LORD SIVA |
சிவப்பரம்பொருள்- 4
சாந்தா வரதராஜன்
varadshantha@yahoo.com
ஈசுன் அவர்கள் துதிகளால் மகிழ்ந்து மாதவனைப் பார்த்துச் சொன்னார்,'என்னுடைய வலப் பக்கத்தில் தோன்றியவர் மலரோன்,நீ என் இடப் பக்கத்தில் உதித்தவன். என் மற்ற புதல்வர்களான கணேசனுக்கும், குமாரனுக்கும் ஒப்பானவர்கள் நீங்கள். உங்களுக்கு வேண்டியதை கேளுங்கள் தருகிறேன்'. இவ்வாறு ஈசன் கூறியதும் நான்முகன் அவரைப் பணிந்து எழுந்து, 'பிரபோ', தங்களின் அணுகரகதிற்கு பாத்திரனாகிவிட்ட எனக்கு வேறு என்ன வேண்டும் . தங்களிடம் என்றும் பக்தி குன்றாதிருக்க அருள் செய்வதையே வேண்டுகிறேன்' என்று பிராத்தித்தார்.
'நான்முகா உன் விருப்பம் நிறைவேற அணுகரகிதோம். என்னிடம் உனக்குப் பக்தி என்றும் குன்றாதிருக்கும்' என்று ஈசன் அருள் செய்தார். பின்னர் மாதவனைப் பார்த்து, 'பத்ம கர்ப்பத்தில் நான்முகன் உனக்கு புத்திரனாக உந்திக்கமலத்தில் தோன்றுவான். அந்நாளில் சோதிவடிவமாய் என்னை தரிசிப்பீர்கள்' என்று அணுக்ரகித்து மறைந்தார்.அது முதல் ஈசன் லிங்கதிலே இனிது அமர்ந்து அவரை வழிபடும் அன்பர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.
தொடரும்
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments