பிறப்பு,இறப்பு இல்லாது பேரொளியாக விளங்கும் ஜோதி வடிவிலிருந்து சகலலோகங்களுக்கும் ஆதாரமான லிங்கம் உண்டாயிற்று.அதனிடமிருந்து தோன்றியவர்களே பிரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மும்மூர்த்திகள்.
தமக்கென வித்து ஏதுமின்றி அனைதுயிற்கும் தாமே வித்தாகி வளர்ந்து விஸ்வரூபியான அப்பெருமானின் படைப்பே இப்பிரபஞ்சமாகிய மாயை. பஞ்ச பூதங்களும் அவனே.ஈசானம் தத்புருஷம், அகோரம்,வாமதேவம்,சத்யோசாதம் ஆகிய ஐந்தும் அப்பெருமானுடைய முகங்கள்.
தொடரும்
this article is very good
பதிலளிநீக்குplease publish more articles on lord siva
பதிலளிநீக்குwhere to get this book?
பதிலளிநீக்குBook on Lord Siva is welcome.
பதிலளிநீக்கு