Pages

வெள்ளி, 18 நவம்பர், 2011

vinai theerkum vinaayakar - 3


HAVE A NICE DAY
                         
                                               
   SIDHI BUDHI விநாயகர்

     வினை தீர்க்கும் விநாயகர் -3


  திருமதி சாந்தா வரதராஜன்
                             
       அது முதல் ஏற்பட்டது தான் இந்தக் குட்டிக் கொள்ளும் பழக்கமே. இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகப் பெருமான் இல்லாத கோயில்களே கிடையாது என்று கூறலாம். பெருமாள் கோயிலில் "தும்பிக்கை யாழ்வாராக" விநாயகரை  
பூஜிக்கிறார்கள்.


       விநாயகர் உருவம் ஒரு விந்தையான உருவம்.யானைத் தலை - மனித உடல் - பெரு வயிறு - ஐந்து கைகள் என்று மனிதனுமில்லாமல் விலங்குமில்லாமலே அமைந்திருக்கின்றது. இப்படி ஒரு கடவுள் உருவம் அமைந்திருப்பதின் உண்மை என்னவெனில்,யானைத் தலை அக்ஹ்ரிணை.தெய்வ உடம்பு உயர்திணை. ஒரு கொம்பு ஆண் தன்மை; மற்றொன்று பெண் தன்மை என்று பல தத்துவங்களை உணர்த்து கின்றது. அதாவது விநாயகர் தேவராய் - மனிதராய் , ஆணாய் - பெண்ணாய் - உயர்திணையாய், அஹ்ரினையாய் விளங்குகின்றார் என்பதை புலப்படுத்துகின்றது.அவருடைய ஐந்து கைகள், படைத்தல், காத்தல்,மறைத்தல், அளித்தல், அழித்தல் என்னும் ஐவகை தொழில்களை உணர்த்துகின்றன. பெரு வயிறு, உலகங்கள் அனைத்தையும் தம்முள் அடங்கியிருத்தலை உணர்த்துகின்றது. எல்லாவிதமான சக்திகளையும் அவர் கொண்டவர்.அறிவிற்கும் அவரே அதி தேவதை. அதே போல் செல்வத்துக்கும் இடையுஊறுகளை தவிர்ப்பவர்.விநாயகரை பிரதான தேவதையாக கொண்டு வழிபடுபவர்களுக்கு 'காணபத்யர்' என்று பெயர். அவர்கள் விநாயகரின் திறுருவங்களை ஆறு விதமாக வழிபடுகின்றனர். மகா கணபதி, ஹரித்ரா கணபதி,உச்சிஷ்ட கணபதி, நவநீத கணபதி, ஸ்வர்ண கணபதி, சந்தான கணபதி என்பனவாகும்.பக்தர்கள் விநாயகரை எப்படி த்யானிக்கிரார்களோ அந்நிலையிலேயே அவர் காட்சி தந்து அருள்வார் என்று கூறப்படுகிறது.அநேகமாக விநாயகர் வீற்றிருக்கும் நிலையில்தான் உருவங்கள் காணப்படும்.நின்ற கோலத்திலும், நர்தன கோலத்திலும், சில உருவங்கள் காணப்படுகின்றன.விநாயகரின் தும்பிக்கை தும்பிக்கை இடது பக்கமே அநேகமாக திரும்பியிருக்கும்.சில உருவங்களில் அது வலது பக்கம் சுழித்திருக்கும்.அவ்வாறு காணப்படும் விநாயகருக்கு 'வலம்புரி விநாயகர்' என்று பெயர்.இனி விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும்  முறைகள் காணலாம்.விநாயகர் சுக்ல சதுர்த்தியில் ஜனனமாகையால் அன்று (விநாயகர் சதுர்த்தி) மண்ணினால் செய்த விநாயகரைத்தான் பூஜை செய்ய வேண்டும்.காரணமென்னவெனில் பஞ்ச பூதங்களில் 'மண்' முதலாவதாகும்.முழு முதல் தெய்வம் மஹாகணபதி யாவார்.ஆகையால் மண்ணினால் செய்யப்பட்ட விநாயகரை பூசை செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.பொதுவாக கோயில்களிலும்,ஆலையங்களிலும் மேலும் சில முக்கியமான இடங்களிலும் 'சதுர்த்தி' வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படும்.இத்தகைய இடங்களில் நன்கு அலங்காரங்கள் செய்து, மாவிலை தோரணம், வாழை மரம் கட்டி, கலர் விளக்குகள் போட்டு சிறப்பாக அலங்காரங்கள் செய்வதால் அந்த இடங்கள் விழாக் கோலம் பூண்டிருக்கும்.


தொடரும் 


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments