Pages

புதன், 23 டிசம்பர், 2009

PAZHANI-3


உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-பழனி-Part-2
திருமதி சாந்தா வரதராஜன் 


 "கூருடையாளுங்குன்றாக் குணப் பெருங்குன்று - ஞானப் 
பேருடைப் பழனி என்னப் பெயரது மருவிஎங்கள்
ஆறுமா முகுவன் வைகும் நகரமும் அன்று தொட்டு 
வீறு தொல் பழநீஎன்றே விளம்பின் உலக மூன்றும்"


என்று பழனித்தல புராணம் கூறுகிறது.


 எங்களுக்கு ஞானப்பழம் நீ என்று சிவபெருமானும் உமையும் கூறியதால் பழம்நீ என்பது பழனி என்றும் பழாதியம்பதி என்றும் மருவியது. இக்கோவிலில் திருகுமரன் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். அங்கு குமரப்பெருமான் இடும்பா சூரனை வதம் செய்தார். அவன் கேட்ட வரம் காரணமாக, ஒன்று வாயில் காவலனாக இருப்பது, மற்றது, தன்னை போல் காவடி தாங்கி வரும் அன்பர்களுக்கு கருணை சுரப்பதாகும்.இங்கு பக்தர்கள் காவடிகளில் தேன், பால், சர்க்கரை, இளநீர், பன்னீர் திருநீறு இவைகளைக் கொண்டு வருதல், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தல், இவை இடையறாது, நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பழனி முருகனுக்கு வைகாசி விசாகம்,ஐப்பசியில் சஷ்டி, கார்த்திகையில் கிருத்திகை, தைப்பூசம் பங்குனி உத்திரம் இந்த நாட்களில் சிறப்பான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாதம் தோறும் கிருத்திகை, சஷ்டி விசாகம், அமவாசைகளிலும் விழாக்கள் உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் அக்னி நட்சத்திர காலத்தில் மக்கள் திரளாக வந்து மலைவலம் வருகின்றனர்.


திருவாவினன்குடி 


  திருவாவினன்குடி என்ற கோவில் பழனி அருகில் உள்ளது.இங்கு முருகப் பெருமான் தெய்வயானையுடன் காட்சி அளிக்கிறார்.
 "ஆதியந்தம் உலா ஆசுபாடிய சேரர் கொங்குவை 
 காவூர் நனாடத்தில், ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே"
என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.


தொடரும் 
                           


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments