Pages

சனி, 5 பிப்ரவரி, 2011

KADHALIN SIRAPPU

HAVE A NICE டே



 LOVE
                                காதலின் சிறப்பு 
  கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன் 


    அன்பில் கனிவது காதல் 
    அகத்தில் நிறைவது காதல் 
    இளமையில் வளர்வது காதல் 
    முதுமையில் உணர்வது காதல் 


    கவிஞ்ஞனுக்கு கற்பனையே காதல் 
     கலைஞ்ஞனுக்கு சிந்தனையே காதல் 
    கடலைப்போன்றது காதல் 
    காழ்ப் பில்லாதது காதல் 


    குலம் கடந்தது காதல் 
    குறை காணாதது காதல் 
     தன்னலம் மறப்பது காதல் 
     தன்னையே கொடுப்பது காதல் 


    பலன் கருதாதது காதல் 
    பண்பை வளர்ப்பது காதல் 
    இதயத்துள் ஊற்று காதல் 
    இன்பத்தின் அருவி காதல் 


   காம உணர்வல்ல காதல் 
  கருத்தில் ஒன்றுவது காதல் 
   நாம ஜபமல்ல காதல் 
    நல்ல உணர்வே காதல் 


   எத்தனை துன்பம் ஏற்படினும் 
   ஏற்றுக்கொள்வது காதல் 
   அத்தனைக்கும் பதில் இன்பமதை 
   அள்ளிக் கொடுப்பதே காதல் 


                  ---------------------------          

      










   











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments