OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

murugan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
murugan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 மார்ச், 2011

perunai- subbiramania swami thirukkovil-1

HAVE A NICE DAY

 பெருணை
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
கேரளா 



    
               பங்குனி - உத்திரம் 
         saturday, 19th march 2011 
     

                  பெருனை- சுப்பிரமணிய சுவாமி              திருக்கோவில் -1     
      
              திருமதி சாந்தா வரதராஜன்



    நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அடக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் இறைவன் யுகந்தோறும் திருஅவதாரம் செய்கிறான். இராம, கிருஷ்ண அவதாரங்கள் போன்று  முருகப்பெருமானும், சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதாரம் எடுத்து அமரர்களை காத்தார் என்பது புராண வரலாறு.

     பெருணை என்ற திருத்தலம் கேரள மாநிலம் சந்கனாச் சேரியிலிருந்து திருவல்லா செல்லும் பாதையில்  எம்.சி.ரோடில் அமைந்திருக்கிறது. அங்குள்ள புகழ்பெற்ற கோவில் பெருணை சுப்பிரமணிய சுவாமி கோயில். தாரகாசுரனை சம்ஹாரம் செய்த பின் வெற்றி புன்னகையுடன் சுப்பிரமணியர் வந்து நின்ற தலம் இது.இனி புராணகதை, கோயில் அமைப்பு, அதன் சிறப்பு முதலியன நோக்குவோம். 

     சூரபத்மனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் சம்ஹாரம் செய்து, தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து, தர்மத்தை நிலை நாட்டி வெற்றிபெற்று வரும்படி ஈசன், இளைய மகன் முருகனிடம் ஆணையிட்டார். தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்று போருக்கு புறப்பட்டார் முருகப் பெருமான். செல்லும் முன் சிவபெருமான் பதினொரு உத்திரர்களை பதினொரு படைக்கலங்களாக மாற்றி கந்தனிடம் கொடுத்தார்.                                               

தொடரும் 

   
















   

சனி, 30 ஜனவரி, 2010

PAZHAMUDHIRSOLAI-2


உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- பழமுதிர்சோலை-2                
திருமதி சாந்தா வரதராஜன்  

   இதற்கு போகும் வழியில் முன்பு வேல் பொறித்த சிலை ஒன்றை மக்கள் வழிபட்டு வந்தனர். அதுவே பழமுதிர்சோலை மலையாக வணங்கினர்.இப்பொழுது ஒரு முருகன் கோயிலாக எழுந்திருக்கிறது. இங்கே முருகன் சந்நிதி முன்பு இருந்ததென்பதற்குத் திருப்புகழ் சான்று தருகிறது.     
  "ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை 
          ஆறமர வந்தலம்பு துறை சேர..."

  "சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற 
  சோலைமலை வந்த கந்த பெருமாளே..."  

என்று நூபுர கங்கையும் சோலை மலையும் இணைத்து  முருகனை பாடுகிறார். சரவணப் பொய்கை இருந்ததென்று தெரிவதனால் முருகனுடைய திருக்கோயிலும் இருந்திருக்கவேண்டும்.

  "மாமனாகிய அழகனையும் மருமகனாகிய அழகனையும் தரிசித்துக் கொண்டு,
 ஆரும் இணையில் அழகா, முருகாபைத் 
 தாரணியும் மார்பா, தணி முதல்வா - காரணிந்து
 மேயதிருச் சோலைமளையுரையும் வித்தகநின்
 தூயமலர்ப்பாதம் துணை"

 என்று போற்றுவோம்.

  இனி ஆறு படை வீடுகளை தவிர தமிழ் நாட்டில் உள்ள முருகப்பெருமானின் மற்ற முக்கியமான ஸ்தலங்களை காண்போம்.

தொடரும் 

                  

HAVE A NICE DAY

சனி, 23 ஜனவரி, 2010

THIRUTHANI-4






உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- திருத்தணி-4
திருமதி சாந்தா வரதராஜன்   


  மேலும் 
 "ஐயனே நினையன்றிஎங்கணும்
 பொய்யநேர் கொறா புகலிலாமையால்   
வெய்யனே னென வெறுத்து விட்டிடேல்     
மெய்யனே திருத்தணிகை வேலனே"


என்று இராமலிங்க அடிகள் பாடியுள்ளார். மாதத்தில் கிருத்திகை சிறந்த திருநாள், அடிக்கிருத்திகை,கார்திகைக் கிருத்திகை, மாசி கிருத்திகை விசேஷமாக கொண்டாடபடு கின்றன.இங்கு பக்தர் பற்பல காவடி எடுப்பது வழக்கம். முக்கியமாக புஷ்ப
காவடி எடுப்பது. அப்பொழுது சரவணப் பொய்கையில் தெப்பத் திருவிழா நடைபெறும்.சித்திரையில் தெய்வயானையுடனும், மாசியில் வள்ளியம்மையுடனும் முருகப் பெருமாளுக்கு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.     


     6  பழமுதிர்சோலை 
  இது முருகப் பெருமானின் ஆராம்படை வீடாகும். திருமுருகாற்றுப்படை, "இழுமென இழி தரும் அருவிப் பழமுதிர்சோலை 
மலை கிழவோனே" என்று கூறுகிறது.
இப்பொழுது அழகர் மலை என்று வழங்கும் இடமே இரண்டு அழகர்களுக்கு உரிய தலமாக விளங்குகிறது. ஓர் அழகர் கள்ளழகர் என்று சொல்லும் சுந்தர ராஜ பெருமாள், மற்றும் ஒருவன் "என்றும் 
இளையாய் அழகியாய்" என்று போற்றும் முருகன். மதுரைக்கு வடக்கே ஏறத்தாழப் பன்னிரண்டு மைலில் இருக்கிறது. "அழகர் கோயில்" இந்தக் கோயிலில் அடிவாரத்தில் இருக்கிறது. பச்சைப் பசேலேன்ரும் காட்சிகளுடன் மலையும் அழகாகவே இருக்கிறது. சோலை மலை, திருமாலிருன்ஜோலைமலை, திருமாலிருன்குன்ரம், என்றும் இந்த மலைக்கு மேல் இரண்டு மைல் தூரத்தில் சிலம்பாறு இருக்கிறது.


தொடரும் 


           


சனி, 16 ஜனவரி, 2010

THIRUTHANI-3







உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- திருத்தணி-3
திருமதி சாந்தா வரதராஜன்   

 இரண்டாவது உட்ப்ராகாரத்தில் வந்து வலம் வரும் போது தெற்குப் பிரகாரத்தில் காமாட்சி ஏகாம்பரநாதர் சன்னதியும்,மேற்கு பிரகாரத்தில் ஆறுமுக சுவாமி சந்நிதியும், வடக்கு பிரகாரத்தில் குமரேலிங்கேர் சந்நிதியும், வடகிழக்கு மூலையில் ருத்ராட்ச விமானத்தில் உற்சவ மூர்த்தியும் கிழக்குப் பிரகாரத்தின் வடபால் ஆறுமுக நயினார் உற்சவ மூர்த்தியும், ஆபத்சகாய விநாயகர் சந்நிதியும், நவவீரர்கள், சூரியர் இவர்கள் சந்நிதியும் இருக்கின்றன.

  மூன்றாவது உட்ப்ரகாரம் செல்ல பஞ்சாட்சரப்படிகள் என்று ஐந்து படிகள் ஏறிப் போக வேண்டும். உள்ளே நுழைந்ததும் முருகப் பெருமான் திருக்கோலக் காட்சியைக் காணலாம். குமரக் கடவுளுக்குரிய பதினாறு வகை உருவங்களில் ஞ்யான சக்திதரர் என்றும் திருஉருவமே திருத்தணியில் இருப்பது. வலது திருக்கரத்தில் ஞான சக்தியாகிய வேலும், இடது திருக்கரம் தொடையிலும் அமைந்துள்ளன. விஷ்ணு ஆலயங்களில் சடகோபம் சாதிப்பது போல இந்த சந்நிதியிலும் முறுகர்திருவடி வணங்குவோர் தலையில் வைக்கப்படுகிறது. திருநீறு , சந்தனம் இவைகளும் வழங்கப்படுகின்றன. இக்கோயிலில் உள்ள சந்தனக்கல் பலநூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் பயன்பட்டும் தேய்வுபடாமல் ஜோதி வீசுகின்ற அணுக்களுடன் காணப்படுகிறது. இதில் அரைக்கப்பட்ட சந்தனத்தை உட்கொண்டால் சகல நோய்களும் தீரும் என்பர். தணிகை பெருமானை வணங்கிய பின்னர், வடக்கே தேவயானை சந்நிதியும், தெற்கே வள்ளியம்மை சந்நிதியும் தரிசிக்க வேண்டும்.
   இங்கு விஷ்ணு தீர்த்தம், பிரமசுனை, இந்திரா நீல சுனை, முதலிய தீர்த்தங்கள் இத் தலத்தில் உள்ளன. கந்தரலங்காரத்தில்,
 "கோடாதா வேதனுக்கு யான் செய்த 
     குற்றமென்  குன்றெறிந்த 
  தாடாளனே தென் தனிகைக்குமரா 
       நின் தண்டையந்தாள் 
  சூடாத சென்னியும் நாடாத கண்ணும் 
       தொழாத கையும் 
  பாடாத நாவும் எனக்கே தெரிந்து 
        படைத்தனனே" 

 என்று வரும் பாடல் மிக அழகு படைத்தது.


தொடரும் 
                   

சனி, 9 ஜனவரி, 2010

THIRUTHANI-2







உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்- திருத்தணி-2
திருமதி சாந்தா வரதராஜன்   

 இத்தலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கிறது. தொண்டை நாட்டில் உள்ளதாகத் தமிழில் நூல்கள் கூறுகின்றன. இதற்கு தணிகாசலம்,        
தணிகை, செருத்தணி,திருத்தணிகை,   
திருத்தணியல்,நீலகிரி,நீலோத்பலகிரி
உற்பலசலம்,குவளைசிகரி,கல்லாரகிரி,காவிமலை,செங்கல்வகிரி, கந்தகிரி,இந்திரநகரி,எனப்பல பெயர்கள் வழங்கப்படுகின்றன.முருகப் பெருமான் சூரருடனும்,வேடருடனும்,
போர் முடிந்து சிந்தணிந்து அமர்ந்த இடமாதலால் தணிகை என்றும், கடவுளை  தணிகாசலம் என்றும் கூருவர்.                                                                                                                                                      


 குமரக் கடவுள் மலை மீது கோயில் கொண்டுள்ளார். கோயில் மலை உச்சியில் கிழக்குநோக்கிஇருக்கிறது.    
வடக்கிலும் தெற்கிலும் பச்சரிசிமலை, பிண்ணாக்கு மலை என்ற இரண்டு மலை மீது செல்ல நன்றாக கட்டப்பட்ட படிக்கட்டுகள் இருக்கின்றன. மலையடிவாரத்தில் படிகள் தொடங்குமிடத்தில் திருக்குளம் அழகிய காட்சியளிக்கிறது. இதற்கு சரவணப்பொய்கை என்றும், குமார தீர்த்தம் என்றும், பெயர்கள் உண்டு. அடிவாரத்திலிருந்து மலையுசிலுள்ள கோயிலையடைய 365  படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். பாதி வழியில் பிரம சுனை, விநாயகர், பிரமலிங்கம் இவைகள் உள்ளன. உச்சியையடைந்ததும் தேர் வீதி தென்படுகிறது. இவ்வீதியை வலம் வந்தால் தெற்கு வாயிலுக்கு நேரே இந்திர நீல சுனை இருக்கிறது. மேற்கு வெளி பிரகாரத்தில் செங்கழுநீர் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. தேர் வீதி சுற்றி கிழக்கு வாயிலாக வலம் வந்தால் தென்மேற்கு மூலையில் உமாமகேஸ்வரர் கோயில் உள்ளது. கிழக்கு பிரகாசத்தில் விநாயகரும், ஐராவதமும் காணலாம்.


தொடரும் 
                                       

சனி, 2 ஜனவரி, 2010

THIRUVAVINANKUDI-2



உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-திருவாவினன்குடி   -Part-2
திருமதி சாந்தா வரதராஜன் 
சுவாமிமலை என்னும் பதி கும்பகோணத்திற்கு வடகரையில் இருக்கிறது. இதற்கு திருவேரகம், சுவாமி(மலை) ஏறக வெற்பு, சுந்தராசலம், குருகிரி, குருமலை, தாத்ரீகரி, போன்ற பெயர்கள் திருப்புகழ் பாடல்களிலும், மற்ற நூல்களிலும் காணப்படுகின்றன. பிரணவ உபதேசம் கேட்ட பின்பு சிவபெருமான் முருகனை நோக்கி நீ தான் எனக்கு சாமி; ஆதலால் இத்தலம் "சுவாமி மலை " என வழங்குக என்று அருளிய படியால் சுவாமி மலை என்ற பெயர் உண்டாயிற்று. ஏற்+அகம் = ஏரகம் என்றால் அழகும் எழுச்சியும் உள்ள இடம் என்று பொருள். முருகப் பெருமான் ஒரு செயகுன்றின் மேல் எழுந்தருளியுள்ளார். சுவாமிநாதன், குருநாதன், தகப்பன்சாமி, என்ற நாமங்கள் அவருக்கு வழங்கப்படுகின்றன. வச்சிரதீர்த்தம், சரவண தீர்த்தம் இவை கோயிலுக்குள் இருக்கிறன. குமாரதாரை என்பது காவிரியாற்றுத் தீர்த்தம். கீழ் வீதியில் நேத்திரபுஷ்கரிணி அல்லது சுவாமி புஷ்கரணி என்ற திருக்குளம் இருக்கிறது. இந்தத் தல விருட்சம் நெல்லி மரம். மலைப்படிக்கு கிழக்கு ஓரமாக இருக்கிறது. தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகைத் திங்கள், சித்திரை மாதம் பெரும் விழா நடைபெறும். இங்கு சுவாமிநாதனின் கம்பீரமான திருவுருததோற்றம் கண்கவர் வனப்பு உடையது. இளைன்ஞராகவும், மன்னராகவும், துறவியாகவும், அலங்கரிக்கப்பட்டு அளிக்கும் காட்சி கண்களை விட்டு அகலாது. இங்கு பக்தர்கள் பால் காவடி எடுப்பது வழக்கம்.


5 . திருத்தணி 
 குன்றுதோறாடல் என்பது குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வமாகிய முருகன் மலைமேல் கோயில் கொண்டுள்ள எல்லாத் தலங்களையும் குறிக்கும். "மலையிற் சிறந்தது திருத்தணி மலையே" என்பர் ஆன்றோர். கந்தபுராணத்தில் "வரையிடங்கிரிர் சிறந்த இத்தணிகைமால் வரையே" என்று கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் குன்றுதோராடலில் முதல் தலமாகக் கொள்ளப்படுவது திருத்தணியே ஆகும். ஐய்ந்தாம் படை வீடாக வழங்கப்படுகிறது.


தொடரும்
                              

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

THIRUVAVINANKUDI




உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-திருவாவினன்குடி   -Part-1
திருமதி சாந்தா வரதராஜன் 


"படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர்தான் முடிக்கின்றிலை முருகா வேன்கிலை முசியமாலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற் கொளவிம்மி விம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே" என்பது கந்தரலங்காரம் செய்யுள். இந்த ஸ்தலத்தின் சிறப்பினை பல புலவர்கள், பக்தர்கள், தொண்டர்கள் ஆகியோர் பிள்ளை தமிழ், கோவை,மாலை, அந்தாதி,வண்ணங்கள்,பள்ளு போன்ற பாக்களை இயற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


4 .திருவேரகம் - சுவாமிமலை 


 இது முருகப்பெருமானின் நான்காம் படை வீடு. இங்கு சுவாமிநாதனாக முருகர் காட்சியளிக்கிறார். கி.பி.15  ம் நூற்றாண்டில் இருந்ததாக கருதப்படும்அருணகிரிநாதர்,திருவேரகம் என்பது கும்பகோணதிர்கருகில் உள்ள சுவாமி மலை என்று பல திருப்புகழ் பாடல்களில் பாடியுள்ளார்.அவர் "நடியிர்காவிரியாற்றுக்குள்ளே பயில் வளமை சோழ நன்னாட்டுக்குள் ஏறக நகர், என்றும், வளைகுல மலங்கு காவிரியின் வடபுரன்சுவமி மலை மிசை விளங்கு தேவர் பெருமானே" என்றும் கூறியிருக்கிறார்.இதனால் சோழ நாட்டிலுள்ள காவிரிக்கு வடகரையிலுள்ள இக்கோவில் சுவாமி மலைக்கு அண்மையிலுள்ள ஏரகம் என்று மருவியதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூருகின்றனர்.


  ஈர ஆடையுடன் சுவாமியை தரிசனத்திற்கு செல்லும் வழக்கம் சுவாமிமலையிலும் காணப்படுகிறது
வழிபடசெல்பவர்கள் காவிரியில் நீராடி,பெரும்பாலும் ஈர ஆடையுடன் தான் சுவாமிநாதனை வணங்கச் செல்கின்றனர்.


தொடரும் 
   


புதன், 23 டிசம்பர், 2009

PAZHANI-3


உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-பழனி-Part-2
திருமதி சாந்தா வரதராஜன் 


 "கூருடையாளுங்குன்றாக் குணப் பெருங்குன்று - ஞானப் 
பேருடைப் பழனி என்னப் பெயரது மருவிஎங்கள்
ஆறுமா முகுவன் வைகும் நகரமும் அன்று தொட்டு 
வீறு தொல் பழநீஎன்றே விளம்பின் உலக மூன்றும்"


என்று பழனித்தல புராணம் கூறுகிறது.


 எங்களுக்கு ஞானப்பழம் நீ என்று சிவபெருமானும் உமையும் கூறியதால் பழம்நீ என்பது பழனி என்றும் பழாதியம்பதி என்றும் மருவியது. இக்கோவிலில் திருகுமரன் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். அங்கு குமரப்பெருமான் இடும்பா சூரனை வதம் செய்தார். அவன் கேட்ட வரம் காரணமாக, ஒன்று வாயில் காவலனாக இருப்பது, மற்றது, தன்னை போல் காவடி தாங்கி வரும் அன்பர்களுக்கு கருணை சுரப்பதாகும்.இங்கு பக்தர்கள் காவடிகளில் தேன், பால், சர்க்கரை, இளநீர், பன்னீர் திருநீறு இவைகளைக் கொண்டு வருதல், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தல், இவை இடையறாது, நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பழனி முருகனுக்கு வைகாசி விசாகம்,ஐப்பசியில் சஷ்டி, கார்த்திகையில் கிருத்திகை, தைப்பூசம் பங்குனி உத்திரம் இந்த நாட்களில் சிறப்பான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாதம் தோறும் கிருத்திகை, சஷ்டி விசாகம், அமவாசைகளிலும் விழாக்கள் உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் அக்னி நட்சத்திர காலத்தில் மக்கள் திரளாக வந்து மலைவலம் வருகின்றனர்.


திருவாவினன்குடி 


  திருவாவினன்குடி என்ற கோவில் பழனி அருகில் உள்ளது.இங்கு முருகப் பெருமான் தெய்வயானையுடன் காட்சி அளிக்கிறார்.
 "ஆதியந்தம் உலா ஆசுபாடிய சேரர் கொங்குவை 
 காவூர் நனாடத்தில், ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே"
என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.


தொடரும் 
                           


புதன், 16 டிசம்பர், 2009

pazhani-2

உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-பழனி-Part-2
திருமதி சாந்தா வரதராஜன் 


இதை அடைய 660 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படிவரிசைகளில் சுமார் கால் பாகம் சென்றதும் யானைப்பதை என்ற மலை வழிப்பாதை ஒன்றும் பிரிந்து செல்கிறது. அதன் வழியாகவும் சென்று சேரலாம். இது பழமையும்,புதுமையும் கலந்து நிற்கும் பான்மை போலும். வெளிச்சுற்றில் வலம் வரும் போது ஒரு பக்கம் பாங்கர் மலைத்தொடர்ச்சி , மற்றொரு பக்கம் வையாவிபுரி ஏறி, இன்னொரு சார் பச்சைப்பசேல் என்று தோன்றும் வயல்கள் இவைகளை காணலாம்.கரடு முரடான மலைப்பாறைகள் இறைவன் திருச்சடையும், பசும் வயல்கள் உமையம்மையின் தோற்றத்தையும் வையாவிபுரி ஏரியின் நீர் நடுநாயகமாய் நின்று அருள் கந்தன் (அருள்) கருணை வெள்ளம் என்றும் கொள்ளலாம் போல் தோன்றுகிறது.       


  பழனி ஆண்டவர் சன்னதி மேற்கு நோக்கியது. திருவாயிலில் நுழைந்து மயில் மண்டபம், மணிகட்டி மண்டபம் தாண்டி இராஜ கோபுர வாயில் வழியாக பாரவேல் மண்டபத்தை அடையலாம். பாரவேல் மண்டபத்தின் கற்றூண்கள் அற்புத சிற்ப அமைப்புடன் பொற்புடன் நிற்கின்றன. அதை தாண்டினால் நவரங்க மண்டபத்தை சேரலாம். அங்கிருந்துதான் பழனியாண்டவர் திருகோலத்தை வணங்க வேண்டும். ஆண்டவனுக்கு அபிஷேகங்களும் பலவித அலங்காரங்களும் எந்நேரமும் நடந்து கொண்டேயிருக்கும்.                                      


  மலைக்கோயிலுள்ள பாண்டிய மன்னர் கல் வெட்டில் வைகாவூர் நாட்டு பழனிமலை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழனி என்ற பேர் வந்ததற்கு புராண கதையும் உண்டு.                                                                                
தொடரும்                                                                                                                        
                                                                      


      

சனி, 5 டிசம்பர், 2009

Thirchendhur-2

முருகப் பெருமானின் முக்கிய திருத்தலங்கள் 
திருச்செந்தூர் Part-3                                                                                           
 திருமதி சாந்தா வரதராஜன்                               
மாதம் தோறும் சஷ்டி கிருத்திகை போன்றவை முக்கிய நாட்கள் ஆகும்.               
 "வந்த வினையும்  வருகின்ற வல்வினையும் கந்தநென்று சொல்லக்கலங்குமே செந்தினார்செவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வாராதே வினை" 
என்பது நம்பிக்கை மேலும்,                             
"சாகா வரமும் தந்திடும்,உடம்பிற்,               
போகாப்பீடை போக்கிரட்சிக்கும்,வறுமை நீங்கும், வாழ்வு உண்டாகும்"                                                           
என்று திருச்செந்தூர் அகவல் தெரிவிக்கிறது.                                                                     
3.பழனி   
   தமிழ்க்கடவுளான திருமுருகன் கோவில்   கொண்டிருக்கும்  பல தலங்களில் இது தலை சிறந்தது. பழநியம்பதி மூன்றாம் படை வீடாகும். இதற்கு சிவகிரி,பழனாபுரி, பொதினி என்ற பெயர்களும் உண்டு. தமிழ்ச்சங்க நூலாகிய அகநானூற்றிலே இந்த பதி பொதினி என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த சொல்லே மருவி பழநிஎன்றாயிற்று என்பர். பழனங்கள் (வயல்கள்) சூழ்ந்த    
இவ்வூர் பழனி என்றும் கூருவர்.               


    இப்பழனி மலை மேற்கு தொடர்ச்சி மலையை சேர்ந்தது. இவ்வூர் கடல் மட்டத்திற்கு 668 அடி உயரத்திலுள்ளது. அம்மலையின் உயரம் 450 அடி. இம்மலையைச் சுற்றி வர 1 1/4 மைல்  தொலைவிலுள்ள ஓர்   
அழகிய சாலையும் அமைந்துள்ளது. பல சிறு கோயில்களும், சாதுக்களின் மடங்களும் அறச்சாலைகளும், மயில் மண்டபங்களும் அந்தக் கிரிவீதி மருங்கில் திகழ்கின்றன. மலைக்கு         
2 1/4  மைல் தூரத்தே ஷண்முக நதியெனும் புனித ஆறு ஓடிக்  கொண்டிருக்கிறது. இடும்பன் மலை அருகே எழில் பெற நிற்கின்றது. இயற்கை வளங்களின் நடுவே பழனிமலை நிற்கும் காட்சி கண்கவர் வனப்புடையது. அம்மலையின் மணிமுடிமேல் விளங்குவது இளங்குமரனின் திருக்கோயில்.                               
தொடரும்.                                                                 
  

வியாழன், 26 நவம்பர், 2009

Thiruchendhur-1

உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-4
திருமதி சாந்தா வரதராஜன் .                                  
2.திருச்செந்தூர்                                 


   இது பெருமை பெற்ற முருகன் தலம். இது திருநெல்வேலி மாவட்டத்தில், கடற்கரையில் அமைந்த இரண்டாம் படை வீடாகும். செந்தில், அலைவாய், திருச்செந்தில், திருச்சீரலைவாய், திருச்செந்தூர், ஜெயந்திபுரம், சந்தனாசலம், என்ற பற்பல பெயர்கள் இப்பகுதிக்கு உண்டு. சங்க இலக்கியங்களில் செந்தில்,அலைவாய் என்றும், தேவாரத்தில் செந்தில் என்றும்,திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. முருகனுக்கு            சேந்தன்       என்ற பெயரும்   உண்டு. அவன்     குடிகொண்டிருப்பது  சேந்து   இல் , என்பது  செந்தில் என்றாகி , பின்னர்  செந்தூர்  என்று  வழங்கியது  என்றும், ஜெயந்திபுரம் என்பது  செந்தூர்  ஆக     மருவுயது   என்றும் சிலர்   கூருவர்  .


   கிரௌஞ்ச  மலையை பிளந்து தாரகாசுரனை கொன்றபின் ஆறுமுகன் செந்திலில் வந்து தங்கி செந்திலாண்டவனாக காட்சி அளிக்கிறார். வீரமகேந்த்ரம் சென்று சூரபதுமாதியரை அழித்து திரும்பி வந்த ஆறுமுகன் சினம் தணிந்து பக்தர்களை காப்பாற்றியதால் கந்தன் என்றும் அவனது கருணையை கந்தன் கருணை என்றும் கூருவர். குமரகுருபரர்   ஊமையாக      இருந்தவர் . இந்த      செந்தில்  ஆண்டவன் அருளால்  பேசும் சகதி        பெற்று  பிள்ளை  தமிழ்  பாடினார். ஆதிசங்கரர்    திருச்செந்தூர்  ஆண்டவனை  பற்றி சுப்பிரமனிய புஜங்கம் என்ற பாடலை இயற்றினார்.                          


 ஆண்டுதோறும் 3 நாட்கள் கந்தசஷ்டி விசேஷமாக கொண்டாடுவார்கள். மேலும் ஆடி திருக்கிருத்திகை, தைகிருத்திகை விசேஷமானது.   
                    மணி மேலும் ஒலிக்கும்.  
                               ஓம் 


செவ்வாய், 17 நவம்பர், 2009

hullo !!

                                       உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-3
திருமதி சாந்தா வரதராஜன்     


 திருமலை நாயக்கர்,மங்கம்மாள் இவர்களின் உருவச் சிலைகளும் கட்ரூன்களில் உள்ளன.கோயிலின் கோபுரமும் அழகு பெற அமைந்து இருக்கின்றது.இதை திருப்பன்கிரி,கந்தமாதனம் கந்தமாலை என்றும் அழைப்பர்.    
சூரபத்மாதியரை அழித்து,தேவர்களை சிறைமீட்டு தேவேந்திரன் மகளான தெய்வயானையை இங்கு திருமணம் புரிந்துகொண்டு சுப்பிரமனிய சுவாமியாக காட்சி அளிக்கிறார்.
 "சந்ததம் பந்தத் தொடராலே 
 சஞ்சல துஞ்சித் திரியாதே 
கந்தனென் ரென்றும் ற்றுனை நாளும் 
கண்டு கொண்டேன் புற்றிடுவேனோ 
தந்தியின் கொம்பைப் புணர்வோனே 
சங்கரன் பங்கிற் சினவ பாலா 
செந்திலங் கண்டிக் கதிர்வேலா 
தென் பரங் குன்றிற் பெருமாளே"
என்பதை திருப்புகழ் பாடல் மூலம் அறியலாம். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில்,"மாடமலிமருகில் கூடல் குடவயின்"என்று  இது மதுரைக்கே மேற்கே இருப்பதாக கூறியுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியாரும் தமது கந்தபுராணத்துள் "சுடர் மொழி வேலினான் தூய கூடலின் குடதிசையமர் பரந்குன்றினை எய்தினான்" என்று இவ்வாறே கூறுகிறார்.


 இத்தலத்திலுள்ள தீர்த்தங்கள் சத்திய கூபம்,பிரம கூபம்,சரவணப்பொய்கை என்பன.ஒவ்வொரு கார்த்திகை தோரும் திரளான மக்கள் மலைவலம் வந்து முருகனை வழிபடுகின்றனர்.ஆண்டு தோரும் பங்குனி உத்திரத்தில் திருவிழா நடக்கிறது.
      மணி மேலும் ஒலிக்கும்.
          

திங்கள், 9 நவம்பர், 2009

hullo !!

             முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-2
 திருமதி சாந்தா வரதராஜன் 
 " ஒரு நாமம் ஒரு உருவம் ஒன்ருமிலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தொள்ளேனம் கொட்டோமோ" என்று மாணிக்க வாசகர் கூறிய 
திருமொழியை நோக்க வேண்டும்.முருகனுக்கு பற்பல நாமங்கள் உண்டு.அவை குமரன்,ஆறுமுகன்,கந்தன்,குகன்,விசாகன்,சுப்பிரமணியன்,சரவணபவன்,கார்த்திகேயன்,காங்கேயன், சுவாமிநாதன்,செவ்வேள்,செந்தில் ஆண்டவர்,தணிகாசலம்,வள்ளிமணாளன்,தண்டாயுதபாணி,கலியுக வரதன் என்பன.
        
 குன்றெல்லாம் குமரன் என்பதற்கு இணங்க,குமரனுக்கு மலை கோவில்கள் ஏராளம்."கோ" என்றால் அரசர்,கடவுள் என்று பொருள்.'இல்'என்றால் உள்ளே என்பதாகும். ஆகவே கடவுள் இருக்கும் இடம்,கோவில் என்று ஆயிற்று.பக்தர்களை காக்கும் வீடு (இடம்,மோட்சம் ) படைவீடாக மருவியது என்று கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிஉள்ளார்.இனி ஆறுபடை வீடுகளையும் மற்ற முருகப்பெருமானின் மற்ற முக்கிய ஸ்தலங்களை காண்போம்.
 
பண்டை தமிழ் மக்கள் நிலத்தை நான்கு வகைகளாக பிரித்தாக கூறப்படுகிறது.அதாவது குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்றும் இவை நான்கும் இல்லாத இடம் பாலை என்றும் கூருவர்.முருகப் பெருமானை தமிழ் மக்கள் இந்த நிலப்பகுதிகளில் இயல்,இசை,நாடகம் மூலம் வழிபாடு செய்கிறார்கள் என்பதாகும்.
      1 .திருப்பரங்குன்றம் 
 முருகப் பெருமானின் முதல் படை வீடு.இது குறிஞ்சி நிலத்தில் அமைந்ததாகும்.இப்பகுதி மதுரைக்கு தெற்கே ஐந்து மயில் தொலைவில் உள்ளது.இவ்வூரிலுள்ள மலை,கடல்மட்டத்திற்கு மேல் 1050 அடி உயரத்தில் இருக்கிறது.திருமூர்த்தங்கள் உள்ள குடைந்த கோயிலின் முன்,படிப்படியாக மண்டபங்கள் கீழே வரும் வரையில் உள்ளன.மண்டபங்களின் கத்ரூன் சிற்ப்பங்கள் மிகுந்த அற்புத வேலைப்பாடு உடையன.
    மணி மேலும் அடிக்கும்.