Pages

ஞாயிறு, 3 ஜூலை, 2016

virudhu by sri sankaracharya swamigal

         



      ஸ்ரீ  ஜகத்குரு மாத இதழ் 
     
   4 ஆம் ஆண்டு தொடக்க விழா 

     ஸ்ரீ ஜகத்குரு ஆன்மீகத் தமிழ் மாத இதழ் 4ஆம் ஆண்டு தொடக்கவிழா 9-6-2016 மாலை சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ சங்கர மடத்தில் சிறப்பாக நடைபெற்றது. 
  
              ஸ்ரீ ஜகத்குரு ஆசிரியர் ஆர்.நாராயணன் வரவேற்புரை ஆற்றினார். 

           ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வருகை தந்து அருளாசியுரை வழங்கினர். இவ்விழாவில் எழுத்தாளர்கள் ஸ்ரீ ஆச்சாரிய ஸ்வாமிகளிடம் ஆசிபெறுதல், கும்மணம் ராஜசேகரன்  ( பா.ஜ.க. கேரள மாநிலத் தலைவர் ) அவர்களுக்கும் விஜய பாரதம் (தேசிய வார இதழ்) பத்திரிகைக்கும் விருது வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக பா.ஜ.க. தலைவர்கள் எச்.ராஜா,இல.கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். 
  
           இவ்விழாவில் எழுத்தாளர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். அவ்வகையில் எழுத்தாளர்களான எஸ்.வி.வரதராஜன், சாந்தா வரதராஜன் தம்பதியர் கௌரவிக்கப்பட்டு ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளிடம் ஆசி பெற்றனர்.சி.கனகராஜன் (ஸ்ரீ ஜகத்குரு இணை ஆசிரியர்) நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments