OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

ஞாயிறு, 30 மே, 2010

AKSHAYA THRITHIYAI - 4


அட்சய திரிதியை -4
                                                                                                திருமதி சாந்தா வரதராஜன்


  அதாவது அட்சய திரிதியை அன்று ஏழைகளுக்கு ஆடை தானம், அன்னதானம் செய்வது, கோடைகாலமாக இருப்பதால் நீர் மோர், பானகம் முதலியன கொடுக்கலாம். ஏழை, வசதியற்ற மாணவ, மாணவிகளுக்கு 'கல்வி' உதவி செய்தால் நல்லது. இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் பிணி நீங்கி, உடல் ஆரோக்கியம் சிறக்கும். மனக் கஷ்டம் நீங்கிக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும், குடும்பத்தில் திருமணம், சந்தான பாக்கியம் நிகழும் என்பர்.


  இத்தகைய சிறப்புமிக்க அட்சய திருதியையில் நாமும் பொன், பொருள், புத்தாடை வாங்கி மகிழ்ந்து, இறைவனை வழிபடுவோம்.


                          சுபம் 
முற்றும்        


HAVE A NICE DAY

ஞாயிறு, 23 மே, 2010

AKSHAYA THRITHIYAI - 3


அட்சய திரிதியை -3
                                                                                                திருமதி சாந்தா வரதராஜன்


  எனவே அட்சய திரிதியை தினத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவது மிகவும் சிறந்ததாம்.பாண்டவர்கள் காட்டில் இருந்த சமயம், அன்ன பஞ்சம் தீர்க்க, கண்ணன் அட்சய பாத்திரம் அளித்த தினமும் திரிதியை தினம்தான். குபேரன் சிவனருளால் சகல ஐஸ்வர்யத்தை அடைந்த தினமும் இதுதான். இதுபோன்று இன்னும் பற்பல நிகழச்சிகள் நடந்த தினம் அட்சய திரிதியை தினம்தான்.


   இனி அட்சய திரிதியை தினத்தில் செய்ய பூசை முறைகளைச சுருக்கமாக நோக்குவோம். அந்நாளில் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து, பூசை அறையில் கோலம் போட வேண்டும். லஷ்மிநாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன்(அவரவர்கள் விருப்பபடி) படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்றவேண்டும். குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் கோலதின்மீது பலகை வைத்துக் கோலம் போடவும்.ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன்,வெள்ளி, சிறிய நகைகள் போடவும்.அதற்கு சந்தனம், குங்குமம் இடவேண்டும். அதன்மீது மஞ்சள் பூசிய தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும்.இதற்கு முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன்மீது விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயசம் நைவேத்யம் செய்யலாம். 


   இவ்வாறு பூசை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும் என்பர். அட்சய திரிதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாகும்.


தொடரும்                                     



HAVE A NICE DAY

ஞாயிறு, 16 மே, 2010

AKSHAYA THRITHIYAI -2


அட்சய திரிதியை 
                                                                                                திருமதி சாந்தா வரதராஜன்




   இனி இறைவர்களோடு அட்சய த்ரிதியைக்குத் தொடர்புள்ள சில புராணச் செய்திகளை சுருக்கமாக நோக்குவோம். சிவமும், சக்தியும் இணைந்த சிவசக்தியாக மக்கள் வழிபடுகின்றார்கள்.க்ரிஷ்ணபட்சதை அதாவது அமாவாசையாகத் தேய்ந்து போய்க் கொண்டிருந்த சந்திரன், வளர்பிறையாக மாறக் காரணமான சிவன் ஆசியளித்து திரிதியை தினம்தான். அதனால் வளர்பிறை திரிதியை தினமானது அட்சயம் என்ற சொல்லுடன் இனைந்து அட்சய த்ரிதியையாகச் சிறப்புற்றது.




  மஹாலஷ்மி, மகாவிஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்த தினம் வளர்பிறை திரிதியை தினத்தில் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.மேலும், குசேலர் வீட்டிற்கு வந்ததாக கதை. இந்தச் சம்பவம் நடந்த தினம் அட்சய திரிதியை தினத்தன்றுதான் என்று கூறப்படுகிறது. ஆகவே அன்று குசேலர் சரித்திரத்தை படித்தால் குடும்பத்தில் வறுமை நீங்கும் என்பது ஐதீகம். 


   மகாபாரதத்தில் துச்சாதனன் இராஜ சபையில் பாஞ்சாலியின் துகிலை உரிய ஆரம்பித்தவுடன், பாஞ்சாலி, தன் மானம் காக்கக் கதறி அழுதாள். அவளுடைய அபயக் குரல் கேட்ட கண்ணன், அங்கேயே இருந்து அட்சயம் என்று சொன்னான். திரௌபதியின் புடவை குறையில்லாமல் வளர்ந்தது. இந்தச் சம்பவம் நடந்ததும் திரிதியை தினம்தான் என்று இதிகாசம் கூறுகிறது. எனவே அன்று புதிய ஆடை வாங்குவது சிறப்பாகக் கருதப்படுவதால் இன்றும் இப்பழக்கம்  மக்களிடையே இருந்து வருகிறது. அகிலத்திற்கும் அன்னையாக விளங்கும் அன்னபூரணி உலகிற்கு அன்னம் அளிக்க ஆரம்பித்த தினம் ஒரு திரிதியை தினம்.




தொடரும் 


HAVE A NICE DAY.






         


  



HAVE A NICE DAY

சனி, 8 மே, 2010

AKSHAYA THRITHIYAI -1

                                              
  GODDESS LAKSHMI
KUBERA YANTHRAM 
                    
அட்சய திரிதியை 
                                                                                                திருமதி சாந்தா வரதராஜன் 

   அட்சய திரிதியை ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசைக்கு மூன்றாம் நாள் வரும். அன்று திருத்தலங்களுக்குச் சென்று இறையருள் பெறுவதால் வாழ்வு நலம் பெரும். அன்று, நல்லது எது செய்தாலும் ஒன்றுக்கு மூன்றாக இறைவன் பலன் கொடுப்பார் என்பர். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்-மே மாதம் 'அட்சய திரிதியை தினம்' கொண்டாடப்படுகிறது.


   'க்ஷயம்' என்றால் தேய்தல், குறைந்து போதல்,மறைதல் எனப்பல பொருள் உண்டு. 'அஷ்ய்யம்' என்றால் 'வளர்தல்' 'நிறைதல்'என்று பொருள்.'திரிதியை' என்றால் மூறாவது என்பதாகும். 'திதி' என்பது நாள், தினம் என்று பொருள். திதி (நாட்கள்)களில் சிறப்பு பெற்றது 'அட்சர திரிதியை' என்று மகாகவி காளிதாசர் தாம் அருளிய 'உத்திர காலாமிருதம்' என்ற நூலில் கூறியுள்ளார். அட்சயம் என்றால் வளருதல் எனப்படுவதால் அள்ள அள்ள வளர்ந்து கொண்டது அட்சய பாத்திரம். அதுபோல் அட்சய திரிதியை என்பது செல்வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாள். அட்சய திரிதியையன்று நாம் பூசிக்க வேண்டிய முக்கிய கடவுள்கள் மஹா விஷ்ணு, மஹாலஷ்மி, பரமசிவன், பார்வதி, அன்னப்பஞ்சம் போக்கும் அன்னபூரணி, கல்விச் செல்வம் தரும் கலைமகள், குறையற்ற நிதியம் தரும் குபேரன் போன்றவர்கள். அட்சய திரிதியையன்று பொன்னும் பொருளும் வாங்கி, பூசைகள் செய்து இறைவனை வணங்கினால் நன்மை உண்டாகும் எனக் கூறப்படுகிறது.


தொடரும் 
HAVE A NICE DAY.


                       
              
                                         
HAVE A NICE DAY

சனி, 1 மே, 2010

SIVAPPARAMPORUL-3

சிவப்பரம்பொருள்- 3  
 சாந்தா வரதராஜன் 
 varadshantha@yahoo.com        

   
   பிரமன் அன்னமாக மாறி வானிலே பறந்து சென்றார்.மாதவன் பன்றியாக உருவெடுத்து பூமியைப் பிளந்து கொண்டு சென்றார். போகப் போக முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போயிற்று; ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல; ஆயிரம் ஆண்டுகள் இருவரும் தங்கள் முயற்சியைக் கை விடாது மேற்கொண்டு அடியையோ, முடியையோ காணமுடியவில்லை. அவர்கள் மிகவும் களைத்து உடல் சோர்ந்து விட்டனர். இனியும் மேலே செல்ல முடியாது என்று தோன்றியதும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்தனர்.

    இதுவரை அவர்களிடம் குடி கொண்டிருந்த ஆணவம் அகன்றுவிட்டது. தாங்களே முதல்வர் என்றும் தங்களுக்கு மிஞ்சியவர் யாருமில்லைஎன்ரும் அவர்கள் கொண்டிருந்த எண்ணம் தவறு என்பதை உணர்ந்தனர். அவர்களுக்கும் மேலான ஒரு பொருள் இருப்பதை அவர்கள் கண் கூடாகக் கண்டனர். இருவரும் கை கூப்பி அனற்பிழம்பாக நிற்கும் அப்பொருளை நமஸ்கரிதனர்.  "அடிமுடி கானாப்பொருளே, தாங்கள் யார் என்பதை எங்களுக்கு உணர்த்த வேண்டும்"என்று பிரார்த்தித்தனர். அப்போது அண்டம் கிடுகிடுக்கப் பேரொலி ஒன்று எழுந்தது. அவ்வொலி அடங்கியபோது ஈசானம், தத்புருஷம்,அகோரம்,வாமதேவம்,சத்யோசாதம் என்ற ஐந்து முகங்களுடன் சடையிலே பிறைச் சந்திரன் தன் கதிர் ஒளி வீச, கையிலே மானும், மழுவும், தாங்கியவாறு ஈசன் அவர்களுக்குத் தரிசனம் கொடுத்தார். அதைக் கண்டதும் இவருடைய மேனியும் புளகாங்கிதம் அடைந்து, நெடுஞ்சாண் கிடையாகத் தரையிலே விழுந்து பரம் பொருளை நமஸ்கரிதனர்.

  அவர்களுடைய மேனி நடுங்கியது. கண்களிலிருந்து நீர்பெருக்கெடுத்து வழிந்தது. நெஞ்சம் பக்தியால் தழுதழுத்தது. கைகள் கூப்பி அவரை வணங்கினர். கானக்கிடைதர்கரிய பரம்பொருளே, கேடின்றி உயர்ந்த பரஞ்சுடரே, கடலில் எழுந்த 'விடம்' உண்டு எம்மைக் காத்த பெருமானே, படைத்தும், அழித்தும், கடைநாளில் எவ்வுலகும் பாழ்பட்டு ஒழியத் துடைத்தும் விளையாடுகின்ற ஈசனே, உம்மைப் போற்றி வணங்குகின்றோம். பிறை சூடிய பெருமானை, அரிய தவம் இயற்றும் அன்பர்களுக்கு அருளும் அருட்கடலே, கங்கையைத் தாங்கிய கருணாகரனே, உம்மை அடி பணிந்து வணங்குகின்றோம். அரியனாய், நான் மறைக் கொழுந்தாய், அமலமாய், அழிவின்றி எரியும் கனலாய், கதிர்ச்சுடராய், உருவாய், அருவாய், சின்மயமாய், உள்ளும் புறமும் உணர்வரிய துரியதீதமாய் நின்ற அருட்பெரும்கடலே, உம்மை சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம் என்று இருவரும் ரோமாஞ்சனம் கொண்டவர்களாய்த் துதித்தனர்.

தொடரும் 

HAVE A NICE DAY

                   




HAVE A NICE DAY


HAVE A NICE DAY