Pages

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

vetrriyai tharum jaya puththaande varuga !!

                                                                                                                       
     
         
          கவிஞ்ஞர்  திருமதி சாந்தா வரதராஜன்          

வெற்றியை  தறும் ஜெய புத்தாண்டே வருக !!    

  'விஜய' வருடம் கழிவதாலும் 
                 'ஜெய' வருடம் புகுவதாலும் 
 விசேஷ பூசைகள் செய்வதாலும் 
                    புது பஞ்சாங்கம் படிப்பதாலும், 
  ஆண்டவன் அருளால்  அனைவருக்கும் 
                    நலம் உண்டு. 
    அயராது உழைத்தால் நன்மைகள் 
                     பல உண்டு.
    விருந்தில் வெல்லப்பாயசமும் 
                  வேப்பம்பூ பச்சடியும் போல 
   வாழ்வில் சுகமும்,துக்கமும் 
                  இரண்டும் உண்டு,

 இந்த புத்தாண்டு -------
        
                    அன்பாலே வாழ்வினை வென்றிடுவோம் 
                 அறிவாலே உலகினை மாற்றிடும் 
                பண்பாலே அனைவரையும் கவர்ந்திடும்.
                 பரிவாலே எவரையும் அணைத்திடும்.

   பாசத்தால் உலகோரை ஈர்த்திடும் 
   பாராட்டி மனிதர்களை வாழ்த்திடும் 
    நேசத்தால் மாந்தர்களை இணைத்திடும் 
நேர்மையா வாழ்கை வாழ்ந்திடுவோம் 


கனிவுடன் யாவரையும் நடத்திடும் 
கண்ணான கடமையினைப் போற்றிடுமே.
பணிவுடனே மக்களிடம் பழகிடும் 
பயனுள்ள செயல்களையே செய்திடுவோம்.

 துன்பம்,துயரம் நீங்கிடவே 
 இன்பமும்,நலமும் இருந்திடவே 
பகைமைச் சண்டை ஒழிந்திடவே 
பஞ்சம்,பட்டினி தொலைந்திடவே 

பேரழிவு தரும் ஆணவ அறிவழிந்து 
எங்கும் மனித நேயம் மலர நீ வருக !
 ஒருவருகொருவர் நல வாழ்த்து 
 உவப்புடன் கூறி மகிழ்ந்திடவே நீ வருக! 

 அனைவருக்கும் அன்பை அளிக்க நீ வருக! 
 அன்னையின் அற்புத அருளோடு நீ வருக !
 அமைதி எங்கும் நிலவிட நீ வருக !
 ஆண்டு முழுவதும் ஆனந்தம் நிலை பெற  நீ வருக !

  ஊரெல்லாம் வளம் பெறவும் 
  உலகெல்லாம் நலம் பெறவும் 
  சீரழிந்துவிட்ட இயற்கையைச் 
 சீர் படுத்த 'ஜெய' புத்தாண்டே நீ வருக !

  இந்த புத்தாண்டில் :- 

   உழைக்கும் கரங்கள் உயரட்டும் 
  உழைப்பால் நல்வாழ்வு மலரட்டும் 
   உலகம் ஒற்றுமையால் இணையட்டும் 
   உரிமைகள் பல வந்து குவியட்டும்.

   உலகம் செழித்திட வாழ்ந்திடுவோம் 
   ஒற்றுமை ஓங்கிட வழிவகுப்போம் 
  கலகம்,பசி,துயர் இன்றியே தான் 
   களிப்புற இறைவனை நாம் துதிப்போம். 

   நன்மைகள் விளைய நன்மைகள் செய்து 
  நமக்கென உள்ளதை பிறருக்கு அளித்து 
  உடலுக்கு பொருள் தேடி , உள்ளத்திற்கு இறை தேடி 
 நாட்டுக்கு பணி செய்து தன் மானத்துடன் வாழவேண்டும். 

   புத்தாண்டு பிறந்த நாளில் --- நாம் 
   புவி சிறக்க உறுதி மொழி ஏற்போம்.
  புகழோடு, பெயரோடு வாழ  --- நாம் 
  புதுமைகள் தினந்தோறும் படைப்போம்.

     விளைச்சல் பெருக ! வினைகள் நீங்க !! 
     மகிழ்ச்சி பொங்க !!! வெற்றி  தரும் 
     'ஜெய' புத்தாண்டே நீ வருக  வருகவே !!!!  


                                             சுபம்                                        
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments