OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

சனி, 26 ஜூன், 2010

KAVITHAI

HAVE A NICE DAY


                                                  


  ஊன்றுகோல் 
திருமதி சாந்தா வரதராஜன் 


நல்லோர்கள் செயலெல்லாம் 
         மனிதம் காக்கும் ஊன்று கோல்
நாட்டைக்காக்கும் தொண்டுகள் 
         நமக்குதவும் ஊன்று கோல் 
அல்லும் பகலும் உழைப்பவர் 
        பொது நலத்தின் ஊன்று கோல் 
அறிவைப்பெருக்கும் ஆசான் 
        மூடம் போக்கும் ஊன்று கோல் 
வல்லோர்கள் கரங்களெல்லாம் 
        நன்மைக்கு ஊன்று கோல் 
வாழக்கை முடிந்த பின்னே 
        நாலுபேர்கள் ஊன்று கோல் 
எல்லோர்க்கும் ஓர் நாள் 
        கடைசிப் பிடி ஊன்று கோல் 
எழைநலம் பேணுவோர்கள் 
        பூமித்தாயின் ஊன்று கோல் 
திக்கற்ற உயிர்களுக்கு 
         தெய்வமே ஊன்று கோல்
திசையற்ற வாழ்க்கைக்கு 
          நம்பிக்கையே ஊன்று கோல் 
தக்கவழி நடப்பதற்கு 
         கல்வியே ஊன்று கோல் 
தன்னையறிந்து வாழ்வதற்கு 
         தன்பலமே ஊன்று கோல் 
சிக்கலில் தவிப்பவர்க்கு 
          சிந்தனையே ஊன்று கோல் 
சிறப்புடன் நாடுகாண 
           பொது நலமே ஊன்று கோல் 
துக்கமுள்ள நெஞ்சுக்கு 
            அமைதியே ஊன்று கோல் 
தூயவழி போவதற்கு 
             அன்பொன்றே ஊன்று கோல் 
           
                 சுபம்        
  

ஞாயிறு, 20 ஜூன், 2010

KAVITHAI

sign - Have A Nice Day CafeImage by Leo Reynolds via Flickr
HAVE A NICE DAY

  பாரதி 
சாந்தா வரதராஜன் 
எட்டய புறத்தில் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணி 
எட்டயபுரம் சமஸ்தானம் அளித்த பட்டம் 'பாரதி'
'பாரதி' எனும் பெயரை சொன்னால் - கெட்ட
பயமென்னும் பகைவனை வெல்லும் என்பர்!


சுப்பிரமணிய பாரதியின் பாடல் பாடினால் 
சோம்பல், மனச்சோர்வு ஓடும் என்பர்.
சுப்பிரமணிய பாரதியை நினைத்து விட்டால் 
சுதந்தரத்தின் வேகம் எழும் என்பர் 
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும் 
எல்லையற்ற உற்சாகம் எழும் என்பர்!


மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமையை கொளுத்துவோம் - எனப் 
பாடி 
பெண் உருவத்தில் பராசக்தியைக் கண்டு 
பெருமைக்கு ஏற்றம் அளித்த புலவன் என்பர் 
சாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடி - சமூக 
சீர்திருத்தங்கள் பற்பல செய்த தொண்டன் என்பர் 
எதனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று 
எட்டு திசையிலும் இசைக்க வைத்த கலைஞ்ஞன் என்பர் 


இயற்கை எழிலை ரசித்தார் - உலகில் 
எவ்வுயிரிலும் இறைவனை கண்ட ரசிகன் என்பர் 
பெற்ற தாயையும், தாய் நாட்டையும் - இரு 
கண்களாக போற்றி வளர்த்த தலைவன் என்பர் 
தமிழ் மொழியை / இனத்தை நேசித்த கவிஞ்ஞன் என்பர் 
தரணியில் உன் புகழ் ஓங்கி வளர்ந்தது என்பர் 
தமிழ்ப் புலவனா? மகாகவின்ஞனா?
இசைக் கலைன்ஞனா?
தேசத் தலைவன? சமூகத் தொண்டனா?
பார் எங்கும் புகழ் மணக்கும் பாரதி (நீ) யார்? 
தமிழ்த் தாயின் தவப்புதல்வன் - பாரதியார் 
பாரதம் கண்ட அரும்பெரும் கவிஞ்ஞன் பாரதியார் 
வாழ்க பாரதி! வளர்க அவர் தொண்டு!


            சுபம் 




                     



Enhanced by Zemanta

ஞாயிறு, 13 ஜூன், 2010

KAVITHAI

SponsoredTweets referral badge

கண்ணதாசன் 
திருமதி சாந்தா வரதராஜன் 


  அரிது அரிது கவிதை எழுதுவது - அதனினும் 
அரிது தமிழ் இலக்கிய இலக்கணத்துடன் எழுதுவது 
கவிதை உலகில் வரலாறு படைத்த 
கதாநாயகன் கவியரசு கண்ணதாசன் 


கவிஞ்ஞர் கண்ணதாசனின் எழுத்தக்கள் 
கவினார் வெண்முத்துக்கள் - அவை 
தமிழ் நாட்டின் பெரும் சொத்துக்கள் 
தன்னிகரற்ற காவிய பெட்டகங்கள்௧!


பழமைக்குள் புதுமையைப் புகுத்தியவன்
புதுயுகம் படைத்த சரித்திர நாயகன் 
மரபு,புதுக் கவிதைகள் புனைந்த கவியரசன் 
'மாங்கனி'முத்தமிழ் காப்பியம் படைத்தவன்!


நாயகன் ஓர் புதிர். முரண்பாட்டின் மொத்த உருவம் 
நாத்திகராக இருந்து, ஆத்திகரானவர் - இந்து 
மதத்திற்கு புதுவிளக்கம் அளித்தவன் -மற்ற 
மதங்களை வெறுக்கவும்,ஒதுக்கவும் இல்லை - அவன் 


 இயற்கையை ரசித்த கவிதைகள் புனைந்தாலும் 
இயற்கையோடு காதலை இணைத்து - திரை இசைப்பாடல்களில் முத்திரை பதித்த கவிஞ்ஞன் 
இன்பம், துன்பம் சமமாக கருதும் ததுவன்ஞானி 


கடவுள் தத்துவத்திற்கு மெய்யுரை கண்டவர் 
கடவுளின் படைப்பு அழிந்தாலும்,அழியாதது 
கவின்ஞனின் அற்புத படைப்புகள் என்றார் - இவரைக் 
கண்ணனைப் பாடிய ஆழ்வார் என்று போற்றுவர் மக்கள்! 


                      சுபம் 


  


                                    

HAVE A NICE DAY

ஞாயிறு, 6 ஜூன், 2010

KAVITHAI

பாரதிதாசன் 
சாந்தா வரதராஜன் 


  'தமிழககு அமுதென்று பேர் - அந்தத் 
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' -என 
தமிழ்ப் பற்றைத் தூண்டியவன் பாரதிதாசன் 
காலம் தோற்றுவித்த கவிஞ்ஞர்களில்
நாடு, இனம்,விடுதலை என முழங்கியவன் பாரதிதாசன் 


சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவன் பாரதிதாசன் 
மூடப் பழக்கங்களை சாடியவன் - பாரதிதாசன் 
உழைப்பாளியின் உரிமைக்குரல் முழங்கியவன் பாரதிதாசன் 


உறங்கும் தொழிலாளர்  உலகைத் தட்டி 
உன்னுடைய உழைப்பினால் உயர்வுற்றது 
உன் வீடு. உன் உலகம் என முழங்கியவன் பாரதிதாசன் 
'இருக்கும் நிலை மாற்ற ஒரு புரட்சி மனப்பான்மை 
ஏற்படுத்துதல் பிரற்குழைக்கும் எழத்தாளர் கடனாம்'
என்ற குறிக்கோள் கொண்டவன் - பாரதிதாசன் 
வாழ்க பாரதிதாசன் வளர்க அவரது தொண்டு! 
                              
                          சுபம் 
                     



HAVE A NICE DAY