OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 1 ஜனவரி, 2011

DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-3

HAVE A NICE DAY

 தன்வந்திரி பகவான் 
        


DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-3


திருமதி சாந்தா வரதராஜன்


    இவ்வாறு அமைக்கப்பட்ட கர்ப கிருகத்தின் மேல் இன்னொரு கர்ப்ப கிருகம் அமைக்கப்பட்டு அதன் மேல் 'தன்வந்திரி பெருமாள்' ஏழு அடி உயரத்தில் பத்ம பீடத்தில், நின்ற கோலத்தில் சதுர்புஜங்களுடன் சங்கு ,சக்கரம், அமிர்த கலசம், மற்றும் சிந்தல் கொடி என்னும் மூலிகைச் செடியும் வைத்துள்ளார்.மருத்துவருக்கான 'ஸ்டெதாஸ்கோப்' கைக்கடிகாரம் அணிந்து கொண்டு  மகாலட்சுமியைத் தன் மார்பில் கொண்ட புன்சிரிப்புடன் காருண்ய முகத்துடன் பாண்டுரங்கனாகவும், குருவாயுரப்பனாகவும் காணவரும் பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்துக்  கொண்டு இருக்கிறார்.


   இனி இக்கோயிலின் மற்ற பிரகாரங்களையும், தெய்வங்களையும் காணலாம். இங்கு ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ வினை தீர்க்கும் விநாயகர்,பிணி தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறார். இந்த ஆலயத்தில் மரணபயம் போக்கி,மாங்கல்ய பலம் அளிக்கும் ஸ்ரீ மகிஷாசுர மர்தினி 8  அடி உயரம், 4  அடி அகலமும் கொண்ட உருவமாக 18  கைகளில் 18  ஆயுதங்கள் தாங்குபவளாக வெற்றிக் களிப்பில் மகிழ்ச்சி கொண்டவளாக வடிவமைக்கப்பட்டுக் காட்சி தருகின்றாள். மகிஷனை வென்று சிம்ம வாகிநியாகச் சிரித்த முகத்துடன் அருள் பாலிக்கின்றாள். அன்னைக்கு அணிவித்திருக்கும் கால் கொலுசு சிலையோடு ஒட்டி இனைந்து அமைந்திருப்பது அற்புதக் காட்சியாகும். அடுத்து,நாகருடன்  எட்டு நாக ஆபரணதுடன், புன்முறுவலோடு, கஷ்டம் தீர்க்கும்  ' அஷ்ட நாக கருடன்' வடிவில் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.   வியாதிகள் அகல அருள் புரிகிறார். இந்த ஆலயத்தில் மற்றொரு சிறப்பு அம்சம், மாதா , பிதாவை நினைத்து அவர்களை வேண்டி வணங்கி, நினைவூட்டிக் கொண்டு, விஷ்ணு பாதத்தில் பூக்கள் சார்த்தி நேர்த்திக் கடனை முடிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பிதுர்தோஷம் நீங்கி, நமது நோய்கள் தீர வழி கிடைக்கும். அடுத்து, அரச மரமும் வேப்ப மரமும் இனைந்து அதன் கீழ் ஏக ரூபம், ஏக சரீரம், ஏக தரிசனம் என்ற முறையில், உடல் பாகம் கேதுவாகவும், தலைபாகம் ராகுவாகவும், கால்பாகம்   பாம்பாகவும் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராகு - கேது சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


தொடரும் 


   










 Tanvantiri pakavan tailam 500: Olaic 
cuvatiyiliruntu
The panchakarma treatment of Ayurveda
Ayurveda vidhata: Mahakavya (Hindi Edition)
Curacintamani





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments