OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

வியாழன், 26 நவம்பர், 2009

Thiruchendhur-1

உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-4
திருமதி சாந்தா வரதராஜன் .                                  
2.திருச்செந்தூர்                                 


   இது பெருமை பெற்ற முருகன் தலம். இது திருநெல்வேலி மாவட்டத்தில், கடற்கரையில் அமைந்த இரண்டாம் படை வீடாகும். செந்தில், அலைவாய், திருச்செந்தில், திருச்சீரலைவாய், திருச்செந்தூர், ஜெயந்திபுரம், சந்தனாசலம், என்ற பற்பல பெயர்கள் இப்பகுதிக்கு உண்டு. சங்க இலக்கியங்களில் செந்தில்,அலைவாய் என்றும், தேவாரத்தில் செந்தில் என்றும்,திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. முருகனுக்கு            சேந்தன்       என்ற பெயரும்   உண்டு. அவன்     குடிகொண்டிருப்பது  சேந்து   இல் , என்பது  செந்தில் என்றாகி , பின்னர்  செந்தூர்  என்று  வழங்கியது  என்றும், ஜெயந்திபுரம் என்பது  செந்தூர்  ஆக     மருவுயது   என்றும் சிலர்   கூருவர்  .


   கிரௌஞ்ச  மலையை பிளந்து தாரகாசுரனை கொன்றபின் ஆறுமுகன் செந்திலில் வந்து தங்கி செந்திலாண்டவனாக காட்சி அளிக்கிறார். வீரமகேந்த்ரம் சென்று சூரபதுமாதியரை அழித்து திரும்பி வந்த ஆறுமுகன் சினம் தணிந்து பக்தர்களை காப்பாற்றியதால் கந்தன் என்றும் அவனது கருணையை கந்தன் கருணை என்றும் கூருவர். குமரகுருபரர்   ஊமையாக      இருந்தவர் . இந்த      செந்தில்  ஆண்டவன் அருளால்  பேசும் சகதி        பெற்று  பிள்ளை  தமிழ்  பாடினார். ஆதிசங்கரர்    திருச்செந்தூர்  ஆண்டவனை  பற்றி சுப்பிரமனிய புஜங்கம் என்ற பாடலை இயற்றினார்.                          


 ஆண்டுதோறும் 3 நாட்கள் கந்தசஷ்டி விசேஷமாக கொண்டாடுவார்கள். மேலும் ஆடி திருக்கிருத்திகை, தைகிருத்திகை விசேஷமானது.   
                    மணி மேலும் ஒலிக்கும்.  
                               ஓம் 


திங்கள், 23 நவம்பர், 2009

செவ்வாய், 17 நவம்பர், 2009

hullo !!

                                       உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-3
திருமதி சாந்தா வரதராஜன்     


 திருமலை நாயக்கர்,மங்கம்மாள் இவர்களின் உருவச் சிலைகளும் கட்ரூன்களில் உள்ளன.கோயிலின் கோபுரமும் அழகு பெற அமைந்து இருக்கின்றது.இதை திருப்பன்கிரி,கந்தமாதனம் கந்தமாலை என்றும் அழைப்பர்.    
சூரபத்மாதியரை அழித்து,தேவர்களை சிறைமீட்டு தேவேந்திரன் மகளான தெய்வயானையை இங்கு திருமணம் புரிந்துகொண்டு சுப்பிரமனிய சுவாமியாக காட்சி அளிக்கிறார்.
 "சந்ததம் பந்தத் தொடராலே 
 சஞ்சல துஞ்சித் திரியாதே 
கந்தனென் ரென்றும் ற்றுனை நாளும் 
கண்டு கொண்டேன் புற்றிடுவேனோ 
தந்தியின் கொம்பைப் புணர்வோனே 
சங்கரன் பங்கிற் சினவ பாலா 
செந்திலங் கண்டிக் கதிர்வேலா 
தென் பரங் குன்றிற் பெருமாளே"
என்பதை திருப்புகழ் பாடல் மூலம் அறியலாம். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில்,"மாடமலிமருகில் கூடல் குடவயின்"என்று  இது மதுரைக்கே மேற்கே இருப்பதாக கூறியுள்ளார். கச்சியப்ப சிவாச்சாரியாரும் தமது கந்தபுராணத்துள் "சுடர் மொழி வேலினான் தூய கூடலின் குடதிசையமர் பரந்குன்றினை எய்தினான்" என்று இவ்வாறே கூறுகிறார்.


 இத்தலத்திலுள்ள தீர்த்தங்கள் சத்திய கூபம்,பிரம கூபம்,சரவணப்பொய்கை என்பன.ஒவ்வொரு கார்த்திகை தோரும் திரளான மக்கள் மலைவலம் வந்து முருகனை வழிபடுகின்றனர்.ஆண்டு தோரும் பங்குனி உத்திரத்தில் திருவிழா நடக்கிறது.
      மணி மேலும் ஒலிக்கும்.
          

திங்கள், 9 நவம்பர், 2009

hullo !!

             முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-Part-2
 திருமதி சாந்தா வரதராஜன் 
 " ஒரு நாமம் ஒரு உருவம் ஒன்ருமிலாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தொள்ளேனம் கொட்டோமோ" என்று மாணிக்க வாசகர் கூறிய 
திருமொழியை நோக்க வேண்டும்.முருகனுக்கு பற்பல நாமங்கள் உண்டு.அவை குமரன்,ஆறுமுகன்,கந்தன்,குகன்,விசாகன்,சுப்பிரமணியன்,சரவணபவன்,கார்த்திகேயன்,காங்கேயன், சுவாமிநாதன்,செவ்வேள்,செந்தில் ஆண்டவர்,தணிகாசலம்,வள்ளிமணாளன்,தண்டாயுதபாணி,கலியுக வரதன் என்பன.
        
 குன்றெல்லாம் குமரன் என்பதற்கு இணங்க,குமரனுக்கு மலை கோவில்கள் ஏராளம்."கோ" என்றால் அரசர்,கடவுள் என்று பொருள்.'இல்'என்றால் உள்ளே என்பதாகும். ஆகவே கடவுள் இருக்கும் இடம்,கோவில் என்று ஆயிற்று.பக்தர்களை காக்கும் வீடு (இடம்,மோட்சம் ) படைவீடாக மருவியது என்று கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் கூறிஉள்ளார்.இனி ஆறுபடை வீடுகளையும் மற்ற முருகப்பெருமானின் மற்ற முக்கிய ஸ்தலங்களை காண்போம்.
 
பண்டை தமிழ் மக்கள் நிலத்தை நான்கு வகைகளாக பிரித்தாக கூறப்படுகிறது.அதாவது குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்றும் இவை நான்கும் இல்லாத இடம் பாலை என்றும் கூருவர்.முருகப் பெருமானை தமிழ் மக்கள் இந்த நிலப்பகுதிகளில் இயல்,இசை,நாடகம் மூலம் வழிபாடு செய்கிறார்கள் என்பதாகும்.
      1 .திருப்பரங்குன்றம் 
 முருகப் பெருமானின் முதல் படை வீடு.இது குறிஞ்சி நிலத்தில் அமைந்ததாகும்.இப்பகுதி மதுரைக்கு தெற்கே ஐந்து மயில் தொலைவில் உள்ளது.இவ்வூரிலுள்ள மலை,கடல்மட்டத்திற்கு மேல் 1050 அடி உயரத்தில் இருக்கிறது.திருமூர்த்தங்கள் உள்ள குடைந்த கோயிலின் முன்,படிப்படியாக மண்டபங்கள் கீழே வரும் வரையில் உள்ளன.மண்டபங்களின் கத்ரூன் சிற்ப்பங்கள் மிகுந்த அற்புத வேலைப்பாடு உடையன.
    மணி மேலும் அடிக்கும்.    


          
       
  





  


வியாழன், 5 நவம்பர், 2009

thanks google

services of google are great.
for data entry,mail reading,reading surveys
contact sankaranarayanan1957@yahoo.co.in

in reference to: Google (view on Google Sidewiki)

புதன், 4 நவம்பர், 2009

hullo !!

     முருகப் பெருமானின் முக்கிய திருத்தலங்கள்
     சாந்தா வரதராஜன்                                                                    
  முருகப்பெருமான்,கைலை நாதன் பரமசிவ பெருமானுக்கும் , மலைமகள்  பார்வதி தேவியாருக்கும் இளைய மகனாக அவதரித்தார்.
அசுரர்களை அழித்து தேவர்களை காப்பதே , இந்த அவதாரத்தின் நோக்கம். கார்த்திகை பெண்டிர்களால் வளர்க்கப்பட்ட சிறப்பினை உடையவர் .
விநாயக பெருமானின் தம்பிரான் முருகன் ,ஞ்யான சக்தியான வேலாயுதத்தை  உடையவர். இச்சா சக்தியான வள்ளியாரையும் , க்ரியா சக்தியான தெய்வயானை 
அம்மையாரையும் மணந்தார். மயிலை வாகனமாகவும் சேவலை 
கொடியாகவும் கொண்டு ஆறுமுகத்தோடு பக்தர்களை காப்பவர்.
             தமிழ் கடவுளான  குமரனுக்கு ஆண்டுதோறும் விழாக்கள்,
வீதி உலா , தேர் , தெப்பம் உற்சவம் ,காவடி எடுத்தல் முதலியன.
வைகாசியில் விசாகம்   ஆடியில்  கிருத்திகை தை மாதத்தில் பூசம்
பங்குனியில் உத்திரம் முக்கியமான விசேஷ நாட்களாக கொண்டாடப்படுகின்றன.
குமரனுக்கு பால்,தயிர் பன்னிர் இளநீர் , சந்தனம்,பஞ்சாமிர்தம் ,
விபூதி முதலிய பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள்.குமரனை 
குழந்தையாக, பாலனாக,யுவனாக,வீரனாக,பித்தனாக,வேடனாக,
கிழவனாக, ஆண்டியாக,அரசனாக,மயில் வாகனத்தின் மீது sakthi
வேலுடன் சேவல் கொடியுடனும் வள்ளி,தெய்வயானையுடன் ஆருமுகமாகவும்
அலங்காரங்கள் செய்து பக்தர்கள் மகிழ்வார்கள்.பரம்பொருள் ஒன்று தான்,
நாம் காணும் காட்சிகள்தான் பல உருவங்களில் உள்ளது என்பதை குறிக்கும்.
                                                                                                              தொடரும் 
 KNOW ABOUT OUR CULTURE



                                                                      

செவ்வாய், 3 நவம்பர், 2009

hullo !!

yahoo is also a good mail provider.
dhanvanthiritalks.blogspot.com for health tips
thanks

in reference to: Yahoo! India (view on Google Sidewiki)

திங்கள், 2 நவம்பர், 2009