POST A COMMENT
BOOK RELEASE லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஆகஸ்ட், 2012
சனி, 3 ஏப்ரல், 2010
BOOK RELEASE-3
சிவ பெருமானின் மகிமையும் சிவனடியார்களும்
முதல் பாகம்
சாந்தா வரதராஜன்
contact: varadshantha@yahoo.com
பாராட்டுரை
எஸ்.ரகுநாதன்
முதல் பாகம்
சாந்தா வரதராஜன்
contact: varadshantha@yahoo.com
பாராட்டுரை
எஸ்.ரகுநாதன்
மும்மூர்த்திகளில் சிறந்தவர் சிவபெருமான் ஆவார். சிவனும் சக்தியும் சேர்ந்தே இருந்து இப்பூவுலகினை தினந்தோறும் ஆட்டுவிக்கின்றார்கள். இதனால்தான் சர்வ சதா காலமும் சிவனை நினைப்போர் "சிவாய நம என சிந்திருந்தால் அபாயம் ஒரு நாளும் இல்லை" என்று கூறுகின்றார்கள். நாள்தோறும் காலையும்,மாலையும் நாம் சிவமந்திரம் எனப்படுகின்ற நமசிவாய,நமசிவாய, ஒம்நமசிவாயதினை ஜெபித்து வந்தால் உடலும் மனமும் ஆரோக்கியம் பெறுதலோடு இன்முகம் கொண்டு துன்பம் இல்லாமல் நாம் வாழ்வதற்குரிய பாதை வகுக்குப்படும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு "சிவப்ருமானின் மகிமையும் சிவனடியார்களும்" என்ற இந்த அற்புத நூலினை ஆன்மீக உலகிற்கு ஆக்கித்தந்துள்ளார் திருமதி.சாந்தா வரதராஜன் அவர்கள். இந்த நூலினைப் படித்தும் பிழைதிருத்தம் செய்தும் தந்த பெருமையை எனக்கு அருளியது மிகுந்த மகிழிசிக்குரியதாகும்.
சைவ சமயம் குறித்த பல்வேறு செய்திகளும், ஈசன் எனப்படுகின்ற சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களின் மகிமையையும்,சிறந்த முறையில் இந்த நூலில் தொகுத்துத் தந்துள்ளார் இந்நூலாசிரியர்.
சிவபெருமான் படைத்த திருவிளையாடல்கள் குறித்தும் மிகவும் சிறப்புற கூறியுள்ளார். பஞ்சபூதத் தலங்கள்,அட்டவீரட்டதலங்கள்,ஜோதிர்லிங்கத்தலங்கள் முதலிய பல்வேறு சிவத் தலங்கள் குறித்து எடுத்துக் கூறியிருப்பது இந்நூலுக்கு அணி சேர்க்கிறது.
5 என்கிற எண்ணில் அடங்கக்கூடியதான சிவனைப் பற்றியதான பல செய்திகள் இதிலே சொல்லியுள்ளார். பிரதோஷ மகிமை குறித்தும், நந்திகேஸ்வரரின் மகிமை குறித்தும் இதிலே சிறப்பாக சொல்லியிருப்பது போற்றற்குரியதாகும்.
சிவன் கோயில்கள் எத்தகு ஆகமப்படிக்கு அமைந்துள்ளது என்று சொல்லப்படுகின்ற செய்திகள் புதியதாக இருக்கின்றது.
தேவாரம், திருவாசகப் பாடல்களினை ஆங்காங்கே சொல்லியிருப்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக உள்ளது.
குறிப்பாகத் திருவண்ணாமலையார் குறித்து மிகவும் சிறப்புடன் கூறியுள்ளார்.
கங்கை நதியின் மகிமையும் இதில் திறம்பட எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
சிவபக்தர்களுக்குரிய விரதங்களும் அவற்றைக் கடைபிடிக்கும் முறைமைகளும் இதில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
"அன்பே சிவம்" என்கின்ற ததுவக் கருத்து தம்மை மிகவும் தெளிவுபட இதிலே வார்த்திருப்பது சுவைபட உள்ளது.
அத்தோடு விபூதியின் மகிமையும்,விபூதி அணிதலால் ஏற்படும் நன்மையும், சிறப்புற இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.
பல்வேறு நூல்கள் இந்த நூலினை சமைப்பதற்கு உரிய வடிகாலாக அமைந்துள்ளது பாராட்டுதற்குரியதாகும். சிவபெருமான் மீது பக்தி கொண்டோருக்கு இந்த நூல் வழிகாட்டியாக விளங்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
இது முதல் பாகந்தான். இன்னும் இரண்டாம் பாகத்தில் பல செய்திகளை சொல்லியிருப்பது தெளிவுறத் தெரிகின்றது.
ஆன்ம நேயமும், ஆன்மீக பக்தியும் கொண்டு விளங்கும் இந்நூலாசிரியர் திருமதி. சாந்தா வரதராஜன் அவர்கள் தமிழ்போல் வாழ்க என்று வாழ்த்தி இந்நூலினை வாங்கிப் படியுங்கள் என்று பாராட்டுரை வழங்குகின்றேன்.
தங்கள் அன்புள்ள,
எஸ்.இரகுநாதன்
HAVE A NICE DAY

சனி, 27 மார்ச், 2010
BOOK RELEASE-2
சிவ பெருமானின் மகிமையும் சிவனடியார்களும்
முதல் பாகம்
சாந்தா வரதராஜன்
contact: varadhsantha@yahoo.com
முன்னுரை
ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருன்ஜோதியானவன் சிவபெருமான்.பஞ்ச பூதங்களில் நீக்கமற நிறைந்த மாமணி ஜோதியான். சிவ சக்தி சொரூபன். "சிவபெருமானின் மகிமையும்,சிவனடியார்களும்" என்ற இந்த நூல் இரண்டு பாகங்களை கொண்டதாகும்.இதன் முதல் பாகத்தில் ஈசனின் மகிமையையும், அவர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களைப் பற்றியும் எழுதியுள்ளேன். இரண்டாம் பாகத்தில் சிவனடியார்களின் பக்தியையும், பெருமையையும், ஈசன் அவர்களுக்கு அளித்த 'சோதனைகளை' அவர்கள் பக்தியினால் சாதனையாக்கிக்காட்டுவதையும், சமயக்குரவர் நால்வரின் வாழ்க்கைக்குறிப்பும், அவர்கள் பாடிய பதிகங்களைப் பற்றியும் எழ்தியுள்ளேன். இறைவனைப் பற்றிய புராணங்கள், வரலாறுகள் கடலினும் பெரியவை. நான் இந்நூலில் கூறியுள்ளது சிறு துளியே ஆகும்.
பல புராணங்கள்,புராணக்கதைகள், ஆலயங்களின் வரலாறு,பெருமை, மற்றும் பல செய்திகளை கேட்டு, அறிந்து, படித்து,உணர்ந்து அனுபவித்த பல சீரிய உயர்ந்த கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளேன். மேலும், சிவபெருமானின் அருவநிலை, உருவநிலை, இலிங்க தத்துவம், சிவ பூசையின் பலன்கள் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன.நம் நாட்டிலுள்ள சிவாலயங்கள் கணக்கிலடங்கா. அதில் சில சிவாலயங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளேன். சிவசக்தி தத்துவம்,
சிவாலயங்கள் எழுப்புவதால் உண்டாகும் பலன்கள்,பஞ்ச பூதத் தலங்கள் ஜோதிர் லிங்கத் தலங்கள் போன்றவைகளைப்பட்ரியா விவரங்கள், திருத்தலங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கும் இறைவன், இறைவியின் மகிமை, ஆலயத்திற்கு செல்லும் வழி, இறை வழிபாட்டின் பலன்கள் போன்ற பயனுள்ள பல செய்திகளை இதிலே தொகுத்து வழங்கியுள்ளேன். மேலும், சிவபெருமானின் முக்கிய பண்டிகைகள், விரதங்கள் என்ற கட்டுரையில் இவைகள் ஏன்? எப்படி? எதற்காக? கொண்டாடுகிறோம் என்ற விபரங்களும் அதனை விளக்கும் புராண கதைகளையும் மற்றும் பலன்களும் விவரிக்கப்பட்டுள்ளன.
உள்ளமும், உடலும் நலமுற அமைந்து ஈசனைப் பற்றி நான் இந்நூலை எழுதியது இறைவன் அருளே. எல்லாம் அவன் செயல். அவன் அருள். "எழுத்தும் அவனே. எழுதுபவனும் அவனே." எனது எழுத்துப்பணியை பாராட்டும் வகையில் எனக்கு சில விருதுகளும்,சான்றிதழ்களும் அளிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஊக்கம், உற்சாகம் மற்றும் புத்துணர்வுடன் எனது எழுத்துப்பணியை தொடர்ந்து செயலாற்ற விரும்புகிறேன். எனக்கு இந்நூலை எழுதி வெளியிட எல்லா வகைகளிலும் இந்நூல் வெளிவர உறுதுணையாக இருந்து உதவி புரிந்த
எனது கணவர் எஸ்.வி.வரதராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்நூலுக்கு அணிந்துரை எழுதி என்னை பாராட்டி கௌரவித்துள்ள கவிஞ்ஞர் எஸ்.ரகுநாதன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நல்ல முறையில் கணினி அச்சில் வார்த்து தந்த திரு. கணேஷ்பாபுவுக்கும், இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த கவிக்குயில் அச்சக உரிமையாளர் திரு. தேசிகவிநாயகம் அவர்களுக்கும் எனது நன்றி.
எழுதுவதற்கான சிந்தனையையும், செயலாற்றும் திறனையும் அளித்து எனக்கு அருள் புரிந்த எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் இந்நூலை சமர்பிக்கிறேன்.
- சாந்தா வரதராஜன்
HAVE A NICE DAY !!

திங்கள், 8 மார்ச், 2010
BOOK RELEASE-1
மார்ச் 8 உலக மகளிர் தினம்.
பெண்கள் சிறப்பிக்கப்படும் தினம்.
நூல் வெளியீடு
உரத்த சிந்தனை அமைப்பின் "இலக்கிய சங்கமம்"
நிகழ்ச்சி. 27 - 02 - 2010 சனிக்கிழமை. மாலை 6 அளவில். தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடம்
(சிற்றரங்கு) LLA அண்ணா சாலை சென்னை -2
ல் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமதி
சாந்தா வரதராஜன் அவர்கள் எழதிய
"சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்"
(இரண்டு பாகங்கள்) என்ற நூல் வெளியிடப்பட்டது.
நூல் முதல் பிரதி பெற்றவர்:
Dr.V.R.சந்திர மோகன்
செயலாளர்-அனைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கம்- தி.நகர் கிளை
ஏற்புரை:திருமதி.சாந்தா வரதராஜன்
email: "s.v.varadharajan,salem"
varadshantha@yahoo.com

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)