![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgumrq_5dhn9AyW1QQxYtJKtVGL5q_2QoniwAmgKdcXukd4AH683lj-uomj5O2Gkdxymf-4iSqquACk2EhijsCTiRq5ohZyQ794PMFk3wL0-hEnJMDFdUrmHAPlpLJElSMl01T983lprzc/s640/dhanvanthari-1.jpg)
DHANVANTHIRI BAGAVAAN
DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-2
திருமதி சாந்தா வரதராஜன்
பின்னர் 'மகாவிஷ்ணு', 'மோகினி' அவதாரம் எடுத்து அமுதத்தினை தேவர்களுக்கு அளித்தார் என்பது புராண வரலாறு. விண்ணுலகினர் நலனுக்காக அமுதினைத் தந்த தன்வந்திரி பகவான் , மண்ணுலகினர் {நலனுக்காக] ஆரோக்கியத்திற்காக 'ஆயுர்வேதம்' அருளினார்.தன்வந்திரி மகாவிஷ்ணுவின் அம்சம் என்று புராணங்கள் கூறுகின்றன. மண்ணுலக மக்களைக் காக்க மனம் கொண்டார். எனவே காசிராஜனின் மகனாகப் பிறந்தார். பல சித்தர்களிடம் கிரந்தங்களைக் கேட்டறிந்தார். அதன் பின் ஆயுளைக் காப்பதும், வேதத்திற்கு நிகரானதுமான மருத்துவ முறைகளை நூலாக எழுதினார். அதுவே ஆயுள் [ஆயுர்] வேதமாகும்.
வேலூர் மாவட்டம், சென்னை - பெங்களூர் சாலையில் வாலாஜாபேட்டை, கீழ் புதுப்பேட்டையில்,'' ஸ்ரீ தன்வந்திரி பகவான்'' ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. இராஜஸ்தான், கேரளா போன்ற பல இடங்களிலும் , தமிழகத்தில் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், சென்னை, சேலம், ஆகிய பல இடங்களிலும் பிரகார சந்நிதிகளில் தன்வந்திரிக்கு இடம் உண்டு. ஆனால் இவருக்கு எனத் தனிக்கோயில் உலகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளது.
இனம்,மொழி,ஜாதி,மதம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து இந்த ஆலயம் அமைவதற்குப் பாடுபட்டு உள்ளனர்.
இந்த ஆலயத்தில் கர்ப க்ருகதின்கீழ் 15 அடி ஆழத்தில் ஏழு அங்குலம் விட்டத்தில் செப்புக் குழாயின் நடுவின் ஏறத்தாழ 48 இலட்சம் பக்தர்களால் கைப்பட எழுதிய 54 கோடி மந்திரங்கள் 13 மொழிகளில் எழுதப்பெறப்பட்டு இந்தக் கர்ப கிருகத்தின் கீழ் வியக்கத்தக்க அளவில் யந்திரமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஓர் உலகச் சாதனையாகும். பக்தர்கள் கைப்பட எழுதிய இம்மகா மந்திரங்களுக் கஜபூஜை, கோபூஜை 1008 சுமங்கலி பூசை செய்து அமைக்கப்பட்டுள்ளது.
தொடரும்
The fundamentals of Yoga Vyaayaama: Presidential address
The future of Ayurveda
Thrigunaas in health and disease
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments