OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 24 டிசம்பர், 2011

vinai theerkum vinaayakar - 5

                   
                                                         SIDHI BUDHI விநாயகர்

                     வினை தீர்க்கும் விநாயகர் -5


                                                       திருமதி சாந்தா வரதராஜன்
 




HAVE A NICE DAY



    பிறகு கற்பூர ஆரத்தி காட்டி,பாடல்கள் பாடி பூசையை முடிக்கவேண்டும்.மறுநாள் 'புனர் பூசை' செய்யவேண்டும்.பிறகு அந்த பிள்ளையாரை ஆற்றிலோ குளம்,கிணறு முதலிய இடங்களிலோ தண்ணீரில் போட்டுவிடுவார்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் நமது இடையூறுகள்,தீயசக்திகள் கரைந்து நல்லது நடக்கும் என்பது ஐய்தீகம். நாம் பிள்ளையாரை அடுத்த ஆண்டு வந்து அருள்புரியுமாறு வேண்டுகிறோம்.


       நம் நாட்டில் விநாயகர் வழிபாடு தென் இந்தியாவைத் தவிர மகாராஷ்டிரம்,வங்காளம் ஆகிய இரு இடங்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரம் முதலிய இடங்களில் விநாயகரை உழவுத் தெய்வமாகவும் கொண்டாடுகிறார்கள்.(நாம் பொங்கல் திருவிழாவில் சூரிய பகவானை உழவர் கடவுளாக கொண்டாடுகிறோம்).ஆகவே விநாயகர் வழிபாட்டில் 'நெற்கதிர்' உண்டு.


     அயல்நாடுகளிலும் விநாயகர் வழிபாடு உண்டு. முக்கியமாக இந்திய நாகரிகம் வியாபித்த இடங்களில் இவ்வழிபாடு பரவியிருக்கிறது. இந்து மதத்தை போல,பௌத்தமததிலும் விக்கிரகங்களுள் 'விநாயகர்'   உருவத்தை சகஜமாக காணலாம். ஆகவே,சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மக்கள் விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். நம் நாட்டில் உள்ள சில முக்கிய சிறப்பு வாய்ந்த விநாயகர் ஆலயங்களை நோக்குவோம். அவைகள் 1. சேலம்- ராஜ கணபதி, 2 . காளஹச்தி - பஞ்சசக்தி விநாயகர். 3 . திருச்சி - மலைக்கோட்டை - உச்சிப்பிள்ளையார், 4 . மதுரை  - சந்தான கணபதி, 6 . பாண்டிச்சேரி - மணக்குள விநாயகர், 7  . ஹம்பி - கடலைகல்லு பிள்ளையார்,8 . திருவையாறு,(தஞ்சை) - பிரசன்ன கணபதி, 9 .விருதாசலம் - வல்லப கணபதி இன்னும் பல கோயில்களிலும் விசேஷமாக கணபதி எழுந்தருளியுள்ளார்.


    இக்கோயில்களுக்கு சென்று 'விநாயகப் பெருமானை' வணங்கி முழு மனதுடன் வழிபட்டால்,எடுத்த காரியம் நிறைவேறும். இன்னல்கள் தீரும். வாழ்வில் வெற்றி கிடைப்பது என்பது திண்ணம்.


சுபம் 


    

சனி, 3 டிசம்பர், 2011

vinai theerkum vinaayakar - 4

HAVE A NICE DAY


                                  

                                                             SIDHI BUDHI விநாயகர்

                                                      வினை தீர்க்கும் விநாயகர் -4


                                                       திருமதி சாந்தா வரதராஜன்
 

  கோயில்களில் அதிகாலையில் மங்கள இசை முழங்க வினாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரங்கள்,பூசைகள் இடைவிடாது நடைபெறும். மேலும் சூரியன் உதிக்கும் முன் 'கணபதி ஹோமம்' முதலிய காரியங்கள் நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்படும். கோயில்களிலும், மற்ற பொது இடங்களிலும், இசைக்கச்சேரி,பஜனை முதலியன நடைபெறும்.பொது இடங்களில் பூசிக்கப்பட்ட பெரிய உருவமாக வடிவமைந்த விநாயகரை நகர் வலம் வந்து, பின்னர் நதியிலோ அல்லது சமுதிரதிலோ விட்டு விடுவார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் வரும்படி விநாயகரை பிரார்த்திப்பார்கள். இது ஒரு ஐய்தீக முறையாகும. 


       வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம்.கோலம் போட்ட மணையில் அச்சு மண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் வைப்பார்கள். மண்டபத்தில், சின்ன வாழைக்கன்று,கட்டி, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள். பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருக்கம் பூமாலை, அருகம்புல் மாலை முதலியன அணிவித்து அலங்காரம் செய்வார்கள்.விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம்(இலை);வன்னி பத்ரம்,(இலை) அருகம்புல் இவைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என்று சொல்லப்படுகிறது.சதுர்த்தியன்று விநாயகரை இருபத்தொரு(21) வகையான இலைகளால் அர்ச்சித்தால் அர்ச்சித்தால் சிறப்பு என சொல்லப்படுகிறது. அவை, முல்லை, கரிசலாங்கண்ணி, வில்வம்,ஊமத்தை, இலந்தை,வெள்ளருகம்புல் (வேரோடு கூடியது) துளசி, கண்டங்கத்திரி, அரளி, எருக்கு, மருதை, விஷ்ணு-கிராந்தி, மாதுளை,தேவதாரு, மருவு, அரசு,ஜாதி மல்லிகை, தாழை, அகதிக் கீரை ஆகியவற்றின் இலைகளே. அர்ச்சனை செய்தபின் பலவிதமான பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம்,கொய்யாபழம்,விளாம்பழம் முதலியன நைவேத்யம் செய்யவேண்டும். இங்கு கவிகள் பாடிய கீழ்கண்ட பாடல்களை நினைவு கூறலாம்:


     "பாலும் தெளிதேனும் பாகும் பருப்ப்மிவை 
       நாளும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் 
        துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் 
       சங்கத் தமிழ்மூன்றும் தா. "            -நல்வழி 


     "கைத்தல நிறைகனி அப்பமோ டவல்பொரி கப்பிய கரிமுகன் 
       கற்றிடும் அடியவர் புதியில் உறைபவ 
        கற்பகம் எனவினை கடிதேனும்"   -திருப்புகழ் 


       மேலும் பிள்ளையாருக்கு பாயசம்,வடை,அப்பம், முதலியவைகளும் முக்கியமாக கொழுக் கட்டை பிள்ளையாருக்கு பிடித்தமானது. கொழுக் கட்டையில் மேலே மூடியிருக்கும் மாவுப்பொருள் யானைப் போர்வையாம். உள்ளேயிருக்கும் பூர்ணம், பகவானின் இனிமையான குணம். இதனை மகிமை கொண்ட கொழுக்கட்டைகளில் இருபதொன்ரை அவருக்கு நிவேதனம் செய்யவேண்டும்.


தொடரும் 


       

திங்கள், 28 நவம்பர், 2011

baradhi baaradhidhaasan virudhu

HAVE A NICE DAY


 திரு வரதராஜன் &
திருமதி வரதராஜன்
பாரதி பாரதிதாசன் விருது
30-11-2011


எஸ்.வி.வரதராஜன்

இவர் B.Com பட்டம் பெற்றவர்.டில்லியில் அரசாங்க உயர் அதிகாரியாக பணிபுரிந்து
ஒய்வு பெற்றபின் சென்னைக்கு வந்தவர்.இவர் இயல்,இசை,நாடகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.கர்நாடக இசை மிருதங்கம் முறைப்படி கற்று,தேர்ச்சிபெற்று இசைக் கச்சேரிகள் நடத்திவருகிறார்.வானொலி,தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்றுள்ளார்.சில நாடகங்களிலும் பங்கேற்றுள்ளார்.இவர் தமிழ்,ஆங்கில மாத,வார பத்திரிகைகளில் எழுதிவருகிறார்.மேலும் ஒரு வார பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்து வருகிறார்.இவர் கலை,இலக்கிய,சமூக பணிகளில் ஈடுபட்டு தன்னால் இயன்ற சேவை புரிந்து வருகிறார்.இவரது பணிகளைப்பாராட்டி 'கலைப்பனிசெல்வர்' ,'இசை மாமணி', 'முத்தமிழ் விருது' போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  

                      

வெள்ளி, 18 நவம்பர், 2011

vinai theerkum vinaayakar - 3


HAVE A NICE DAY
                         
                                               
   SIDHI BUDHI விநாயகர்

     வினை தீர்க்கும் விநாயகர் -3


  திருமதி சாந்தா வரதராஜன்
                             
       அது முதல் ஏற்பட்டது தான் இந்தக் குட்டிக் கொள்ளும் பழக்கமே. இத்தகைய சிறப்பு வாய்ந்த விநாயகப் பெருமான் இல்லாத கோயில்களே கிடையாது என்று கூறலாம். பெருமாள் கோயிலில் "தும்பிக்கை யாழ்வாராக" விநாயகரை  
பூஜிக்கிறார்கள்.


       விநாயகர் உருவம் ஒரு விந்தையான உருவம்.யானைத் தலை - மனித உடல் - பெரு வயிறு - ஐந்து கைகள் என்று மனிதனுமில்லாமல் விலங்குமில்லாமலே அமைந்திருக்கின்றது. இப்படி ஒரு கடவுள் உருவம் அமைந்திருப்பதின் உண்மை என்னவெனில்,யானைத் தலை அக்ஹ்ரிணை.தெய்வ உடம்பு உயர்திணை. ஒரு கொம்பு ஆண் தன்மை; மற்றொன்று பெண் தன்மை என்று பல தத்துவங்களை உணர்த்து கின்றது. அதாவது விநாயகர் தேவராய் - மனிதராய் , ஆணாய் - பெண்ணாய் - உயர்திணையாய், அஹ்ரினையாய் விளங்குகின்றார் என்பதை புலப்படுத்துகின்றது.அவருடைய ஐந்து கைகள், படைத்தல், காத்தல்,மறைத்தல், அளித்தல், அழித்தல் என்னும் ஐவகை தொழில்களை உணர்த்துகின்றன. பெரு வயிறு, உலகங்கள் அனைத்தையும் தம்முள் அடங்கியிருத்தலை உணர்த்துகின்றது. எல்லாவிதமான சக்திகளையும் அவர் கொண்டவர்.அறிவிற்கும் அவரே அதி தேவதை. அதே போல் செல்வத்துக்கும் இடையுஊறுகளை தவிர்ப்பவர்.விநாயகரை பிரதான தேவதையாக கொண்டு வழிபடுபவர்களுக்கு 'காணபத்யர்' என்று பெயர். அவர்கள் விநாயகரின் திறுருவங்களை ஆறு விதமாக வழிபடுகின்றனர். மகா கணபதி, ஹரித்ரா கணபதி,உச்சிஷ்ட கணபதி, நவநீத கணபதி, ஸ்வர்ண கணபதி, சந்தான கணபதி என்பனவாகும்.பக்தர்கள் விநாயகரை எப்படி த்யானிக்கிரார்களோ அந்நிலையிலேயே அவர் காட்சி தந்து அருள்வார் என்று கூறப்படுகிறது.அநேகமாக விநாயகர் வீற்றிருக்கும் நிலையில்தான் உருவங்கள் காணப்படும்.நின்ற கோலத்திலும், நர்தன கோலத்திலும், சில உருவங்கள் காணப்படுகின்றன.விநாயகரின் தும்பிக்கை தும்பிக்கை இடது பக்கமே அநேகமாக திரும்பியிருக்கும்.சில உருவங்களில் அது வலது பக்கம் சுழித்திருக்கும்.அவ்வாறு காணப்படும் விநாயகருக்கு 'வலம்புரி விநாயகர்' என்று பெயர்.இனி விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும்  முறைகள் காணலாம்.விநாயகர் சுக்ல சதுர்த்தியில் ஜனனமாகையால் அன்று (விநாயகர் சதுர்த்தி) மண்ணினால் செய்த விநாயகரைத்தான் பூஜை செய்ய வேண்டும்.காரணமென்னவெனில் பஞ்ச பூதங்களில் 'மண்' முதலாவதாகும்.முழு முதல் தெய்வம் மஹாகணபதி யாவார்.ஆகையால் மண்ணினால் செய்யப்பட்ட விநாயகரை பூசை செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.பொதுவாக கோயில்களிலும்,ஆலையங்களிலும் மேலும் சில முக்கியமான இடங்களிலும் 'சதுர்த்தி' வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படும்.இத்தகைய இடங்களில் நன்கு அலங்காரங்கள் செய்து, மாவிலை தோரணம், வாழை மரம் கட்டி, கலர் விளக்குகள் போட்டு சிறப்பாக அலங்காரங்கள் செய்வதால் அந்த இடங்கள் விழாக் கோலம் பூண்டிருக்கும்.


தொடரும் 


       

வியாழன், 13 அக்டோபர், 2011

dheebaavali-kavidhai

HAVE A NICE DAY

 தீபாவளி திருநாள்
HAPPY DHEEPAAVALI
                                  தீபாவளி திருநாள் 
   திருமதி சாந்தா வரதராஜன் 

          தீபங்கள் வரிசையாய் ஏற்றுவது 
           தீபாவளி திருநாளில் 
         தீமைகளை விரட்டி,நன்மைகளை தருவது 
           தீபாவளி திருநாளே.

        அரக்கனான நரகனை அழித்து 
        தீபாவளி திருநாளே.
         அதிகாலையில் புனித நீராடி 
         புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து 
          இனிப்போடு அறுசுவை உண்டு 
        அனைவரும் ஒன்று கூடி மகிழ்வது 
        தீபாவளி திருநாளே.

      பெரியவரிடம் ஆசிபெற்று ,சிறியவர் 
      நண்பர்களை வாழ்த்தி பரிசுகளை அளிப்பது 
      தீபாவளி திருநாளே.

      புதுமனமக்களுக்கு 'தலை'தீபாவளி 
      பொதுவாக மக்களுக்கு தலை சிறந்தது,
      தீபாவளி திருநாளே.

        இனிக்கும் 'தீபாவளி மலர்களை' படித்து 
        இனிதாய் தீபாவளி கொண்டாடுவோம்.
        இனியும் நன்மைகள் நடக்கவே-நாம் 
        இறைவனை வேண்டி வழிபடுவோம்.

               

வியாழன், 29 செப்டம்பர், 2011

vinai theerkum vinaayakar - 2

HAVE A NICE DAY


              SIDHI BUDHI விநாயகர்

     வினை தீர்க்கும் விநாயகர் -2


  திருமதி சாந்தா வரதராஜன் 


   தேவர்கள் துயர் தீர்க்க தேவியிநிடமிருந்து உண்டானவர்.ஐந்து முகங்களோடும்,பத்துக் கைகளிலும் ஆயுதங்களை எந்தியவராகவும் காட்சி அளித்தார். அவருக்கு 'வக்ரதுண்டர்' என்ற நாமம் இட்டு, சிங்கத்தை வாகனமாக கொடுத்தாள் தேவி. 'மகோர்கடர்' என்ற இயற்பெயர் இவருக்கு தந்தை மகேஸ்வரன் பினாகம்,சூலம், உடுக்கை, மழு, சடை,மதி முதலிய ஆயுதங்கள் கொடுத்து 'விரூபாட்சன்' 'பரசுபாணி', 'பால சந்திரன்' என்ற பெயர்கள் விளங்கசெய்தார்.தேவேந்திரனை போரில் வெற்றி கொண்டு, அவன் கர்வத்தை அடக்கியதால் 'தேவ தேவன்' என்ற பட்டமும் பெற்றார். பின்னர் ஈசன் இவருக்கு கற்பக விருட்சம், அங்குசம வச்சிராயுதம் ஆகியவற்றை கொடுத்து கௌரவித்தார். எந்த காரியத்திலும் விக்கினங்கள் (இடையூறுகள்) வராமல் நம்மை காப்பவர் 'விக்னேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். நான் முகனின் புதல்விகளான 'சித்தி' (ஞானசக்தி) 'புத்தி'(கிரியாசக்தி) இருவரையும் மணந்து கொண்டு 'கற்பக விநாயகராக' விளங்குகிறார்.

   நம் நாட்டில் எல்லாவிதமான தெய்வ வழிபாட்டிற்கும் 'விநாயகர் வழிபாடு' முதன்மை ஸ்தானம் பெற்றுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அவரை போற்றி வணங்குகிறார்கள். விநாயகர் பூசையில் மற்றொரு சிறப்பு அம்சம் உண்டு. அவரை வழிபடும் போது இரண்டு கை முட்டிகளாலும் தலையில் நெற்றிக்கொடியில் குட்டிக் கொள்கிறோம். நாம் நமஸ்காரம் செய்வதை விட விநாயகருக்கு இவை இரண்டுமே  அதிக பிரியமானவை என கருதப்படுகிறது. கஜமுகன் என்ற அசுரனின் தொல்லை பொறுக்க முடியாததால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். பிள்ளையார் ,தந்தையின் ஆணையை ஏற்று அந்த அசுரனை கொல்லத் தன் பூதகனங்களுடன் சென்று அந்த அசுரனை கொல்லத் தம் பூதகனங்களுடன் சென்று 'பெருச்சாளி' வடிவில் இருந்த அவன் அகந்தையை அடக்கி அவனை அவனை தமக்கு ஊர்தியாகக் கொண்டார்.தேவர்கள் மகிழ்ந்தனர்.பிள்ளையாரை வணங்கி அருள் பெற்றார்கள்.தேவர்கள் மகிழ்ந்தனர்.பிள்ளையாரை வணங்கி அருள் பெற்றார்கள்.அசுரனுக்கு தோப்புகரணம் இட்டது போல் 1008 முறை இட்டனர்.அது கண்ட பிள்ளையார் அவ்வளவு போடவேண்டாம்,மூன்று முறை போட்டால் போதும் எனக் கூறினார்.அதிலிருந்தே பக்தர்களுக்கு பிள்ளையாரின் முன் தோப்புக்கரணம் போடும் பழக்கம் ஏற்பட்டது. பிள்ளையாரை வணங்கும் போது தலையில் குட்டிக் கொள்வதற்கும் ஒரு புராண கதை உண்டு.அகத்தியரின் கமண்டலத்தை  காக்கை வடிவில் வந்த பிள்ளையார் காலால் உந்திவிட்டு கமண்டல நீர் காவிரியாக ஓடச் செய்தார். அகத்தியர் காக்கையை சீறினார். அது சிறுவனாக உருமாறி நின்றது. சிறுவனை இருகைகளாளுளும் தலையில் குட்ட ஓடினார். பிள்ளையார் தம் உண்மை வடிவை காட்டவே, அகத்தியர் தன் தவறை உணர்ந்து தாமே தம் தலையில் குட்டிக் கொண்டார். பிள்ளையார் 'அன்பனே, இன்று முதல் பக்தியுடன் நின்று தம் தலையில் குட்டிக் கொள்வோர் கூறிய அறிவும், சீரிய செல்வமும் பெற்று வாழ்வர்" என்றார்.

தொடரும் 

         

புதன், 31 ஆகஸ்ட், 2011

VINAI THEERKUM VINAAYAKAR

HAVE A NICE DAY


 SIDHI BUDHI VINAYAKAR
    வினை தீர்க்கும் விநாயகர் 


  திருமதி சாந்தா வரதராஜன் 


     நமது நாட்டில் எல்லோரும் விநாயகப் பெருமானை முதற் கடவுளாக வணங்குகிறோம். எந்த நல்ல காரியமானாலும் விநாயகரை பிரார்த்தித்து,சங்கல்பம் செய்து கொண்ட பின்னரே மக்கள் எதனையும் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.ஆகவே தான் நாம் "பிள்ளையார் சுழி" போட்டு எழுதும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது.


     "விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் 
   விநாயகனே வேட்கை தணிவிப்பான்.-விநாயகனே
   விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால் 
    கண்ணிற் பணிமின் கனிந்து."


என்ற பாடல் விநாயகப் பெருமானின் பெருமையை விளக்குகிறது.


  ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானின் பிறந்த  நாளை நாம் கொண்டாடுகிறோம். இந்த நன் நாள் 'விநாயக சதுர்த்தி' என்று கொண்டாடப்படுகிறது. முக்கண்ணன் பரமசிவனுக்கும் , மலைமகள் பார்வதி தேவிக்கும் மூத்த மகனாக அவதரித்தவர் 'விநாயகர்'.முருகப்பெருமானின் மூத்த சகோதரரான இவரது பெருமைகளை விளக்கும் வகையில் இவருக்கு பல சிறப்பு பெயர்கள் உள்ளன. பூத கணகளுக்கு தலைவனாக இருப்பதால் 'கணபதி' என்றும் , நதிக்கரையிலும் , அரசமரதடியிலும் இவர் வீற்றிருப்பதால் 'பிள்ளையார்' என்றும் ,பிறையை தலையில் அணிந்திருப்பதால் 'பாலச்சந்திரன்' என்ற திருநாமமும், வல்லபைக்கு அருளியதால் 'வல்லப கணபதி' என்றும் , சிந்துராஜன் என்ற அசுரனை வதம் செய்ததால் 'சிந்தூர' என்றும், மூஷிகன் என்ற கொடியவனை அழித்தால் 'மூழிகவாகனன்' என்றும், கஜமுகாசுரனை வதம் செய்ததால் 'கஜானன்' என்றும் பெயர்கள் உள்ளன.


தொடரும் 




   


திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ramdas60

HAVE A NICE D



  திரு இராமதாஸ் அவர்களின்
60 அகவை நிறைவு விழா
28-07-2011
அன்று திரு இராமதாஸ் & லக்ஷ்மி
தம்பதிகளை வாழ்த்தி
திருமதி  சந்தா வரதராஜன் &
திரு வரதராஜன் அவர்கள்
புனைந்த கவிதை






புதன், 6 ஜூலை, 2011

MANAKKULA VINAYAGAR,-6

HAVE A NICE DAY

 அருள் மிகு மணக்குள விநாயகர் 
                              அருள்மிகு மணக்குள விநாயகர்-6
                                                                                     புதுச்சேரி 
                                                               திருமதி சாந்தா வரதராஜன்

           இங்கு படிகலிங்கம் இருப்பதால் பிரதோஷ காலப் பூசையும் நடைபெறும். மணக்குள விநாயகர் கோயில் பிரம்மோற்சவம் (ஆண்டு பெருவிழா) பதினெட்டு நாள் விழாவாக, கொடியேற்றத்துடன் நிகழ்தப்பெருகிறது. காலை வேளையில் ஒவ்வொரு நாளும் பல்லக்கிலேலேயே உலா நாயகர் பவனிவருகிறார். முதல்  நாள் இரவில் சூரிய பிரபையிலும், இரண்டாம் நாள் காலையில் சந்திர பிரபயிலும் மாலை வெள்ளி மயில் மீதும் வீதியுலா வருவார். மூன்றாம் நாள் வெள்ளி அதிகார நந்தி உலா, ஐந்தாம் நாள் மாலை 4  மணியளவில் திருக்கல்யாணம். இரவு தங்க ரதம், ஆறாவது நாள் இரவு கற்பகவ்ரிட்சம் , ஏழாவது நாள் நாள் இரவு பெருச்சாளி வாகனம் , எட்டாம் நாள் இரவு குதிரை வாகனத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருள்வார்.ஒன்பதாம் நாள் திருத்தேர் பவனிவரும்.பத்தாம் நாள் நிறுத்த கணபதி காலையில் உலா வருவார். அன்று இரவு மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்த வாரி நடைபெறும். அன்றைய தினம் பெளர்ணமியாகும். பதினொன்றாம் நாள், மின்விளக்குகளால் அணி செய்யப்பட்ட தேரில் விநாயகர் பவனி வருவார். 12ம் நாள் இரவு மலர் பல்லக்கு பவனி வரும். 13ம் நாளிலிருந்து 17ம் நாள் வரை விநாயகர் சிறப்பு வீதி உலா நடை பெறும். 18ம் நாள் உற்சவ சாந்தியும் 108 சங்கு அபிஷேகமும் நடைபெறும். இக்கோயிலில் 'வாதுலாகமம்' பின்பற்றப்படுகிறது..

    இவ்வாறு முறைப்படி, சாஸ்திரப்படியும், பக்தி சிரத்தையுடனும் விழா வழிபாடு நடப்பது பெருமைக்குரிய செய்தியாகும்.பக்தர்கள் மணக்குள விநாயகப் பெருமானை மனம் உருக சிந்தை குளிர வழிபாடு செய்தால் அவர் திருவருள் பெற்று வளமாக வாழ்வர் என்பது உறுதி. முதற்கடவுளான கணநாதனின் முன், பக்தியுடன் நின்று வணங்குபவர்க்கு எத்தகைய துன்பங்களும் விலகி ஓடிவிடும் என்பது அனுபவப்பூர்வமாக அறிந்த உண்மை. இம்மை நலனையும், மறுமைப் பெருவாழ்வையும் ஒருங்கே அளிக்கும் இறைவன் அருள்மிகு "மணக்குள விநாயகர்" ஆவர் என்பது திண்ணம்.

சுபம் 

       








    













ஞாயிறு, 19 ஜூன், 2011

MANAKKULA VINAYAGAR,-5

HAVE A NICE DAY

அருள்மிகு மணக்குள விநாயகர்                     
                     

அருள்மிகு மணக்குள விநாயகர்-5
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்


                   பொன்போன்ற நிறமுடைய மேனியுடன் கற்பக விருட்சத்தின் அடியில் அமர்ந்து அருள் புரிகின்றார்.சித்தி,புத்தி (பிரமன் மகன்கள்) என்னும் இரு  தேவியரைக் கொண்டவர். "சித்தி  புத்தி'விநாயகர்'என்னும் பெயருடன் தமிழ்நாட்டில் அருள் பாலிக்கிறா.இவருடைய நான்கு கரங்களில் அங்குசம்,பாசம்,தந்தம்,சங்கு ஆகியவை உள்ளன.தும்பிக்கையில் கலசம் உடையதும்,மடியில் அம்மன் அமர்ந்தவண்ணம் உள்ளதும் ஆகிய திருமேநியினை இக்கோயிலில் காணலாம். தேவியோடு கூடிய கணபதியை வல்லப கணபதி என்பர்.வடநாட்டினர் இலக்குமி  கணபதி என்று வணங்குகின்றனர். இங்கு கணபதி,காத்தல் தொழில் செய்வதால் திருமாலாகவே பாவிக்கப்படுகிறார். கணபதிக்குத் திருமாலுக்குரிய சங்கு சக்கரங்கள் ஆயுதங்களாக உள்ளன.அதனால் அவர் மடியில் உள்ள தேவி இலக்குமியகக் கருதப்படுகிறார்.

     மணக்குள விநாயகர்  கோயிலை ஒட்டி வடப்புரத்தில் பெரிய திருமண மண்டபம் அமைந்துள்ளது.அவ்விடம் விழாக்காலங்களில் உர்ச்சவமூர்த்திக்குத் திருமஞ்சனம்,அலங்காரம் முதலியன செய்வதற்கும் மற்ற நாட்களில் வாகனங்கள் வைத்துக் காப்பதற்கும் பயன்படுகிறது.இக்கோயிலுக்குரிய வாகனம் களாக உள்ளவை சூரிய பிரபை ,சந்திர பிரபை,மயில் வாகனம்,அதிகார நந்தி, வெள்ளி யானை வாகனம்,கற்பக விருட்சம் ,வெள்ளி பெருச்சாளி ஆகியவை.இவற்றுடன் வெள்ளித் தேர் ஒன்றும் தங்க ரதம் (மரத்தால் செய்து தங்க ரேக் ஒட்டப்பட்டது) ஒன்றும் மரத்தேர் ஒன்றும் உள்ளன.

     பொதுவாக பூசைகள்,நித்திய பூசைகள்,நைமித்திய பூசைகள்,காமிய பூசைகள் என்றும் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. மணக்குள விநாயகர் கோயிலில் நித்திய பூசைகள் நான்கு காலப் பூசைகள் மட்டுமே நடைபெறுகின்றன.அவை காலை சந்திப் பூசை,உச்சிக்கால பூசை,சாயங்கால சந்தி, அர்த்த சாமம் என்பன. இவை முறையே,காலை  6.30 மணி, 11.00 மணி.மாலை,5  . 00  , இரவு 9.00 மணி அளவில் நடைபெறும்.இதனையடுத்துச் சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி ,மாசி மகம் போன்ற விழாக்கள் இங்கு சிறப்பானவையாகும். 

தொடரும் 

    














   

















சனி, 11 ஜூன், 2011

MANAKKULA VINAYAGAR,-4

HAVE A NICE DAY


 மணக்குள விநாயகர் 

அருள்மிகு மணக்குள விநாயகர்-4
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்




      புதுவை மணக்குள விநாயகர் கோயில் வலப்புறச் சுவரில் கணபதியின் பல்வேறு வடிவங்கள் 'சுதை' உருவில் காணப்படுகின்றன.அவற்றுள் சில வடிவங்கள் தமிழ்நாட்டில் வேறெங்கும் காணவியலாது. அவை பின்வருமாறு : பார்வதியின் இடுப்பில் புத்திர கணபதி, ஆறுமுக கணபதி,மயில் வாகன கணபதி,விட்டுணுராச கணபதி, யோக கணபதி, துண்டி கணபதி,திருமணக்கோல சித்தி, புத்தி கணபதி, பார்வதி பூசை செய்யும் கணபதி, அதைப்போல சிவன் முருகன், நம்பியாண்டார் நம்பி, இராவணன் பூசை செய்யும் கணபதி, திரு உருவங்களும் உள்ளன. பிரகாரத்தில் தென்மேற்கு கோடியில் பால கணபதி கோயில் வெள்ளித்தகடு வேயப்பட்ட விமானத்துடன் காட்சியளிக்கிறது. இங்கு எழுந்தருளும் பால கணபதி நான்கு திருக்கரங்களையுடையவர். செங்கதிர் நிறத்துடன் குழந்தை திருமேனியுடையவர்.நான்கு கைகளில் மா, பலா,வாழை,கரும்பு இவற்றைத் தாங்கியவர்.இவரது துதிக்கையில் மோதகம் விளங்குகின்றது.


   இதேபோன்று வடமேற்குக் கோடியில் பால சுப்பிரமணியர் கோயில் அமைந்துள்ளது.விமானத்தில் வெள்ளிதகடு வேயப்பட்டுள்ளது.''இளமுருகன் ' எனப்படும் இவர் ஒரு திருமுகமும், இரண்டு கைகளும் உடையவராய் வலக்கையில் தாமரை மலர் ஏந்தி, இடக்கையைத் தம் இடுப்பில் வைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இவரது திருவடிகளில் இளமைக்குரிய கிண்கிணிச் சதங்கைகள் காணப்படுகின்றன.

   மேலும் சண்டிகேஸ்வரருக்கு சிறு கோயில் உள்ளது. மடப்பளியையடுது அலுவலக அறை உள்ளது. இதனைஅடுத்து உற்சவ மூர்த்திகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மண்டபத்தில் சில கணபதி வடிவங்கள் காணப்படுகின்றன.அவற்றில் ஹரித்ரா கணபதி என்பவர் மஞ்சள் நிறமானவர்.நான்கு கைகளில் பாசம் ,அங்குசம் தந்தம்,மோதகம் இவற்றை தரித்திருப்பவர்.பக்தர்களுக்கு அபயமளிப்பவர் எனக் கூறப்படுகிறது.இவருடைய புருவம் வில்போல அமைந்திருப்பது சிறப்பு அம்சம்.நிறுத்த கணபதி அல்லது கூத்தாடும் கணபதி என்பவர் தனது கை விரல்களில் மோதிரம் அணிந்திருப்பவர்.ஆறு கரங்களையுடையவர்.பாசம்,அங்குசம்,அப்பம்,கோடரி,இவைகளைத் தரித்தவர்.

தொடரும்



    

         
http://www.amazon.com/Vinayagar-Agaval-Language-Tamil/dp/B000QLHTV6

















  















சனி, 21 மே, 2011

MANAKKULA VINAYAGAR-3

HAVE A NICE DAY


 அருள்மிகு மணக்குள விநாயகர்               

அருள்மிகு மணக்குள விநாயகர்-3
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்


       இனி கோயிலின் அமைப்பைப்பைபற்றிச் சுருக்கமாக நோக்குவோம். புதுவை கடற்கரையை ஒட்டி அரவிந்தர் ஆஸ்ரமம் வீதியில் கிழக்கு நோக்கிய சன்னிதியாய் வெள்ளை நகரின் நடு நாயகமாய் அமைந்திருப்பது "மணக்குள விநாயகர்" திருக்கோயிலாகும்.

     மணக்குள விநாயகர் திருக்கோயில், வெளிமண்டபம் இராசகோபுரம்,கொடிக்கம்பம்,முன்மண்டபம்,
கருவறை,சுற்றுச்சாலை,சுற்று  கோயில்கள்,மடப்பள்ளி,அலுவலக அறை,உற்சவ மூர்த்திக்கு மணி மண்டபம்,திருமண மண்டபம் ஆகியவைகளுடன் அமைந்துள்ளது. கருவறையில் அமர் நிலையிலுள்ள மூலனாயகராகிய விநாயகரின் நான்கு திருக்கரங்களின் மேல் இரு கரங்களில் வலக்கையில் அங்குசமும்,இடக்கையில் பாசமும் உள்ளன. கீழ் இடக்கை வரதான அமைப்பிலும் உள்ளன. கருவறையில் மூல விநாயகப் பெருமானுடன் மற்றும் ஒரு விநாயகர் திருஉருவம் சிறிய அமைப்பில் காணப்படுகிறது. மூலவருக்கு அருகில் வடதிசையில் அமைந்துள்ள இந்தத் திருமேனி தொடக்கக் கால முதற்கொண்டே எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்பது உண்மையானதாகும்.

      இதற்கடுதுத் தென்பால் இரட்டை நாகத் திருமேனி அமைந்துள்ளது. பாம்பு வழிபாட்டுடன் விநாயகர் விநாயகர் வழிபாடும் எளிதாக எங்கும் பரவும் எனக்கருதி இரட்டை நாகத் திருமேனியை அன்றே மனற்குளத்தின் கரையில் அமைத்து வஹிபட்டிருதல் வேண்டும். இரண்டு நாகங்கள் பின்னிப்பிணைந்து ஒன்றையொன்று முதமிடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளன.இந்த உருவத்தின் நடுவில் இலிங்கம் இடம்பெற்றுள்ளது.அரசும் வேம்பும் இணைந்த அது சிவமும் சக்தியும் இணைந்திருப்பதாகக் கருதப்பட்டது.இவ்விடத்தில் குளம் இருந்தது.இதன் காரணமாக இன்றும் விநாயகப்பெருமான் அருகில் வற்றாது நீர் சுரக்கும் ஒரு குழியாகக் காட்சி தருகிறது.


தொடரும்   

    












   













ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

MANAKKULA VINAYAGAR-2

HAVE A NICE DAY

 அருள் மிகு மணக்குள விநாயகர் 

அருள்மிகு மணக்குள விநாயகர்-2 
              புதுச்சேரி 
        திருமதி சாந்தா வரதராஜன்


    இந்தத் திருக்கோயில் கடற்கரையைச் சார்ந்துள்ளதால் இது காணபத்திய ஆகமப்படி அமைந்ததாகும்.இதற்கான காரணங்கள்,சாத்திரங்கள் வாயிலாகக் கூறப்படுகிறது. அதாவது விநாயகருக்கு பதினாறு மூர்த்தங்கள் உண்டு.அவற்றில் பதினான்காவது மூர்தமானது புவநேசர் என்பதாகும்.அது சமுதிரக் கரையில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும் என்று சாத்திரங்களில் விதி உள்ளது. எனவே,இத்திருத்தலம் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட தலமாகும். இந்த ஆலயமும் விநாயகரும் மிகப் பழமையானவை என்பதற்கு சரித்திரங்கள் சான்றாக உள்ளன.புதுச்சேரியில் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்,பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் ஆட்சி செய்த காலத்தில் நடந்த முற்றுகைகளையும்,போற்குமுரல்களையும், இத்தலம் சந்தித்திருக்கிறது. பகைவரிடமிருந்து மக்களைக் காப்பாற்றிய புதுவைக்கு விடுதலை வாங்கித் தந்தவர் முதற்கடவுள் விநாயகப் பெருமான் ஆவார். 

      இறைவனின் பெருமையையும், சக்தியையும் அக்காலத்தில் புதுவையில் தங்கியிருந்த பரங்கியர்கள் உணரச் செய்ய ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது. பரங்கியர்கள் தங்கள் பகுதியில் நமது ஆனைமுகப் பெருமான் தங்களுக்கு இடையுறாக இருப்பதாக எண்ணி எத்தனை எதிர்ப்புகளையும் தாங்கிநின்ற விநாயகப் பெருமானை இரவோடு இரவாகத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் எரிந்து விட்டு, அப்பாடா! இன்றோடு பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று எண்ணி தங்கள் இல்லத்திற்குச் சென்றனர். மறுநாள் காலை அவர்கள் கண்ட ஆச்சரியம்! அவர்கள் கண்களையே நம்ப முடியவில்லை! காலையில் பார்த்தால் விநாயகப் பெருமான் தான் எப்போதும் இருந்த இடத்திலேயே தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்தார். இந்த வரலாற்றுக் கதை இன்றும் இத்தலத்தில் பேசப்பட்டு வருகிறது.

தொடரும்