Pages

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

punnagai siragugal nool veliyeedu

                         


    'புன்னகை சிறகுகள், நூல் வெளியீடு '

      இலக்கிய சாரல் பதினெட்டாம் ஆண்டு தொடக்க விழா. 31-7-2016 அன்று ஞ்ஞாயிறு காலை சென்னை மயிலாப்பூரில் சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கவியரங்கம், நூல்கள் வெளியீடு, பரிசுகள் அளிப்பு ,விருதுகள் வழங்குதல் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அவ்வகையில் சமூக ஆர்வலர் திருமதி சாந்தா வரதராஜன் அவர்கள் எழுதிய 'புன்னகை சிறகுகள்' என்ற நூலை திருமதி ம.வான்மதி (ஆசிரியர் பாவையர் மலர்) வெளியிட திருமதி பாமா ரவி முதல் நூலை பெற்றுக்கொண்டார். நூல் ஆசிரியர் திருமதி சாந்தா வரதராஜன் ஏற்புரையாற்றினார். 

 இவ்விழாவில் திரு.கண்ணன் விக்ரமன் (நிர்வாக ஆசிரியர் இலக்கிய பீடம் ) , திரு. வைரபாரதி (திரைப்பட பாடலாசிரியர்) திரு. கன்னிக்கோவில் ராஜா (ஆசிரியர் . மின்மினி ஹைக்கூ ) உழவுக்கவிஞர் உமையவன் (தலைவர் இலக்கியச்சாரல் ) மற்றும் பல கவிஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். 

      கவிமாமணி  இளையவன் (நிறுவனர் இலக்கியச்சாரல் ) நிறைவுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments