UNITED WAY |
வழி
திருமதி சாந்தா வரதராஜன்
விழித்தவன் கண்களுக்குப் பட்டதெல்லாம் வழி!
விழிக்காதவன் கண்களுக்கு வாழ்கையே சுழி!
விழி பெற்றவன் வாழ்க்கைக்கு நம்பிக்கையே வழி!
விதையிட்டவன் நம்பிக்கைக்கு உழைப்பே வழி!
பழி சொல்பவன் நாக்கினிலே நஞ்சே வழி!
பலன் கொடுக்கும் மனிதனுக்கு அன்பே வழி!
சுழியைக் கூட கோடியாக்கும் அறிவாளியின் வழி!
சுமைதாங்கும் வாழக்கை கூட சுகமான வழி!
நேர்மை மனமுடையோற்கு மனசாட்சியே வழி!
நெருஞ்சி எண்ணமுள்ளவற்கு நெஞ்சிலேது வழி!
சீர்மை ஒழுக்கம் மனிதற்கு சிறப்பு வழி!
சிறகுள்ள சிந்தனைக்கு இருட்டு கூட வழி!
பார்செழிக்கப் பல்லோர் காட்டினார் பல வழி!
பயன் வாழ்வு வாழ்வதே எதிர்கால நல வழி!
கார்மேகம் பொழிந்தால் தான் சோற்றுக்கே வழி!
கவிச் சாலையிடும் கவிஞரெல்லாம் நாட்டுக்கே வழி!
வந்தவழி பத்துமாதம் தாய் வயிற்று வழி!
வாழ்ந்து போகும் போது மீதமோ ஆறடி வழி!
சொந்த வழி இருந்தும் பலர்குத் துயர் வழி!
சொந்தமிருந்தும் முதுமைகள் காணுது சோக வழி!
வந்தவழியை மறந்தவ்ர்கோ பல உயர் வழி!
வாழ்வில் இன்னும் ஏழைக்கு வறுமை வழி!
முந்திக்கொள்ளும் மூளைக்கோ முதல் வழி!
மூளைவழி ஒன்றே வாழ்வின் மூலதன வழி!
சுபம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments