HAVE A NICE DAY
ஊன்றுகோல்
திருமதி சாந்தா வரதராஜன்
நல்லோர்கள் செயலெல்லாம்
மனிதம் காக்கும் ஊன்று கோல்
நாட்டைக்காக்கும் தொண்டுகள்
நமக்குதவும் ஊன்று கோல்
அல்லும் பகலும் உழைப்பவர்
பொது நலத்தின் ஊன்று கோல்
அறிவைப்பெருக்கும் ஆசான்
மூடம் போக்கும் ஊன்று கோல்
வல்லோர்கள் கரங்களெல்லாம்
நன்மைக்கு ஊன்று கோல்
வாழக்கை முடிந்த பின்னே
நாலுபேர்கள் ஊன்று கோல்
எல்லோர்க்கும் ஓர் நாள்
கடைசிப் பிடி ஊன்று கோல்
எழைநலம் பேணுவோர்கள்
பூமித்தாயின் ஊன்று கோல்
திக்கற்ற உயிர்களுக்கு
தெய்வமே ஊன்று கோல்
திசையற்ற வாழ்க்கைக்கு
நம்பிக்கையே ஊன்று கோல்
தக்கவழி நடப்பதற்கு
கல்வியே ஊன்று கோல்
தன்னையறிந்து வாழ்வதற்கு
தன்பலமே ஊன்று கோல்
சிக்கலில் தவிப்பவர்க்கு
சிந்தனையே ஊன்று கோல்
சிறப்புடன் நாடுகாண
பொது நலமே ஊன்று கோல்
துக்கமுள்ள நெஞ்சுக்கு
அமைதியே ஊன்று கோல்
தூயவழி போவதற்கு
அன்பொன்றே ஊன்று கோல்
சுபம்
POST A COMMENT
சனி, 26 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments