Pages

சனி, 2 அக்டோபர், 2010

SIVALINGA THATHUVAM-10

HAVE A NICE DAY

 சிவ பூஜை 

     

 சிவலிங்க தத்துவம் - 10

  திருமதி சாந்தா வரதராஜன்    



           "மனதால் நினைத்தாலே பாவங்கள் விலகக் கூடிய" பஞ்ச பூத லிங்கங்கள் ஐந்து ஆகும்.


  காஞ்சீபுரத்தில் பிருதுவி மயமான ஏகாம்பர  லிங்கம் இருக்கின்றது. காவேரி தீரத்தில் உள்ள ஜம்புகேசுவரத்தில் அப்புமயமான ஜம்புகேஸ்வர லிங்கம் உள்ளது. அக்கினி மயமான அருணாச்சல லிங்கம், அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையில்  இருக்கிறது. சுவர்ணமுகி  தீரத்தில் உள்ள திருக்காளத்தியில் வாயு மயமான திருமூல லிங்கம். பூலோக மகா கைலாசம் எனப்பெற்ற தில்லைவனமானது சிதம்பரத்தில் உள்ளது. இவ்வைந்து லிங்கங்களின் பெயரைக் கேட்டாலும், சொன்னாலும் மனதில் நினைத்தாலும் அப்போதே அவன் புனிதமடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எனவே கண்ணாரக் கண்டால் பயனை விவரிக்க வேண்டுமா? 


  மேலும், ஜோதிர்லிங்கம் பன்னிரண்டுக்கும்  உபலின்கங்கள் உள்ளன. அவற்றைக் காண்போம். சோமநாத லிங்கத்திற்கு உபலிங்கம், மஹீநதி சமுத்திர சங்கம தீரத்திலுள்ள அந்த கேசலிங்கம் ஆகும். பிருகு பர்வததுக்குச் சமீபத்திலுள்ள ருத்திர லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கத்தின் உபலிங்கம். அதேபோல மகாகாள லிங்கதிற்குத் துக்தேச லிங்கமும், ஒன்காரச்வர லிங்கதிற்குத் கர்தமேச லிங்கமும் உபலிங்கங்கலாகச் சொல்லப்பட்டுள்ளன. யமுனை தீரத்தில் உள்ள பூதேச லிங்கம் கேதார லிங்கத்திற்கு உபலிங்க மாகும். பீமசங்கர லிங்கத்திற்கு பீமேச்வர லிங்கமும், விஸ்வேஸ்வர லிங்கதிற்குச் சரச்யேச்வர லிங்கமும், திரியம்பக லிங்கதிற்குச் சிதேச்வர லிங்கமும், வைத்திய நாதலிங்கதிற்கு வைச நாத லிங்கமும் நாகேஸ்வர லிங்கத்திற்கு ஜில்லிகா சரஸ்வதி சங்கமதிலிருக்கும் பூதேஸ்வர லிங்கமும், இராமேஸ்வரா லிங்கத்திற்குக் குப்தேச்வர லிங்கமும், குஸ்மேச லிங்கத்திற்கு வியாக்ரேச்வர லிங்கமும் உபலிங்ககலாகும்.


தொடரும் 
   








   
                     















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments