OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 27 மார்ச், 2010

BOOK RELEASE-2

 சிவ பெருமானின் மகிமையும் சிவனடியார்களும் 
   முதல்  பாகம்                                                                                
சாந்தா வரதராஜன்
contact: varadhsantha@yahoo.com
முன்னுரை  
ஆதியும், அந்தமும் இல்லா அருட்பெருன்ஜோதியானவன் சிவபெருமான்.பஞ்ச பூதங்களில் நீக்கமற நிறைந்த மாமணி ஜோதியான். சிவ சக்தி சொரூபன். "சிவபெருமானின் மகிமையும்,சிவனடியார்களும்" என்ற இந்த நூல் இரண்டு பாகங்களை கொண்டதாகும்.இதன் முதல் பாகத்தில் ஈசனின் மகிமையையும், அவர் எழுந்தருளியுள்ள திருத்தலங்களைப் பற்றியும் எழுதியுள்ளேன். இரண்டாம் பாகத்தில் சிவனடியார்களின் பக்தியையும், பெருமையையும், ஈசன் அவர்களுக்கு அளித்த 'சோதனைகளை' அவர்கள் பக்தியினால் சாதனையாக்கிக்காட்டுவதையும், சமயக்குரவர் நால்வரின் வாழ்க்கைக்குறிப்பும், அவர்கள் பாடிய பதிகங்களைப் பற்றியும் எழ்தியுள்ளேன். இறைவனைப் பற்றிய புராணங்கள், வரலாறுகள் கடலினும் பெரியவை. நான் இந்நூலில் கூறியுள்ளது சிறு துளியே ஆகும்.


  பல புராணங்கள்,புராணக்கதைகள், ஆலயங்களின் வரலாறு,பெருமை, மற்றும் பல செய்திகளை கேட்டு, அறிந்து, படித்து,உணர்ந்து அனுபவித்த பல சீரிய உயர்ந்த கருத்துகளை இந்நூலில் கூறியுள்ளேன். மேலும், சிவபெருமானின் அருவநிலை, உருவநிலை, இலிங்க தத்துவம், சிவ பூசையின் பலன்கள் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன.நம் நாட்டிலுள்ள சிவாலயங்கள் கணக்கிலடங்கா. அதில் சில சிவாலயங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளேன். சிவசக்தி தத்துவம்,   
சிவாலயங்கள் எழுப்புவதால் உண்டாகும் பலன்கள்,பஞ்ச பூதத் தலங்கள் ஜோதிர் லிங்கத் தலங்கள் போன்றவைகளைப்பட்ரியா விவரங்கள், திருத்தலங்களில் எழுந்தருளி அருள் பாலிக்கும் இறைவன், இறைவியின் மகிமை, ஆலயத்திற்கு செல்லும் வழி, இறை வழிபாட்டின் பலன்கள் போன்ற பயனுள்ள பல செய்திகளை இதிலே தொகுத்து வழங்கியுள்ளேன். மேலும், சிவபெருமானின் முக்கிய பண்டிகைகள், விரதங்கள் என்ற கட்டுரையில் இவைகள் ஏன்? எப்படி? எதற்காக? கொண்டாடுகிறோம் என்ற விபரங்களும் அதனை விளக்கும் புராண கதைகளையும் மற்றும் பலன்களும் விவரிக்கப்பட்டுள்ளன.


  உள்ளமும், உடலும் நலமுற அமைந்து ஈசனைப் பற்றி நான் இந்நூலை எழுதியது இறைவன் அருளே. எல்லாம் அவன் செயல். அவன் அருள். "எழுத்தும் அவனே. எழுதுபவனும் அவனே." எனது எழுத்துப்பணியை பாராட்டும் வகையில் எனக்கு சில விருதுகளும்,சான்றிதழ்களும் அளிக்கப்பட்டுள்ளன.


   இதனால் ஊக்கம், உற்சாகம் மற்றும் புத்துணர்வுடன் எனது எழுத்துப்பணியை தொடர்ந்து செயலாற்ற விரும்புகிறேன். எனக்கு இந்நூலை எழுதி வெளியிட எல்லா வகைகளிலும் இந்நூல் வெளிவர உறுதுணையாக இருந்து உதவி புரிந்த 
எனது கணவர்  எஸ்.வி.வரதராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்நூலுக்கு அணிந்துரை எழுதி என்னை பாராட்டி கௌரவித்துள்ள கவிஞ்ஞர் எஸ்.ரகுநாதன் அவர்களுக்கு  எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நல்ல முறையில் கணினி அச்சில் வார்த்து தந்த திரு. கணேஷ்பாபுவுக்கும், இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த கவிக்குயில் அச்சக உரிமையாளர் திரு. தேசிகவிநாயகம் அவர்களுக்கும் எனது நன்றி.


   எழுதுவதற்கான சிந்தனையையும், செயலாற்றும் திறனையும் அளித்து எனக்கு அருள் புரிந்த எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் இந்நூலை சமர்பிக்கிறேன்.


                                  - சாந்தா வரதராஜன் 
HAVE A NICE DAY !! 
                       

திங்கள், 8 மார்ச், 2010

BOOK RELEASE-1

             மார்ச் 8  உலக மகளிர் தினம்.
பெண்கள் சிறப்பிக்கப்படும் தினம்.

   நூல் வெளியீடு                                                                                                                                                      


உரத்த சிந்தனை அமைப்பின் "இலக்கிய சங்கமம்"
நிகழ்ச்சி.  27 - 02 - 2010   சனிக்கிழமை. மாலை 6  அளவில். தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடம் 
(சிற்றரங்கு)  LLA   அண்ணா சாலை சென்னை -2   
ல் நடை பெற்றது.  இந்நிகழ்ச்சியில் திருமதி 
சாந்தா வரதராஜன் அவர்கள் எழதிய 
"சிவபெருமானின் மகிமையும் சிவனடியார்களும்"
(இரண்டு பாகங்கள்) என்ற நூல் வெளியிடப்பட்டது.
நூல் முதல் பிரதி பெற்றவர்:
Dr.V.R.சந்திர மோகன் 
செயலாளர்-அனைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கம்- தி.நகர் கிளை 
ஏற்புரை:திருமதி.சாந்தா வரதராஜன்
email: "s.v.varadharajan,salem"
varadshantha@yahoo.com




                       
                                   


       
   

HAVE A NICE DAY