OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

MANAKKULA VINAYAGAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
MANAKKULA VINAYAGAR லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 ஜூலை, 2011

MANAKKULA VINAYAGAR,-6

HAVE A NICE DAY

 அருள் மிகு மணக்குள விநாயகர் 
                              அருள்மிகு மணக்குள விநாயகர்-6
                                                                                     புதுச்சேரி 
                                                               திருமதி சாந்தா வரதராஜன்

           இங்கு படிகலிங்கம் இருப்பதால் பிரதோஷ காலப் பூசையும் நடைபெறும். மணக்குள விநாயகர் கோயில் பிரம்மோற்சவம் (ஆண்டு பெருவிழா) பதினெட்டு நாள் விழாவாக, கொடியேற்றத்துடன் நிகழ்தப்பெருகிறது. காலை வேளையில் ஒவ்வொரு நாளும் பல்லக்கிலேலேயே உலா நாயகர் பவனிவருகிறார். முதல்  நாள் இரவில் சூரிய பிரபையிலும், இரண்டாம் நாள் காலையில் சந்திர பிரபயிலும் மாலை வெள்ளி மயில் மீதும் வீதியுலா வருவார். மூன்றாம் நாள் வெள்ளி அதிகார நந்தி உலா, ஐந்தாம் நாள் மாலை 4  மணியளவில் திருக்கல்யாணம். இரவு தங்க ரதம், ஆறாவது நாள் இரவு கற்பகவ்ரிட்சம் , ஏழாவது நாள் நாள் இரவு பெருச்சாளி வாகனம் , எட்டாம் நாள் இரவு குதிரை வாகனத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருள்வார்.ஒன்பதாம் நாள் திருத்தேர் பவனிவரும்.பத்தாம் நாள் நிறுத்த கணபதி காலையில் உலா வருவார். அன்று இரவு மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்த வாரி நடைபெறும். அன்றைய தினம் பெளர்ணமியாகும். பதினொன்றாம் நாள், மின்விளக்குகளால் அணி செய்யப்பட்ட தேரில் விநாயகர் பவனி வருவார். 12ம் நாள் இரவு மலர் பல்லக்கு பவனி வரும். 13ம் நாளிலிருந்து 17ம் நாள் வரை விநாயகர் சிறப்பு வீதி உலா நடை பெறும். 18ம் நாள் உற்சவ சாந்தியும் 108 சங்கு அபிஷேகமும் நடைபெறும். இக்கோயிலில் 'வாதுலாகமம்' பின்பற்றப்படுகிறது..

    இவ்வாறு முறைப்படி, சாஸ்திரப்படியும், பக்தி சிரத்தையுடனும் விழா வழிபாடு நடப்பது பெருமைக்குரிய செய்தியாகும்.பக்தர்கள் மணக்குள விநாயகப் பெருமானை மனம் உருக சிந்தை குளிர வழிபாடு செய்தால் அவர் திருவருள் பெற்று வளமாக வாழ்வர் என்பது உறுதி. முதற்கடவுளான கணநாதனின் முன், பக்தியுடன் நின்று வணங்குபவர்க்கு எத்தகைய துன்பங்களும் விலகி ஓடிவிடும் என்பது அனுபவப்பூர்வமாக அறிந்த உண்மை. இம்மை நலனையும், மறுமைப் பெருவாழ்வையும் ஒருங்கே அளிக்கும் இறைவன் அருள்மிகு "மணக்குள விநாயகர்" ஆவர் என்பது திண்ணம்.

சுபம் 

       








    













ஞாயிறு, 19 ஜூன், 2011

MANAKKULA VINAYAGAR,-5

HAVE A NICE DAY

அருள்மிகு மணக்குள விநாயகர்                     
                     

அருள்மிகு மணக்குள விநாயகர்-5
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்


                   பொன்போன்ற நிறமுடைய மேனியுடன் கற்பக விருட்சத்தின் அடியில் அமர்ந்து அருள் புரிகின்றார்.சித்தி,புத்தி (பிரமன் மகன்கள்) என்னும் இரு  தேவியரைக் கொண்டவர். "சித்தி  புத்தி'விநாயகர்'என்னும் பெயருடன் தமிழ்நாட்டில் அருள் பாலிக்கிறா.இவருடைய நான்கு கரங்களில் அங்குசம்,பாசம்,தந்தம்,சங்கு ஆகியவை உள்ளன.தும்பிக்கையில் கலசம் உடையதும்,மடியில் அம்மன் அமர்ந்தவண்ணம் உள்ளதும் ஆகிய திருமேநியினை இக்கோயிலில் காணலாம். தேவியோடு கூடிய கணபதியை வல்லப கணபதி என்பர்.வடநாட்டினர் இலக்குமி  கணபதி என்று வணங்குகின்றனர். இங்கு கணபதி,காத்தல் தொழில் செய்வதால் திருமாலாகவே பாவிக்கப்படுகிறார். கணபதிக்குத் திருமாலுக்குரிய சங்கு சக்கரங்கள் ஆயுதங்களாக உள்ளன.அதனால் அவர் மடியில் உள்ள தேவி இலக்குமியகக் கருதப்படுகிறார்.

     மணக்குள விநாயகர்  கோயிலை ஒட்டி வடப்புரத்தில் பெரிய திருமண மண்டபம் அமைந்துள்ளது.அவ்விடம் விழாக்காலங்களில் உர்ச்சவமூர்த்திக்குத் திருமஞ்சனம்,அலங்காரம் முதலியன செய்வதற்கும் மற்ற நாட்களில் வாகனங்கள் வைத்துக் காப்பதற்கும் பயன்படுகிறது.இக்கோயிலுக்குரிய வாகனம் களாக உள்ளவை சூரிய பிரபை ,சந்திர பிரபை,மயில் வாகனம்,அதிகார நந்தி, வெள்ளி யானை வாகனம்,கற்பக விருட்சம் ,வெள்ளி பெருச்சாளி ஆகியவை.இவற்றுடன் வெள்ளித் தேர் ஒன்றும் தங்க ரதம் (மரத்தால் செய்து தங்க ரேக் ஒட்டப்பட்டது) ஒன்றும் மரத்தேர் ஒன்றும் உள்ளன.

     பொதுவாக பூசைகள்,நித்திய பூசைகள்,நைமித்திய பூசைகள்,காமிய பூசைகள் என்றும் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. மணக்குள விநாயகர் கோயிலில் நித்திய பூசைகள் நான்கு காலப் பூசைகள் மட்டுமே நடைபெறுகின்றன.அவை காலை சந்திப் பூசை,உச்சிக்கால பூசை,சாயங்கால சந்தி, அர்த்த சாமம் என்பன. இவை முறையே,காலை  6.30 மணி, 11.00 மணி.மாலை,5  . 00  , இரவு 9.00 மணி அளவில் நடைபெறும்.இதனையடுத்துச் சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி ,மாசி மகம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பானவையாகும். 

தொடரும் 

    














   

















சனி, 11 ஜூன், 2011

MANAKKULA VINAYAGAR,-4

HAVE A NICE DAY


 மணக்குள விநாயகர் 

அருள்மிகு மணக்குள விநாயகர்-4
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்




      புதுவை மணக்குள விநாயகர் கோயில் வலப்புறச் சுவரில் கணபதியின் பல்வேறு வடிவங்கள் 'சுதை' உருவில் காணப்படுகின்றன.அவற்றுள் சில வடிவங்கள் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாது. அவை பின்வருமாறு : பார்வதியின் இடுப்பில் புத்திர கணபதி, ஆறுமுக கணபதி,மயில் வாகன கணபதி,விட்டுணுராச கணபதி, யோக கணபதி, துண்டி கணபதி,திருமணக்கோல சித்தி, புத்தி கணபதி, பார்வதி பூசை செய்யும் கணபதி, அதைப்போல சிவன் முருகன், நம்பியாண்டார் நம்பி, இராவணன் பூசை செய்யும் கணபதி, திரு உருவங்களும் உள்ளன. பிரகாரத்தில் தென்மேற்கு கோடியில் பால கணபதி கோயில் வெள்ளித்தகடு வேயப்பட்ட விமானத்துடன் காட்சியளிக்கிறது. இங்கு எழுந்தருளும் பால கணபதி நான்கு திருக்கரங்களையுடையவர். செங்கதிர் நிறத்துடன் குழந்தை திருமேனியுடையவர்.நான்கு கைகளில் மா, பலா,வாழை,கரும்பு இவற்றைத் தாங்கியவர்.இவரது துதிக்கையில் மோதகம் விளங்குகின்றது.


   இதேபோன்று வடமேற்குக் கோடியில் பால சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது.விமானத்தில் வெள்ளிதகடு வேயப்பட்டுள்ளது.''இளமுருகன் ' எனப்படும் இவர் ஒரு திருமுகமும், இரண்டு கைகளும் உடையவராய் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி, இடக்கையைத் தம் இடுப்பில் வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரது திருவடிகளில் இளமைக்குரிய கிண்கிணிச் சதங்கைகள் காணப்படுகின்றன.

   மேலும் சண்டிகேஸ்வரருக்கு சிறு கோயில் உள்ளது. மடப்பளியையடுது அலுவலக அறை உள்ளது. இதனைஅடுத்து உற்சவ மூர்த்திகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தில் சில கணபதி வடிவங்கள் காணப்படுகின்றன.அவற்றில் ஹரித்ரா கணபதி என்பவர் மஞ்சள் நிறமானவர்.நான்கு கைகளில் பாசம் ,அங்குசம் தந்தம்,மோதகம் இவற்றை தரித்திருப்பவர்.பக்தர்களுக்கு அபயமளிப்பவர் எனக் கூறப்படுகிறது.இவருடைய புருவம் வில்போல அமைந்திருப்பது சிறப்பு அம்சம்.நிறுத்த கணபதி அல்லது கூத்தாடும் கணபதி என்பவர் தனது கை விரல்களில் மோதிரம் அணிந்திருப்பவர்.ஆறு கரங்களையுடையவர்.பாசம்,அங்குசம்,அப்பம்,கோடரி,இவைகளைத் தரித்தவர்.

தொடரும்



    

         
http://www.amazon.com/Vinayagar-Agaval-Language-Tamil/dp/B000QLHTV6

















  















சனி, 21 மே, 2011

MANAKKULA VINAYAGAR-3

HAVE A NICE DAY


 அருள்மிகு மணக்குள விநாயகர்               

அருள்மிகு மணக்குள விநாயகர்-3
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்


       இனி கோயிலின் அமைப்பைப்பைபற்றிச் சுருக்கமாக நோக்குவோம். புதுவை கடற்கரையை ஒட்டி அரவிந்தர் ஆஸ்ரமம் வீதியில் கிழக்கு நோக்கிய சன்னிதியாய் வெள்ளை நகரின் நடு நாயகமாய் அமைந்திருப்பது "மணக்குள விநாயகர்" திருக்கோயிலாகும்.

     மணக்குள விநாயகர் திருக்கோயில், வெளிமண்டபம் இராசகோபுரம்,கொடிக்கம்பம்,முன்மண்டபம்,
கருவறை,சுற்றுச்சாலை,சுற்று  கோயில்கள்,மடப்பள்ளி,அலுவலக அறை,உற்சவ மூர்த்திக்கு மணி மண்டபம்,திருமண மண்டபம் ஆகியவைகளுடன் அமைந்துள்ளது. கருவறையில் அமர் நிலையிலுள்ள மூலனாயகராகிய விநாயகரின் நான்கு திருக்கரங்களின் மேல் இரு கரங்களில் வலக்கையில் அங்குசமும்,இடக்கையில் பாசமும் உள்ளன. கீழ் இடக்கை வரதான அமைப்பிலும் உள்ளன. கருவறையில் மூல விநாயகப் பெருமானுடன் மற்றும் ஒரு விநாயகர் திருஉருவம் சிறிய அமைப்பில் காணப்படுகிறது. மூலவருக்கு அருகில் வடதிசையில் அமைந்துள்ள இந்தத் திருமேனி தொடக்கக் கால முதற்கொண்டே எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்பது உண்மையானதாகும்.

      இதற்கடுதுத் தென்பால் இரட்டை நாகத் திருமேனி அமைந்துள்ளது. பாம்பு வழிபாட்டுடன் விநாயகர் விநாயகர் வழிபாடும் எளிதாக எங்கும் பரவும் எனக்கருதி இரட்டை நாகத் திருமேனியை அன்றே மனற்குளத்தின் கரையில் அமைத்து வஹிபட்டிருதல் வேண்டும். இரண்டு நாகங்கள் பின்னிப்பிணைந்து ஒன்றையொன்று முதமிடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளன.இந்த உருவத்தின் நடுவில் இலிங்கம் இடம்பெற்றுள்ளது.அரசும் வேம்பும் இணைந்த அது சிவமும் சக்தியும் இணைந்திருப்பதாகக் கருதப்பட்டது.இவ்விடத்தில் குளம் இருந்தது.இதன் காரணமாக இன்றும் விநாயகப்பெருமான் அருகில் வற்றாது நீர் சுரக்கும் ஒரு குழியாகக் காட்சி தருகிறது.


தொடரும்   

    












   













ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

MANAKKULA VINAYAGAR-2

HAVE A NICE DAY

 அருள் மிகு மணக்குள விநாயகர் 

அருள்மிகு மணக்குள விநாயகர்-2 
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்


    இந்தத் திருக்கோயில் கடற்கரையைச் சார்ந்துள்ளதால் இது காணபத்திய ஆகமப்படி அமைந்ததாகும்.இதற்கான காரணங்கள்,சாத்திரங்கள் வாயிலாகக் கூறப்படுகிறது. அதாவது விநாயகருக்கு பதினாறு மூர்த்தங்கள் உண்டு.அவற்றில் பதினான்காவது மூர்தமானது புவநேசர் என்பதாகும்.அது சமுதிரக் கரையில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும் என்று சாத்திரங்களில் விதி உள்ளது. எனவே,இத்திருத்தலம் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட தலமாகும். இந்த ஆலயமும் விநாயகரும் மிகப் பழமையானவை என்பதற்கு சரித்திரங்கள் சான்றாக உள்ளன.புதுச்சேரியில் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்,பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் ஆட்சி செய்த காலத்தில் நடந்த முற்றுகைகளையும்,போற்குமுரல்களையும், இத்தலம் சந்தித்திருக்கிறது. பகைவரிடமிருந்து மக்களைக் காப்பாற்றிய புதுவைக்கு விடுதலை வாங்கித் தந்தவர் முதற்கடவுள் விநாயகப் பெருமான் ஆவார். 

      இறைவனின் பெருமையையும், சக்தியையும் அக்காலத்தில் புதுவையில் தங்கியிருந்த பரங்கியர்கள் உணரச் செய்ய ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது. பரங்கியர்கள் தங்கள் பகுதியில் நமது ஆனைமுகப் பெருமான் தங்களுக்கு இடையுறாக இருப்பதாக எண்ணி எத்தனை எதிர்ப்புகளையும் தாங்கிநின்ற விநாயகப் பெருமானை இரவோடு இரவாகத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் எரிந்து விட்டு, அப்பாடா! இன்றோடு பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று எண்ணி தங்கள் இல்லத்திற்குச் சென்றனர். மறுநாள் காலை அவர்கள் கண்ட ஆச்சரியம்! அவர்கள் கண்களையே நம்ப முடியவில்லை! காலையில் பார்த்தால் விநாயகப் பெருமான் தான் எப்போதும் இருந்த இடத்திலேயே தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்தார். இந்த வரலாற்றுக் கதை இன்றும் இத்தலத்தில் பேசப்பட்டு வருகிறது.

தொடரும் 

   








   









புதன், 1 டிசம்பர், 2010

MANAKKULA VINAYAGAR-2

HAVE A NICE DAY


        மணக்குள விநாயகர்     
    அருள்மிகு மணக்குள விநாயகர் 
              புதுச்சேரி 
   திருமதி சாந்தா வரதராஜன் 

   
    
       விநாயகப் பெருமான் ஐந்தொழிலையும் ஆற்ற வல்லவர். எழுத்தாணி பிடித்த  கை படைப்பையும்,மோதகம் ஏந்திய கை காத்தலையும்,அங்குசம் கொண்ட கை மறைத்தலையும், அமுதகலசம் ஏந்தி துதிக்கை அருள்வதையும் விளக்குகிறது.


   இனி,அருள்மிகு மணக்குள விநாயகர் புராணம் வரலாறு,திருக்கோயில் தொன்மை,சிறப்பு,திருக்கோயில் அமைப்பு,வழிபாடு விழாக்கள் ஆகியவற்றை சற்று நோக்குவோம்.புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் தங்களுக்காக ஒரு கோட்டையை கட்டிக்கொண்டனர்.அக்கொட்டைக்குப் பின்புறம் அமைந்திருந்த திருக்கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயிலாகும். இக்கோயில் இருக்கும் இடத்திற்குச் சமீபத்தில் மேலண்டைப் பகுதியில் ஒருகுளம் இருந்ததாகவும்,அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில்  மணல் அதிகமாக இருந்ததாகவும், அதன் காரணமாக அக்குளத்திற்கு "மணற்குளம்" என்று   பெயர் வந்ததாகவும் சான்றுகளுடன் கூருவர்.இந்த மனக்குளத்தின் கீழ்கரையில்தான் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இதனால் இந்த ஆலயத்திற்கு 'மணற்குள விநாயகர் ஆலயம்' என்று பெயர் ஏற்பட்டது.


  தற்சமயம் இந்த ஆலயத்தின் அருகில் குளம் ஏதும் இல்லை. காலப்போக்கில் மறைந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமாள் மனர்குளதுப் பிள்ளையார் என்றும், மனர்குலத் தாங்கரைப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுவதால், இங்கு 'மணற்குள விநாயகர்' என்பதே இவ்வினாயகப் பெருமான் பெயர் என்பது சந்தேகமின்றி விளங்குகின்றது.இன்றைக்கும் கருவறையின் கண்உள்ள விநாயகப் பெருமான் படிமத்துக் கருகில் நீர் சுரந்து வரும் இயல்பைக் காணலாம்.புவனேச விநாயகர் என்ற பெயர் பிற்காலத்தில் பெயர் மருவி 'மணக்குள விநாயகர்' என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.


தொடரும் 


  

                       

   














    





















சனி, 9 அக்டோபர், 2010

MANAKKULA VINAYAGAR-1

HAVE A NICE DAY

                மணக்குள விநாயகர் 
     
     அருள்மிகு மணக்குள விநாயகர் 
              புதுச்சேரி 
   திருமதி சாந்தா வரதராஜன் 

   பொதுவாகத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையில் 
 கோயில்களோடு கொண்டுள்ள தொடர்புகளால், தங்கள் சமய வாழக்கை, கலாசாரம், பண்பாடு மற்றும் பக்திநெறிகள் தனித்தன்மையான வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை உலகுக்கு எட்டுதுக்காட்டுகின்றனர். கோயில்களுக்குப் புராண மெருகேற்றி இறைதன்மை மிளிரவிட்ட பெருமை தலபுராணங்களை சாரும். வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்ந்த சென்னியும் அளித்த இறைவனை நமது (பணிகள்) கடமைகளைச் செய்யத் தொடங்கினால் அவர் செவ்வனே அப்பணியை முடித்து வைப்பார். 
    "பிள்ளையாரைத் தொழுது நாம் 
 பெருஞ் செயல்கள் தொடங்கினால் 
 உள்ளாரச் செய லெல்லாம் 
 உயர்வாய் முடியும்" 
என்பது பக்தர்களின் நம்பிக்கை. புவனேச விநாயக பெருமாள், புண்ணிய பூமியாம் புதுச்சேரியில் கடற்கரை அருகில் மணக்குள விநாயகர்" என்னும் திருப்பெயர்கொண்டு எழுந்தருளியிருக்கிறார். புதுச்சேரி என்ற பெயரைக் கேட்டவுடனே மக்களுக்கு நினைவிற்கு வருவது 'மணக்குள விநாயகர்' திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலம். எல்லாம் வல்ல பரம்பொருளை வழிபடும் மார்கங்களை 'ஆறு சமயங்கள்' என்பர். "ஷண்மதங்கள்" என வட மொழியில் கூறப்படுகிறது. முதல் கடவுளாக விநாயகப் பெருமானை வழிபடுவது  "காணபத்யம்" எனப்படும். கணபதியை வழிபடும் மதம் "காணபத்யம்".


தொடரும்