இனி,அருள்மிகு மணக்குள விநாயகர் புராணம் வரலாறு,திருக்கோயில் தொன்மை,சிறப்பு,திருக்கோயில் அமைப்பு,வழிபாடு விழாக்கள் ஆகியவற்றை சற்று நோக்குவோம்.புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் தங்களுக்காக ஒரு கோட்டையை கட்டிக்கொண்டனர்.அக்கொட்டைக்குப் பின்புறம் அமைந்திருந்த திருக்கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயிலாகும். இக்கோயில் இருக்கும் இடத்திற்குச் சமீபத்தில் மேலண்டைப் பகுதியில் ஒருகுளம் இருந்ததாகவும்,அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக இருந்ததாகவும், அதன் காரணமாக அக்குளத்திற்கு "மணற்குளம்" என்று பெயர் வந்ததாகவும் சான்றுகளுடன் கூருவர்.இந்த மனக்குளத்தின் கீழ்கரையில்தான் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இதனால் இந்த ஆலயத்திற்கு 'மணற்குள விநாயகர் ஆலயம்' என்று பெயர் ஏற்பட்டது.
தற்சமயம் இந்த ஆலயத்தின் அருகில் குளம் ஏதும் இல்லை. காலப்போக்கில் மறைந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமாள் மனர்குளதுப் பிள்ளையார் என்றும், மனர்குலத் தாங்கரைப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுவதால், இங்கு 'மணற்குள விநாயகர்' என்பதே இவ்வினாயகப் பெருமான் பெயர் என்பது சந்தேகமின்றி விளங்குகின்றது.இன்றைக்கும் கருவறையின் கண்உள்ள விநாயகப் பெருமான் படிமத்துக் கருகில் நீர் சுரந்து வரும் இயல்பைக் காணலாம்.புவனேச விநாயகர் என்ற பெயர் பிற்காலத்தில் பெயர் மருவி 'மணக்குள விநாயகர்' என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments