OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

KAVITHAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KAVITHAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 மார்ச், 2011

KAVITHAI

HAVE A NICE DAY

 HAPPY WOMEN'S DAY !!
  

           WOMEN'S DAY TODAY 
        TUESDAY, MARCH, 8 th, 2011
         100 th woman's day
   ON THIS DAY KOVILMANI SALUTES WOMANHOOD
       
     கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன்


  
   பெட்டகம் 
  அன்பு நிறைந்தவள் தமிழன்னை 
   அருள் அளிப்பவள் தமிழன்னை 
    இன்பக் கலைகள் யாவையுமே 
   ஈன்று  வளர்த்திடும் தமிழன்னை 
         அன்பின் பெட்டகம் அல்லவா?

      மான் சேர மயிலாடக் குயல்பாட மலர்கள் 
     தேன்செர மகரந்தம் திசைதோறும் சிதற 
     மீன் சேரும் சிற்றோடை மெல்லோசை தவழும் 
    பூஞ்சோலையும் இயற்கையன்னை எனும் பெட்டகம்தானே 

     இயலென எழுதியும், இசையென பாடியும் 
     கற்பனை நிறைய கவிதைகள் புனைந்தும் 
     குளங்களை வெட்டியும், கோபுரம் கட்டியும்  
     சிலைகளைச் செதுக்கி, சித்திரம் வரைந்தும் 
     மலைகளைக் குடைந்தும், மண்டபம் ஆக்கியும் 
     நுண்கலைகளை வளர்த்த நம் பாரத நாடு கலாசார  பண்பாட்டின் பெட்டகம் தானே! 

     குண்டலமும் மேகலையும் சிலம்பும் முபபார் 
     குறள் மறையும் ஐந்திணையும் பதிற்றும் பத்தும்  தண்டியும் தொல் காப்பியமும் நளவெண்பாவும்
      தளைவளையா பதி, சிந்தாமணி, கலிங்கம் 
     கொண்டவனின் பரணியோடு கலம்பகங்கள்,
     கோவேந்தர் உலாக்கள், மடல் பிரபந்தங்கள் 
     எண்டிசையும் புகழ்மணக்கும் பத்துப்பாட்டும் 
           தமிழ் இலக்கியத்தின் பெட்டகம் அல்லவா?

                      ------------------------------

    








   








          

சனி, 22 ஜனவரி, 2011

ANNAI THERASA

HAVE A NICE DAY

 அன்னை தெரசா        
       கவிஞ்ஞர்களின் பார்வையில் 
        அன்னை தெரசா  
            இயற்றியவர் : 
  கவிஞ்ஞர் திருமதி சாந்தா வரதராஜன் 
       அன்பும் கருணையும் 
        அன்னையின் நற்குணங்கள் 
        அற்புத சேவைகள் 
         அன்னை தெரசாவின் இயல்புகள் 


       திண்ணிய மனமும் 
       தெளிந்த அறிவும் 
       அன்னியர் ஆயினும் 
       தொண்டுகள் புரியும் பண்பாளர் 


       தனக்கென்று வாழா 
       பிறருக்கு உதவுபவர் 
       தன்னலம் கருதா 
       சேவையில் உயர்ந்த உத்தமர் 


     தொழு நோயாளிகள் 
     தொழும் தெய்வம் - இவர் 
     மக்கள் சேவையே 
     மகேசன் சேவை என வாழ்ந்தவர் 


    இவரது இயற்பெயர் ஆக்னெஸ் 
    இன்முகம் இனிய சொல்லுடன் 
    இவர் ஆற்றிய சேவைகள் 
    இணைந்து அளித்த பெயர் 'தெரசா'


    பல்வேறு சாதனைகளுக்கு 
    பாரத ரத்னா விருதும் 
     உலக சமாதானத்திற்கு 
    உன்னத நோபல் பரிசும் பெற்றவர் அன்னை.


                             -------------------  
   










   











சனி, 15 ஜனவரி, 2011

PONGAL

HAVE A NICE DAY


 WISH YOU HAPPY PONGAL
                      
        
           பொங்கல் கொண்டாடுவோம் 
   திருமதி சாந்தா வரதராஜன் 


    ஏற் பிடிக்கும் உழவர் வாழ 
    ஏற்றத்தாழ்வு  தகர்ந்திட 
    தன்னலத்தார் திருந்திட 
    தாயகத்தின் பகை ஒழிய 


   கார் முகிலை வாழ்த்திட 
   கன்னித் தமிழ் வளர்ந்திட 
   கருமித்தனம் நீங்கிட 
    கருணையுள்ளம் மலர்ந்திட 


   போர் அரக்கன் பொசுங்கிட 
   பொழுதெல்லாம் மகிழ்ந்திட 
    பக்தி மனம் வளர்ந்திட 
    பழமையினை மறந்திடாமலே 
                                                 - பொங்கல்  கொண்டாடுவோம் 


      தொழில் புரிவோர் உயர்ந்திட 
      தோழர்களாய் வாழ்ந்திட 
      சாந்தி பண்பு வளர்ந்திட 
      சாதிப் பேய்கள் ஒழிந்திட 


    காந்தீய வழி கடை பிடிக்க 
    கடமை யினை உணர 
    கால்நடைகள் பெருகிவாழ 
    கருத்தினிலே ஒளி மிளிர 


   ஓர் இனமாய் வாழ 
   ஒற்றுமையை காத்திட 
   சக்தி உணர்வு பெருகிட 
    சமாதானம் ஓங்கிட 
                      - பொங்கல் கொண்டாடுவோம் 
                       -----------


    










   














     

சனி, 3 ஜூலை, 2010

KAVITHAI

HAVE A NICE DAY



                                    

UNITED WAY

                  வழி 
     திருமதி சாந்தா வரதராஜன்      


    விழித்தவன் கண்களுக்குப் பட்டதெல்லாம் வழி!
விழிக்காதவன் கண்களுக்கு வாழ்கையே சுழி! 
விழி பெற்றவன் வாழ்க்கைக்கு நம்பிக்கையே வழி! 
விதையிட்டவன் நம்பிக்கைக்கு உழைப்பே வழி!
பழி சொல்பவன் நாக்கினிலே நஞ்சே வழி!
பலன் கொடுக்கும் மனிதனுக்கு அன்பே வழி!
சுழியைக் கூட கோடியாக்கும் அறிவாளியின் வழி!
சுமைதாங்கும் வாழக்கை கூட சுகமான வழி!


நேர்மை மனமுடையோற்கு மனசாட்சியே வழி!
நெருஞ்சி எண்ணமுள்ளவற்கு நெஞ்சிலேது வழி! 
சீர்மை ஒழுக்கம் மனிதற்கு சிறப்பு  வழி!
சிறகுள்ள சிந்தனைக்கு இருட்டு கூட வழி!
பார்செழிக்கப் பல்லோர் காட்டினார் பல வழி!
பயன் வாழ்வு வாழ்வதே எதிர்கால நல வழி! 
கார்மேகம் பொழிந்தால் தான் சோற்றுக்கே வழி!
கவிச் சாலையிடும் கவிஞரெல்லாம் நாட்டுக்கே வழி!


வந்தவழி பத்துமாதம் தாய் வயிற்று வழி!
வாழ்ந்து போகும் போது மீதமோ ஆறடி வழி!
சொந்த வழி இருந்தும் பலர்குத் துயர் வழி!
சொந்தமிருந்தும் முதுமைகள் காணுது சோக வழி!
வந்தவழியை மறந்தவ்ர்கோ பல உயர் வழி!
வாழ்வில் இன்னும் ஏழைக்கு வறுமை வழி!
முந்திக்கொள்ளும் மூளைக்கோ முதல் வழி!
மூளைவழி ஒன்றே வாழ்வின் மூலதன வழி!
                        சுபம்      


    


           



   









        

சனி, 26 ஜூன், 2010

KAVITHAI

HAVE A NICE DAY


                                                  


  ஊன்றுகோல் 
திருமதி சாந்தா வரதராஜன் 


நல்லோர்கள் செயலெல்லாம் 
         மனிதம் காக்கும் ஊன்று கோல்
நாட்டைக்காக்கும் தொண்டுகள் 
         நமக்குதவும் ஊன்று கோல் 
அல்லும் பகலும் உழைப்பவர் 
        பொது நலத்தின் ஊன்று கோல் 
அறிவைப்பெருக்கும் ஆசான் 
        மூடம் போக்கும் ஊன்று கோல் 
வல்லோர்கள் கரங்களெல்லாம் 
        நன்மைக்கு ஊன்று கோல் 
வாழக்கை முடிந்த பின்னே 
        நாலுபேர்கள் ஊன்று கோல் 
எல்லோர்க்கும் ஓர் நாள் 
        கடைசிப் பிடி ஊன்று கோல் 
எழைநலம் பேணுவோர்கள் 
        பூமித்தாயின் ஊன்று கோல் 
திக்கற்ற உயிர்களுக்கு 
         தெய்வமே ஊன்று கோல்
திசையற்ற வாழ்க்கைக்கு 
          நம்பிக்கையே ஊன்று கோல் 
தக்கவழி நடப்பதற்கு 
         கல்வியே ஊன்று கோல் 
தன்னையறிந்து வாழ்வதற்கு 
         தன்பலமே ஊன்று கோல் 
சிக்கலில் தவிப்பவர்க்கு 
          சிந்தனையே ஊன்று கோல் 
சிறப்புடன் நாடுகாண 
           பொது நலமே ஊன்று கோல் 
துக்கமுள்ள நெஞ்சுக்கு 
            அமைதியே ஊன்று கோல் 
தூயவழி போவதற்கு 
             அன்பொன்றே ஊன்று கோல் 
           
                 சுபம்        
  

ஞாயிறு, 20 ஜூன், 2010

KAVITHAI

sign - Have A Nice Day CafeImage by Leo Reynolds via Flickr
HAVE A NICE DAY

  பாரதி 
சாந்தா வரதராஜன் 
எட்டய புறத்தில் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணி 
எட்டயபுரம் சமஸ்தானம் அளித்த பட்டம் 'பாரதி'
'பாரதி' எனும் பெயரை சொன்னால் - கெட்ட
பயமென்னும் பகைவனை வெல்லும் என்பர்!


சுப்பிரமணிய பாரதியின் பாடல் பாடினால் 
சோம்பல், மனச்சோர்வு ஓடும் என்பர்.
சுப்பிரமணிய பாரதியை நினைத்து விட்டால் 
சுதந்தரத்தின் வேகம் எழும் என்பர் 
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் 
எல்லையற்ற உற்சாகம் எழும் என்பர்!


மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமையை கொளுத்துவோம் - எனப் 
பாடி 
பெண் உருவத்தில் பராசக்தியைக் கண்டு 
பெருமைக்கு ஏற்றம் அளித்த புலவன் என்பர் 
சாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடி - சமூக 
சீர்திருத்தங்கள் பற்பல செய்த தொண்டன் என்பர் 
எதனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று 
எட்டு திசையிலும் இசைக்க வைத்த கலைஞ்ஞன் என்பர் 


இயற்கை எழிலை ரசித்தார் - உலகில் 
எவ்வுயிரிலும் இறைவனை கண்ட ரசிகன் என்பர் 
பெற்ற தாயையும், தாய் நாட்டையும் - இரு 
கண்களாக போற்றி வளர்த்த தலைவன் என்பர் 
தமிழ் மொழியை / இனத்தை நேசித்த கவிஞ்ஞன் என்பர் 
தரணியில் உன் புகழ் ஓங்கி வளர்ந்தது என்பர் 
தமிழ்ப் புலவனா? மகாகவின்ஞனா?
இசைக் கலைன்ஞனா?
தேசத் தலைவன? சமூகத் தொண்டனா?
பார் எங்கும் புகழ் மணக்கும் பாரதி (நீ) யார்? 
தமிழ்த் தாயின் தவப்புதல்வன் - பாரதியார் 
பாரதம் கண்ட அரும்பெரும் கவிஞ்ஞன் பாரதியார் 
வாழ்க பாரதி! வளர்க அவர் தொண்டு!


            சுபம் 




                     



Enhanced by Zemanta

ஞாயிறு, 13 ஜூன், 2010

KAVITHAI

SponsoredTweets referral badge

கண்ணதாசன் 
திருமதி சாந்தா வரதராஜன் 


  அரிது அரிது கவிதை எழுதுவது - அதனினும் 
அரிது தமிழ் இலக்கிய இலக்கணத்துடன் எழுதுவது 
கவிதை உலகில் வரலாறு படைத்த 
கதாநாயகன் கவியரசு கண்ணதாசன் 


கவிஞ்ஞர் கண்ணதாசனின் எழுத்தக்கள் 
கவினார் வெண்முத்துக்கள் - அவை 
தமிழ் நாட்டின் பெரும் சொத்துக்கள் 
தன்னிகரற்ற காவிய பெட்டகங்கள்௧!


பழமைக்குள் புதுமையைப் புகுத்தியவன்
புதுயுகம் படைத்த சரித்திர நாயகன் 
மரபு,புதுக் கவிதைகள் புனைந்த கவியரசன் 
'மாங்கனி'முத்தமிழ் காப்பியம் படைத்தவன்!


நாயகன் ஓர் புதிர். முரண்பாட்டின் மொத்த உருவம் 
நாத்திகராக இருந்து, ஆத்திகரானவர் - இந்து 
மதத்திற்கு புதுவிளக்கம் அளித்தவன் -மற்ற 
மதங்களை வெறுக்கவும்,ஒதுக்கவும் இல்லை - அவன் 


 இயற்கையை ரசித்த கவிதைகள் புனைந்தாலும் 
இயற்கையோடு காதலை இணைத்து - திரை இசைப்பாடல்களில் முத்திரை பதித்த கவிஞ்ஞன் 
இன்பம், துன்பம் சமமாக கருதும் ததுவன்ஞானி 


கடவுள் தத்துவத்திற்கு மெய்யுரை கண்டவர் 
கடவுளின் படைப்பு அழிந்தாலும்,அழியாதது 
கவின்ஞனின் அற்புத படைப்புகள் என்றார் - இவரைக் 
கண்ணனைப் பாடிய ஆழ்வார் என்று போற்றுவர் மக்கள்! 


                      சுபம் 


  


                                    

HAVE A NICE DAY

ஞாயிறு, 6 ஜூன், 2010

KAVITHAI

பாரதிதாசன் 
சாந்தா வரதராஜன் 


  'தமிழககு அமுதென்று பேர் - அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' -என 
தமிழ்ப் பற்றைத் தூண்டியவன் பாரதிதாசன் 
காலம் தோற்றுவித்த கவிஞ்ஞர்களில்
நாடு, இனம்,விடுதலை என முழங்கியவன் பாரதிதாசன் 


சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவன் பாரதிதாசன் 
மூடப் பழக்கங்களை சாடியவன் - பாரதிதாசன் 
உழைப்பாளியின் உரிமைக்குரல் முழங்கியவன் பாரதிதாசன் 


உறங்கும் தொழிலாளர்  உலகைத் தட்டி 
உன்னுடைய உழைப்பினால் உயர்வுற்றது 
உன் வீடு. உன் உலகம் என முழங்கியவன் பாரதிதாசன் 
'இருக்கும் நிலை மாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை 
ஏற்படுத்துதல் பிரற்குழைக்கும் எழத்தாளர் கடனாம்'
என்ற குறிக்கோள் கொண்டவன் - பாரதிதாசன் 
வாழ்க பாரதிதாசன் வளர்க அவரது தொண்டு! 
                              
                          சுபம் 
                     



HAVE A NICE DAY