OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

SIVALINGA THATHUVAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SIVALINGA THATHUVAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 அக்டோபர், 2010

SIVALINGA THATHUVAM-10

HAVE A NICE DAY

 சிவ பூஜை 

     

 சிவலிங்க தத்துவம் - 10

  திருமதி சாந்தா வரதராஜன்    



           "மனதால் நினைத்தாலே பாவங்கள் விலகக் கூடிய" பஞ்ச பூத லிங்கங்கள் ஐந்து ஆகும்.


  காஞ்சீபுரத்தில் பிருதுவி மயமான ஏகாம்பர  லிங்கம் இருக்கின்றது. காவேரி தீரத்தில் உள்ள ஜம்புகேசுவரத்தில் அப்புமயமான ஜம்புகேஸ்வர லிங்கம் உள்ளது. அக்கினி மயமான அருணாச்சல லிங்கம், அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையில்  இருக்கிறது. சுவர்ணமுகி  தீரத்தில் உள்ள திருக்காளத்தியில் வாயு மயமான திருமூல லிங்கம். பூலோக மகா கைலாசம் எனப்பெற்ற தில்லைவனமானது சிதம்பரத்தில் உள்ளது. இவ்வைந்து லிங்கங்களின் பெயரைக் கேட்டாலும், சொன்னாலும் மனதில் நினைத்தாலும் அப்போதே அவன் புனிதமடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எனவே கண்ணாரக் கண்டால் பயனை விவரிக்க வேண்டுமா? 


  மேலும், ஜோதிர்லிங்கம் பன்னிரண்டுக்கும்  உபலின்கங்கள் உள்ளன. அவற்றைக் காண்போம். சோமநாத லிங்கத்திற்கு உபலிங்கம், மஹீநதி சமுத்திர சங்கம தீரத்திலுள்ள அந்த கேசலிங்கம் ஆகும். பிருகு பர்வததுக்குச் சமீபத்திலுள்ள ருத்திர லிங்கம் மல்லிகார்ஜுன லிங்கத்தின் உபலிங்கம். அதேபோல மகாகாள லிங்கதிற்குத் துக்தேச லிங்கமும், ஒன்காரச்வர லிங்கதிற்குத் கர்தமேச லிங்கமும் உபலிங்கங்கலாகச் சொல்லப்பட்டுள்ளன. யமுனை தீரத்தில் உள்ள பூதேச லிங்கம் கேதார லிங்கத்திற்கு உபலிங்க மாகும். பீமசங்கர லிங்கத்திற்கு பீமேச்வர லிங்கமும், விஸ்வேஸ்வர லிங்கதிற்குச் சரச்யேச்வர லிங்கமும், திரியம்பக லிங்கதிற்குச் சிதேச்வர லிங்கமும், வைத்திய நாதலிங்கதிற்கு வைச நாத லிங்கமும் நாகேஸ்வர லிங்கத்திற்கு ஜில்லிகா சரஸ்வதி சங்கமதிலிருக்கும் பூதேஸ்வர லிங்கமும், இராமேஸ்வரா லிங்கத்திற்குக் குப்தேச்வர லிங்கமும், குஸ்மேச லிங்கத்திற்கு வியாக்ரேச்வர லிங்கமும் உபலிங்ககலாகும்.


தொடரும் 
   








   
                     















சனி, 25 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-9

HAVE A NICE DAY

    சிவ பூஜை 
    



சிவலிங்க தத்துவம் - 9
  திருமதி சாந்தா வரதராஜன்    

 ருத்ராட்சங்களில் ஒருமுக மணி கிடைப்பது அரிது என சொல்லப்படுகிறது. அப்படி அது கிடைக்கும் பட்சத்தில், அது இலந்தம் பழம் அளவு இருக்குமானால் சுகம் அதிகமாகும். நெல்லிக்காய் அளவு இருந்தால் துக்கங்கள் நீங்கும். கடலை  அளவு உள்ளது மிகவும் விசேஷமானது. இம்மையிலும், மறுமையிலும் சகல  நன்மைகளையும் கொடுக்க வல்லது. குன்று மணி அளவு உள்ளது காரிய சாதகம் செய்யும். ருத்ராட்சங்களை அணிய விரும்புபவன் அவற்றை பொருள் கொடுத்தே பெறவேண்டும்.தானமாக பிறரிடமிருந்து வாங்கக் கூடாது. பணம் கொடுத்து வாங்க இயலாதவன் தன் புண்ணியத்தை தத்தம் செய்தாவது பெற வேண்டும். ருத்ராட்சமாலை அணிந்தவனைப் பார்த்தால் பூதப்ரேத பிசாசங்கள் ஓடிவிடும்.    
 அடுத்து, ஜோதிர் லிங்கங்களை பற்றி சூதர் கூறிய விளக்கங்களைக்கான்போம். ஜோதிர்லிங்கங்கள் பன்னிரண்டு வகைப்படும். சௌராஷ்ட்ரத்தில் சோமநாத லிங்கம் இருக்கிறது. ஸ்ரிசைலதிலுள்ள லிங்கத்திற்கு மல்லிகார்ஜுன லிங்கம்  என்று பெயர். உஜ்ஜைனியில் மகாகால லிங்கமும், ஓங்கார லிங்கமும் உள்ளன. ஹிகோதிரியில் கேதாரலிங்கமும், டாகினியில் பீமசங்கரளிங்கமும், காசியில் விச்வேஸ்வரலிங்கமும் கோதாவரி தீர்த்தத்தில் த்ரியம்பக லிங்கமும், சிதாபுரத்தில் வைதியனாதலிங்கமும் இருக்கின்றன. நாகேஸ்வர லிங்கம் தாருகா வானத்திலும், இராமேஸ்வர லிங்கம் சேதுவிலும், குச்மேசலிங்கம் சிவாலயத்திலும் உள்ளன. ஜோதி லிங்கங்கள்    பன்னிரண்டின் பெயரையும் எவனொருவன் விடியற்காலத்தில் எழுந்திருந்து பயபக்தியோடு ஜபிக்கிறானோ அவன் பாவங்களிலிருந்து விடுபட்டு காரிய சித்தியை அடைவான். இவற்றைப் பூசிப்பவர்கள் பிறவி ஒழிந்து பகவானின் சந்நிதானத்தை அடைவார்கள்.

தொடரும் 
      
   




   








 அடுத்து,

சனி, 18 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-8

HAVE A NICE டே



                                               சிவ பூஜை 


சிவலிங்க தத்துவம் - 8
  திருமதி சாந்தா வரதராஜன்    


  ஆயிரத்தொரு நூறு ருதிராட்சங்களை ஒருவன் தரிப்பானகில் அவன் ருதிரஸ்வரூபியாக விளங்குவான். ஐந்நூற்றைம்பது ருதிராட்சங்களால் கிரீடம் செய்து அணிபவன் சிவசாநிதியத்தை அடைவான். உபவீதமாகத் தரிப்பதினால் அறுபது ருதிராட்சங்களை அணிய வேண்டும். முக்திக்கு ஒருவன் சிகையில் மூன்றும், இருகாதுகளிலும் ஐந்து அல்லது ஆரும்,கழுத்தில் நூற்றௌன்ரும், புஜத்தில் பதினொன்றும், இருகாதுகளில் சுற்றிலும் பதினொன்றும், மணிக்கட்டில் பதினொன்றும் பூணூலில் மூன்றும் அணியவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. ருத்ராட்சமனிகளைக் கொண்டு ஒருவன் நூறு முறை சிவநாமங்களை ஜபிப்பானாகில், ஆயிரம் முறை ஜபித்த பலனை அடைவான்.


    ருத்ராட்சங்களிலும் பலவகை உள்ளன. ஒரு முகம் உடையது சகல காரிய சித்தியை அளிக்கும். இருமுகம் கொண்டது லஷ்மிகடாட்சதை அளிக்க வல்லது. மூன்று முகம் கொண்டது நினைத்த காரியத்தை விருத்தி செய்யும். நான்கு முகங்களை  உடையது சதுர்வித புருஷார்த்தங்களையும் கொடுக்கவல்லது. ஐந்து முகங்களோடு கூடியது சகல பாவங்களையும் போக்கிவிடும்.


தொடரும் 


       












    












      

சனி, 11 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-7

HAVE A NICE DAY
      
                                                        சிவபூஜை 

சிவலிங்க தத்துவம் - 7
  திருமதி சாந்தா வரதராஜன்
  
   நைமிசாரண்ய வாசிகளான முனிவர்களுக்கு சூதமுனிவர் சிவமகாத் மியத்தை எடுத்துரைத்தார் என்றும் ஜோதிர் லிங்கங்களைப் பற்றியும் கூறினார் என்றும் சிவபுராணம் குறிப்பிடுகிறது. ருதிராட்சம் தரிப்பதின் பலன்களும் கூறப்பட்டுள்ளது. இவற்றை சுருக்கமாக நோக்குவோம். 


     சிவபெருமானின் திவ்விய சரிதங்களை ஒருவன் கேட்பானாகில் அவன் சகல பாவங்களும் நீங்கிப் பரிசுதனாகுவான்.அவன் மூலம் அவன் வம்சமே விளங்கும். நெற்றியில் விபூதியும், கழுத்தில் ருதிராட்சமும் தரித்து சதா சிவநாமங்களை உச்சரிப்பவனை ஒருவன் தரிசிப்பானாகில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன்கிட்டும். அவனிடத்தில் சிவநாமமே கங்கையாகவும், விபூதியே யமுனையாகவும்,ருதிராட்சமே சரஸ்வதியாகவும் விளங்குவதாகச் சொல்லப்படுகிறது.


தொடரும் 
   










               
   

சனி, 4 செப்டம்பர், 2010

SIVALINGA THATHUVAM-6

HAVE A NICE டே


    
                                                சிவபூஜை 


சிவலிங்க தத்துவம் - 5
  திருமதி சாந்தா வரதராஜன்

            சிவபெருமானை குறப்பிட்ட மலர்களால் அர்ச்சித்தால் அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும். தாமரை மலர்,வில்வம் சதபத்ரம் இவைகளால் அர்சிப்பவன் பெரும் தனத்தை அடைவான்.பரிசுத்தமான பத்துக்கோடி மலர்களால் சிவனை பூஜிப்பவன் ராஜபோகத்தை அடைவான். கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்கப் பன்நீராயிறது ஐந்நூறு மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். சத்துரு பயம் நீங்கப் பத்தாயிரம் மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.கோடி மலர்களைக் கொண்டு அர்ச்சித்தால் ஞானம் உண்டாகும். ஐந்து கோடி மலர்களால் அற்சிப்பவனுக்கு முக்தி கிடைக்கும். அரைக்கோடி மலர்களால் அர்ச்சித்து ம்ரிதுனஜய மந்திரத்தை மந்திரத்தை ஐந்துலட்சம் உருஜபித்தால் சிவபெருமான் பிரத்யட்சமாவார். லட்சம் அருகம்புல்லால் அர்ச்சனை செய்பவனுக்கு தீர்காயுசு ஏற்படும். கருவூமத்தையால் அர்ச்சித்தால் புத்திரப் ப்ராப்தி உண்டாகும். லட்சம் கரவீர புஷ்பங்களால் அர்ச்சிப்பவனுக்கு சர்வ ரோகங்களும் நீங்கிவிடும். மல்லிகை அழகிய மனைவியையும், மலைமல்லி தானிய சம்பத்தும் கொடுக்கும். சண்பகம், தாழை ஆகிய இரு மலர்களும் சிவபூஜைக்கு உகந்ததல்ல. 


தொடரும் 
    








   








   








             

சனி, 28 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-5

HAVE A NICE DAY


 sivapoojai 
  


சிவலிங்க தத்துவம் - 4
  திருமதி சாந்தா வரதராஜன்


    கிரஹஸ்தாஸ்ரமத்தில் இருப்பவனுக்கு ப்ரதிமா பூஜையே விதிக்கப்பட்டிருக்கிறது. நீராடி புத்தாடை உடுத்தி நிர்மலமான மனதோடு பூஜைக்கு உட்கார வேண்டும். வெறும் தரையில் அமரக்கூடாது. மரத்தால் செய்யப்ப்பட்ட பலகையில் பட்டு வஸ்திரம் விரித்து அமரவேண்டும். மான்தோல் மிகவும் விசேஷமானது. நெற்றியில் திலகம் இட்டுக்கொள்வது  மிகவும் அவசியமானது. கங்கையைதுதித்து மந்திர பூர்வமாக மூன்று தரம் ஆசமனம் செய்து பூஜையைத் தொடங்க வேண்டும். முறைப்படி சிவபெருமானை மந்திரங்களைச் சொல்லி லிங்கத்தில் ஆவாகனம் செய்து அர்க்கியம் முதலியன விட்டு, அத்தர்,பன்னீர், சந்தனம், முதலிய பரிமள த்ரவ்யன்களால் அபிஷேகிக்கவேண்டும்.பிறகு நீரால் அபிஷேகம் செய்து திலகம் இட்டு மலர்களை சமர்பிக்கவேண்டும். முக்கியமாக தாமரை, கொன்றை,அத்தி,மல்லிகை,ரோஜா, 
வில்வம், தர்பை,அறுகு,கருவூமத்தை,துளசி ஆகியவற்றால் மகேஸ்வரனை அர்ச்சிக்கவேண்டும்.தூபம் தீபம்,நைவேத்யம்,கற்பூர ஆரத்தி செய்து, பிரார்த்தனை முடிந்த பிறகு,பஞ்சாட்சரம் செய்து சிவச்தித்ரங்களைச் சொல்லி புஷ்பாஞ்சலி செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்.


தொடரும் 


   














   













சனி, 21 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-4

HAVE A NICE DAY


         சிவலிங்கம் 
        

சிவலிங்க தத்துவம் - 3
  திருமதி சாந்தா வரதராஜன்


       எத்தனையோ பிறவிகளில் மானிடப்பிறவி என்பது அரிது.மானிடனாகப் பிறந்தவன் அவனவன் குலதிற்கேற்ப விதிக்கப்பட்ட கர்மாக்களை தவறாமல் கடைபிடிதுவரவேண்டும். ஆயிரம் கர்மாக்களைச்செய்வதைவிட தீர்த்த யாத்திரை விசேஷமாகச் சொல்லப்பட்டது. தவம் மேற்கொள்வது அதனினும் மேற்பட்டது.இன்னும் மேலானது தியானம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. த்யானத்தின் மூலம் ஒருவன் பரப்ரம்மத்தை தான் இதயத்திலே தரிசிக்கிறான். அவன் பரப்ப்ரம்மஸ்வரூபமாகவே ஆகி விடுகிறான்.


   பரமானந்தத்தை உண்டு பண்ணுவதும், பரிசுத்தமானதும்,            அழிவு இல்லாததும்,நிஷ்களங்கமானதும்,சர்வபரிபூரனமாதுமான சிவலிங்கத்தை அவன் தன் மனதிலேயே காண்கிறான். சிவலிங்கம் இருவகைப்படும். ஸ்தூலமான கண்ணுக்கு புலப்படக்கூடியது 'பாஹ்யலிங்கம்' என்றும், ஞானக்கண்ணுக்கு புலப்படக்கூடியது 'அந்தரலிங்கம்' என்றும் கூருவர்.மேலும் ஞானிகளுக்கு 'விக்ரக' ஆராதனை தேவையில்லை.ஞானம் இல்லாதவனுக்கு விக்கிரக ஆராதனை அவசியமாகும். பக்தியோடு பூஜித்தால் தான் ஒருவன் தான் கோரிய பலனை அடைவான்.இல்லையேல் அவன் செய்யும் வழிபாடு வ்யர்த்தமாகும்.மேலும் , ஸ்ரத்தையின்றி பூஜை செய்வதால் அவன் கீழான நிலையையே அடைவான்.


தொடரும் 


   








   












                



சனி, 14 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-3

HAVE A NICE டே


       
 சிவலிங்கம் 





சிவலிங்க தத்துவம் - 3
  திருமதி சாந்தா வரதராஜன்



     அவ்வகையில் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அளிக்கப்பட்ட லிங்கங்கள் : இந்திரன் - பத்ம ராகத்தால் செய்யப்ப்பட்ட லிங்கம்; குபேரன் - ச்வர்ணலிங்கம்; யமன் - கோமேதக லிங்கம்; வருணன் - நீல லிங்கம்; விஷ்ணு   - இந்திர நீலத்தால் செய்யப்ப்பட்ட அழகிய லிங்கம்; பிரம்மன் - ச்வர்ணத்தால் செய்யப்ப்பட்ட லிங்கம்; அஷ்டவசுக்களும், விஸ்வதேவர்களும் - வெள்ளியாலான லிங்கம்; வாயு - பித்தளை லிங்கம்; அஸ்வினி தேவர்கள் - பார்த்திவ லிங்கம்; லஷ்மி - ஸ்படிக லிங்கம்; சோமராஜன் - முத்து லிங்கமும் வஜ்ஜிர லிங்கமும்; பிராம்மணர்கள் - பார்த்திவ லிங்கம்; (மண்ணால் செய்யப்பட்டது ); மயன் - சந்தன லிங்கம்; அனந்தன் முதலிய நாகராஜாக்கள் - பவள      லிங்கம்; தைத்தியர்கள்,அரக்கர்கள் - கோமய லிங்கம் (சாணத்தால் செய்யப்பட்டது ); பிசாசங்கள் - இரும்பு லிங்கம்; பார்வதி தேவி - நவநீத லிங்கம்; நிருதி - தாரு லிங்கம் (மரத்தால் செய்யப்பட்டது ); சாயாதேவி - மாவினால் செய்யப்ப்பட்ட லிங்கம்; யோகிகள் பஸ்ம லிங்கம்;சரஸ்வதி தேவி - இரத்தின லிங்கம்; யட்சர்கள் - தயிரினால் செய்யப்ப்பட்ட லிங்கம்; இந்தவிதமாக, விஸ்வகர்மாவிடமிருந்து பெற்றுக்கொண்ட லிங்கங்களை அனைவரும் பயபக்தியோடு வணங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். "ஹர ஹர சம்போ சங்கரா " என்ற கோஷம் எட்டுத் திசைகளிலும் மோதி எதிரொலித்தது. விஷ்ணு தம்மை மறந்து ஈசனை திணித்தார். மகிழ்ச்சிக்கிடையில் எவரும் வழிதவறி சிவாபராதிகள் ஆகிவிடக் கூடாதென்று அவர்களுக்கு சிவ பூஜை பற்றி உபதேசிக்க முன்வந்தார் பிரம்மன்.


தொடரும் 
   










   
















                      

சனி, 7 ஆகஸ்ட், 2010

SIVALINGA THATHUVAM-2

HAVE A NICE DAY

     சிவலிங்கம் 
சிவலிங்க தத்துவம் - 1 
  திருமதி சாந்தா வரதராஜன் 
  

        இத்தகைய ஈசனின் மகிமைகளை அறிந்த தேவர்கள், அவர் அருள்கடாக்ஷம் தங்களுக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். தங்கள் விருப்பங்களை விஷ்ணுவிடம் கூறி, தங்களுக்கு சிவலிங்கங்கள் கிடைக்கச் செய்யுமாறு விஷ்ணுவை பிரார்த்தித்தனர். உடனே, விஷ்ணு தேவதச்சனை அழைத்து, "தேவதச்ச, சகல காரண பூதரான சிவபெருமானின் திருஅருட்ப்ரசாதம் என்றும் கிடைக்கும்படி அவரைத் தினமும் ஆராதித்து வர தேவர்களாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆகவே சிவலிங்கங்கள் செய்து அளிக்க வேண்டும்" என்றார். விசுவகர்மாவும் அவ்வாறே ஒவ்வொரு தேவர்க்கும் அவரவர் அந்தஸ்துக்கேற்ப 'சிவலிங்கங்கள்'செய்து அளித்தான்.       


தொடரும் 


   












   












   Yoga:the Sivananda Yoga Video [VHS]










சனி, 31 ஜூலை, 2010

SIVALINGA THATHUVAM-1

HAVE A NICE DAY




 அமர்நாத் சிவலிங்கம் 
              
                  


         சிவலிங்க தத்துவம் - 1 
  திருமதி சாந்தா வரதராஜன் 


   பரம்பொருலானது அகில உலக இயக்கத்திற்கும் மூல காரணமாகும். அந்த பரம்பொருளின் சக்தியானது ஜ்யோதிர் லிங்கத்திநின்று வெளிப்பட்டு வந்ததே சிவபிரானின் தோற்றமாகும்.அதியாச்சர்யமான அழகோடும், ஐந்து முகங்களோடும்,பத்து கரங்களோடும் அனேக வித ஆபரணங்களை அணிந்து  கொண்டு கம்பீரமாகப் பரம்பொருளாகிய சிவபெருமான் சர்வலட்ச்னங்களோடு தோன்றினார் என்று ஸ்ரீ சிவபுராணம் விளக்குகின்றது. இவரை "சிவம்" என்றும் "பிரம்மம்"என்றும் அழைப்பதுண்டு. அனைத்துமே அவர் வடிவம் தான். அவரால்தான் அண்டசராசரங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. ஸ்ருஷ்டி,ஸ்திதி,சம்காரம் எனப்படும் மூவகைக் காரியங்களையும் கவனித்து செயல்படும் சக்திகளும் இவரால் தோற்றுவிக்கப்பட்டவர்கள் தான். சத்தியமாயும், ஞானரூபமாயும் அழிவு என்பதே இல்லாததுமான சிவரூபமே முதொழில்களும் நடைபெற மூலகாரணம் ஆகும். சிவனை லிங்கத் தோற்றத்தில் இருப்பதாக எண்ணித் தியானம் செய்தால் போதும். சிவனைத் த்யாநிப்பவர்களுக்கு சகல காரியசித்தியும் கிடைக்கும். சிவலிங்கத்தில், பிரம்மன் வலது பக்கத்திலும், விஷ்ணு இடது பக்கத்திலும், ருத்திரன் இதயத்திலுமாக மூவரும் ஐககியமாயஈருக்கிரார்கள் என்று சிவபுராணம் கூறுகிறது.


தொடரும்