OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

DHANVANTHIRI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DHANVANTHIRI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 12 பிப்ரவரி, 2011

DHANVANTHIRI- MARUTHUVAKKADAVUL-6

HAVE A NICE DAY


 தன்வந்திரி பகவான்               
DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-6      


திருமதி சாந்தா வரதராஜன்          


            தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் எதிர்காலத் திட்டங்கள் பல உள்ளன. முதியோர் இல்லம், மருத்துவமனை, அன்னதானக் கூடம், தியான மண்டபம் போன்றவை அமைக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இத்தகைய பெருமையுடைய,சக்தி வாய்ந்த ஸ்ரீதன்வந்திரி பகவானை எளிய முறையில் இல்லறங்களில் வழிபடலாம். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டுப் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும்.தன்வந்திரி, திருமாலின் அம்சம் என்பதால் மகாவிஷ்ணுவின் படம் வைத்து அதற்குப் பொட்டு வைத்துப் பூப்போட்டு, துளசி மணி மாலை அணிவிக்க வேண்டும். தன்வந்திரி மந்திரங்களைப் பக்தியுடன் சொல்லி, 

  "அமுதத்தை ஏந்தி நிற்கும் அருள் கரத்தோய் சரணம் 
   குமுதச் செல்வி மணவாளன் குனவடியே சரணம் 
    சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம் 
    தாய்போல தரணி காக்கும் தன்வந்திரியே சரணம்"

 என வேண்டிக் கொள்ளவேண்டும். 

    தூய, தீபம் காட்டிய பின், பாயசம் நிவேதனம் செய்யலாம்.

    இவ்வாறு ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனதார வணங்கி வழிபாடு செய்தால் பக்தர்களின் இல்லம் நோய்கள் ஏதும் அண்டாத ஆரோக்கியமான வீடாக விளங்கும் என்பது திண்ணம்.

சுபம் 

   














   

















   

சனி, 29 ஜனவரி, 2011

DHANVANTHIRI-5


 HAVE A NICE டே

 தன்வந்திரி பகவான் 
  DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-5

திருமதி சாந்தா வரதராஜன் 

       தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் எதிர்காலத் திட்டங்கள் பல உள்ளன. முதியோர் இல்லம்,மருத்துவமனை, அன்னதானக் கூடம், தியான மண்டபம் போன்றவை அமைக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது. 

   இத்தகைய பெருமையுடைய,சக்தி வாய்ந்த ஸ்ரீதன்வந்திரி பகவானை எளிய முறையில் இல்லறங்களில் வழிபடலாம். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டுப் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். தன்வந்திரி, திருமாலின் அம்சம் என்பதால் மகாவிஷ்ணுவின் படம் வைத்து அதற்குப் பொட்டு வைத்துப் பூப்போட்டு, துளசி மணி மாலை அணிவிக்க வேண்டும். தன்வந்திரி மந்திரங்களைப் பக்தியுடன் சொல்லி, 

   "அமுதத்தை ஏந்தி நிற்கும் அருள் கரத்தாய்              சரணம்           
     குமுதச் செல்வி மணவாளன் குனவடியே சரணம் 
       சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம் 
       தாய்போல தரணி காக்கும் தன்வந்திரியே சரணம்" 

       என வேண்டிக் கொள்ள வேண்டும்.

     தூப,தீபம் காட்டிய பின், பாயசம் நிவேதனம் செய்யலாம்.

      இவ்வாறு ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனதார வணங்கி வழிபாடு செய்தால் பக்தர்களின் இல்லம்  நோய்கள் ஏதும் அண்டாத ஆரோக்கியமான வீடாக விளங்கும் என்பது திண்ணம்.

                             சுபம் 

                                                                  

   













Thridosha Siddhaantha

  

சனி, 8 ஜனவரி, 2011

DHANVANTHIRI- MARUTHUVAKKADAVUL-4

HAVE A NICE DAY

 தன்வந்திரி பகவான்
                                

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-4


திருமதி சாந்தா வரதராஜன்                    
     அனைத்து விதமான சர்ப்ப தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் இவ்வுருவம் அமைந்துள்ளது. மேலும் இதே சமயத்தில் சக்கரத்தாழ்வாரும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.


   27 நட்சத்திரங்களுக்கும் 12 ராசிகளுக்கும் முறையே அமைந்துள்ள யாக குண்டங்களில் அவர் அவர்களுக்குரிய ஹோம குண்டங்களில் அவர்களே உலக ஷேமதிற்காகவும், குடும்ப ஷேமதிற்காகவும்  விசேஷ நாட்களில் ஹோமங்கள் செய்து பலன் பெற்று வருகின்றனர்.இங்கு வரும் பக்தர்கள், இங்கு அமைந்துள்ள நித்திய நோய் நிவாரண ஹோமத்தில் தங்கள் வேண்டுதலுக்கேற்ப, பலவிதமான மூலிகளைக் கொண்டு சங்கல்பம் செய்து, மந்திரங்கள் ஜபித்து ஹோமங்கள் செய்து நோய்களிலிருந்து நிவாரணம் பெறுகின்றனர். அமாவாசை, பௌர்ணமி, சுவாதி, அஸ்தம்,திருவோணம் நாட்களில் நோய் தீர்க்கும் ஒவ்ஷதம் வழங்கப்படுகிறது. சங்கடங்களை தீர்க்கும் ஸ்ரீ சுதர்ஷன ஆழ்வார், இங்கு விசேஷமான சக்கர வடிவில் 16 விதமான கைகளைக்கொண்டு 16 விதமான ஆயுதங்களுடன், சங்கு சக்கரத்துடன் அழகிய திருமுகத்துடன் ஷட்கொணத்தில் சிரித்த முகத்துடன் அமைந்துள்ளார். இவரை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷ வாழ்வைப் பெறலாம். இங்கு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் காட்சி அளிக்கின்றார்.இவர் ஒரு கையில் சஞ்சீவி மலை, மற்றொரு கையில் கதை தாங்கி தன் மார்பில் ஸ்ரீஇராமபிரானை ஏற்றுக்கொண்டு வாலில் மணியைக் கொண்டு 8-1/2  அடி உயரத்தில் நின்ற கோலத்தில் உருவாக்கப்பட்டு விளங்குகிறார்.


  'Service to mankind is service to God' என்பதற்கேற்ப, இங்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமைகளில் அன்ன தானமும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச மருத்துவ முகாமும் நடைபெறுகிறது. இலவச மருத்துவப் பரிசோதனையுடன், இலவசமாகத் தேவையான மருந்துகளும் மருத்துவ முகாமிலேயே உடனே வழங்கப்படுகிறது. 


   தொடரும் 


     










 Dhanvantari
Studies on Medicinal Plants and Drugs on Dhanvantari Nighantu


Bharata ke pranacarya =: Indian masters of the science of life : Asvinikumara, Dhanvantari, Susruta, Atreya Punarvasu, Kasyapa, Kumara Bhartr Jivaka, Caraka, ... aura samskrti ka gaveshanapurna paricaya


                     

சனி, 1 ஜனவரி, 2011

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-3

HAVE A NICE DAY

 தன்வந்திரி பகவான் 
        


DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-3


திருமதி சாந்தா வரதராஜன்


    இவ்வாறு அமைக்கப்பட்ட கர்ப கிருகத்தின் மேல் இன்னொரு கர்ப்ப கிருகம் அமைக்கப்பட்டு அதன் மேல் 'தன்வந்திரி பெருமாள்' ஏழு அடி உயரத்தில் பத்ம பீடத்தில், நின்ற கோலத்தில் சதுர்புஜங்களுடன் சங்கு ,சக்கரம், அமிர்த கலசம், மற்றும் சிந்தல் கொடி என்னும் மூலிகைச் செடியும் வைத்துள்ளார்.மருத்துவருக்கான 'ஸ்டெதாஸ்கோப்' கைக்கடிகாரம் அணிந்து கொண்டு  மகாலட்சுமியைத் தன் மார்பில் கொண்ட புன்சிரிப்புடன் காருண்ய முகத்துடன் பாண்டுரங்கனாகவும், குருவாயுரப்பனாகவும் காணவரும் பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்துக்  கொண்டு இருக்கிறார்.


   இனி இக்கோயிலின் மற்ற பிரகாரங்களையும், தெய்வங்களையும் காணலாம். இங்கு ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ வினை தீர்க்கும் விநாயகர்,பிணி தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஆலயத்தில் மரணபயம் போக்கி,மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீ மகிஷாசுர மர்தினி 8  அடி உயரம், 4  அடி அகலமும் கொண்ட உருவமாக 18  கைகளில் 18  ஆயுதங்கள் தாங்குபவளாக வெற்றிக் களிப்பில் மகிழ்ச்சி கொண்டவளாக வடிவமைக்கப்பட்டுக் காட்சி தருகின்றாள். மகிஷனை வென்று சிம்ம வாகிநியாகச் சிரித்த முகத்துடன் அருள் பாலிக்கின்றாள். அன்னைக்கு அணிவித்திருக்கும் கால் கொலுசு சிலையோடு ஒட்டி இனைந்து அமைந்திருப்பது அற்புதக் காட்சியாகும். அடுத்து,நாகருடன்  எட்டு நாக ஆபரணதுடன், புன்முறுவலோடு, கஷ்டம் தீர்க்கும்  ' அஷ்ட நாக கருடன்' வடிவில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.   வியாதிகள் அகல அருள் புரிகிறார். இந்த ஆலயத்தில் மற்றொரு சிறப்பு அம்சம், மாதா , பிதாவை நினைத்து அவர்களை வேண்டி வணங்கி, நினைவூட்டிக் கொண்டு, விஷ்ணு பாதத்தில் பூக்கள் சார்த்தி நேர்த்திக் கடனை முடிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிதுர்தோஷம் நீங்கி, நமது நோய்கள் தீர வழி கிடைக்கும். அடுத்து, அரச மரமும் வேப்ப மரமும் இனைந்து அதன் கீழ் ஏக ரூபம், ஏக சரீரம், ஏக தரிசனம் என்ற முறையில், உடல் பாகம் கேதுவாகவும், தலைபாகம் ராகுவாகவும், கால்பாகம்   பாம்பாகவும் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராகு - கேது சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


தொடரும் 


   










 Tanvantiri pakavan tailam 500: Olaic 
cuvatiyiliruntu
The panchakarma treatment of Ayurveda
Ayurveda vidhata: Mahakavya (Hindi Edition)
Curacintamani





திங்கள், 27 டிசம்பர், 2010

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-2

HAVE A NICE DAY

     DHANVANTHIRI BAGAVAAN    


DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-2


திருமதி சாந்தா வரதராஜன்

  பின்னர் 'மகாவிஷ்ணு', 'மோகினி' அவதாரம் எடுத்து அமுதத்தினை தேவர்களுக்கு அளித்தார் என்பது புராண வரலாறு. விண்ணுலகினர் நலனுக்காக அமுதினைத் தந்த தன்வந்திரி பகவான் , மண்ணுலகினர் {நலனுக்காக] ஆரோக்கியத்திற்காக 'ஆயுர்வேதம்' அருளினார்.தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம் என்று புராணங்கள் கூறுகின்றன. மண்ணுலக மக்களைக் காக்க மனம் கொண்டார். எனவே காசிராஜனின் மகனாகப் பிறந்தார். பல சித்தர்களிடம் கிரந்தங்களைக் கேட்டறிந்தார். அதன் பின் ஆயுளைக் காப்பதும், வேதத்திற்கு நிகரானதுமான மருத்துவ முறைகளை நூலாக எழுதினார். அதுவே ஆயுள் [ஆயுர்] வேதமாகும்.


     வேலூர் மாவட்டம், சென்னை - பெங்களூர்  சாலையில் வாலாஜாபேட்டை, கீழ் புதுப்பேட்டையில்,'' ஸ்ரீ தன்வந்திரி பகவான்'' ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. இராஜஸ்தான், கேரளா போன்ற பல இடங்களிலும் , தமிழகத்தில் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், சென்னை, சேலம், ஆகிய பல இடங்களிலும் பிரகார சந்நிதிகளில் தன்வந்திரிக்கு இடம் உண்டு. ஆனால் இவருக்கு எனத் தனிக்கோயில் உலகத்திலேயே  இங்கு மட்டும்தான் உள்ளது.


      இனம்,மொழி,ஜாதி,மதம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து இந்த ஆலயம் அமைவதற்குப் பாடுபட்டு உள்ளனர்.


     இந்த ஆலயத்தில் கர்ப க்ருகதின்கீழ் 15  அடி ஆழத்தில் ஏழு அங்குலம் விட்டத்தில் செப்புக் குழாயின் நடுவின் ஏறத்தாழ 48 இலட்சம் பக்தர்களால் கைப்பட எழுதிய 54  கோடி மந்திரங்கள் 13  மொழிகளில் எழுதப்பெறப்பட்டு இந்தக் கர்ப கிருகத்தின் கீழ் வியக்கத்தக்க அளவில் யந்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஓர் உலகச் சாதனையாகும். பக்தர்கள் கைப்பட எழுதிய இம்மகா மந்திரங்களுக் கஜபூஜை, கோபூஜை 1008  சுமங்கலி பூசை செய்து அமைக்கப்பட்டுள்ளது.


தொடரும் 


    










The fundamentals of Yoga Vyaayaama: Presidential address
The future of Ayurveda
Thrigunaas in health and disease






        

செவ்வாய், 14 டிசம்பர், 2010

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL

HAVE A NICE DAY

       
தன்வந்திரி பகவான்
       

        திருமதி சாந்தா வரதராஜன் 

                உலக உயிர்கள் யாவும் இன்புற்று வாழவும், மாந்தர்கள் தம் உடல் நோயும், அதனால் வரும் உள்ளபிணியும் நீங்குவதற்கும் கருணைக்கடல் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் அருள் வேண்டும்."Health is Wealth"  என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப உடல் நலத்தோடு இருந்தால்தான் மற்ற எல்லாம் தானே வந்து சேரும் என்பர்.எந்த உடல் நலக்குறைவும் வராமல் இருக்கவும், அப்படி வந்தால் மிக விரைவாகக் குணமாகவும், ஆரோக்கியம் நிலைக்கவும், மக்களுக்கு "தன்வந்திரி" பகவானின் ஆசி பூரணமாக கிட்டுவதற்கு கீழ்காணும் மந்திரங்களைப்  பக்தியுடன் கூறினால் நன்மை உண்டாகும்.


       "ஓம் நமோ பகவதே வாசு தேவாய தன்வந்தரையே அமிர்த கலச ஹஸ்தாய,
          சர்வாமய வினாசனாய, த்ரைலோக்ய நாதாய ,ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா"      


   இதன் பொருளாவது "மகா விஷ்ணுவின் மறு அவதாரமான ஸ்ரீ தன்வந்திரி பகவானே! அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி எல்லா உயிர்களின் நோய்களைக் குணப்படுத்தும், மூன்று உலகங்களுக்கும் தலைவனே! வணங்குகிறோம் உன்னை! நலம் தருவீர் உடனே!"


   ஸ்ரீ தன்வந்திரி பகவான் எவ்விதம் உதயமானார் என்பதை முதலில் அறிவோம். ஆயுளும் ஆரோக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக, அமரர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அமுத கலசத்தினைக் கரங்களில் ஏந்தி வெளிப்பட்டார் தன்வந்திரி பகவான். வெண் பட்டாடை ஒளி வீச,அமுதக் குடத்துடன் தோன்றிய அவரைக் கண்டதும் சுரர்களும், அசுரர்களும் ஆனந்தம் அடைந்தனர்.


 தொடரும்