Pages

சனி, 21 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-4

HAVE A NICE DAY


         சிவலிங்கம் 
        

சிவலிங்க தத்துவம் - 3
  திருமதி சாந்தா வரதராஜன்


       எத்தனையோ பிறவிகளில் மானிடப்பிறவி என்பது அரிது.மானிடனாகப் பிறந்தவன் அவனவன் குலதிற்கேற்ப விதிக்கப்பட்ட கர்மாக்களை தவறாமல் கடைபிடிதுவரவேண்டும். ஆயிரம் கர்மாக்களைச்செய்வதைவிட தீர்த்த யாத்திரை விசேஷமாகச் சொல்லப்பட்டது. தவம் மேற்கொள்வது அதனினும் மேற்பட்டது.இன்னும் மேலானது தியானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. த்யானத்தின் மூலம் ஒருவன் பரப்ரம்மத்தை தான் இதயத்திலே தரிசிக்கிறான். அவன் பரப்ப்ரம்மஸ்வரூபமாகவே ஆகி விடுகிறான்.


   பரமானந்தத்தை உண்டு பண்ணுவதும், பரிசுத்தமானதும்,            அழிவு இல்லாததும்,நிஷ்களங்கமானதும்,சர்வபரிபூரனமாதுமான சிவலிங்கத்தை அவன் தன் மனதிலேயே காண்கிறான். சிவலிங்கம் இருவகைப்படும். ஸ்தூலமான கண்ணுக்கு புலப்படக்கூடியது 'பாஹ்யலிங்கம்' என்றும், ஞானக்கண்ணுக்கு புலப்படக்கூடியது 'அந்தரலிங்கம்' என்றும் கூருவர்.மேலும் ஞானிகளுக்கு 'விக்ரக' ஆராதனை தேவையில்லை.ஞானம் இல்லாதவனுக்கு விக்கிரக ஆராதனை அவசியமாகும். பக்தியோடு பூஜித்தால் தான் ஒருவன் தான் கோரிய பலனை அடைவான்.இல்லையேல் அவன் செய்யும் வழிபாடு வ்யர்த்தமாகும்.மேலும் , ஸ்ரத்தையின்றி பூஜை செய்வதால் அவன் கீழான நிலையையே அடைவான்.


தொடரும் 


   








   












                



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments