OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

PARAATTURAI BY RAGUNAATHAN

பாராட்டுரை 
எஸ்.ரகுநாதன் 


 மும்மூர்த்திகளில் சிறந்தவர் சிவபெருமான் ஆவார். சிவனும்  சக்தியும் சேர்ந்தே இருந்து இப்பூவுலகினை தினந்தோறும் ஆட்டுவிக்கின்றார்கள். இதனால்தான் சர்வ சதா காலமும் சிவனை நினைப்போர் "சிவாய நம என சிந்திருந்தால் அபாயம் ஒரு நாளும் இல்லை" என்று கூறுகின்றார்கள். நாள்தோறும் காலையும்,மாலையும் நாம் சிவமந்திரம் எனப்படுகின்ற நமசிவாய,நமசிவாய, ஒம்நமசிவாயதினை ஜெபித்து வந்தால் உடலும் மனமும் ஆரோக்கியம் பெறுதலோடு இன்முகம் கொண்டு துன்பம் இல்லாமல் நாம் வாழ்வதற்குரிய பாதை வகுக்குப்படும்.


  இதனை அடிப்படையாகக் கொண்டு "சிவப்ருமானின் மகிமையும் சிவனடியார்களும்" என்ற இந்த அற்புத நூலினை ஆன்மீக உலகிற்கு ஆக்கித்தந்துள்ளார் திருமதி.சாந்தா வரதராஜன் அவர்கள். இந்த நூலினைப் படித்தும் பிழைதிருத்தம் செய்தும் தந்த பெருமையை எனக்கு அருளியது மிகுந்த மகிழிசிக்குரியதாகும்.


  சைவ சமயம் குறித்த பல்வேறு செய்திகளும், ஈசன் எனப்படுகின்ற சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களின் மகிமையையும்,சிறந்த முறையில் இந்த நூலில் தொகுத்துத் தந்துள்ளார் இந்நூலாசிரியர்.


   சிவபெருமான் படைத்த திருவிளையாடல்கள் குறித்தும் மிகவும் சிறப்புற கூறியுள்ளார். பஞ்சபூதத் தலங்கள்,அட்டவீரட்டதலங்கள்,ஜோதிர்லிங்கத்தலங்கள் முதலிய பல்வேறு சிவத் தலங்கள் குறித்து எடுத்துக் கூறியிருப்பது இந்நூலுக்கு அணி சேர்க்கிறது. 


  5 என்கிற எண்ணில் அடங்கக்கூடியதான சிவனைப் பற்றியதான பல செய்திகள் இதிலே சொல்லியுள்ளார். பிரதோஷ மகிமை குறித்தும், நந்திகேஸ்வரரின் மகிமை குறித்தும் இதிலே சிறப்பாக சொல்லியிருப்பது போற்றற்குரியதாகும்.


  சிவன் கோயில்கள் எத்தகு ஆகமப்படிக்கு அமைந்துள்ளது என்று சொல்லப்படுகின்ற செய்திகள் புதியதாக இருக்கின்றது.


    தேவாரம், திருவாசகப் பாடல்களினை ஆங்காங்கே சொல்லியிருப்பது மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக உள்ளது.


  குறிப்பாகத் திருவண்ணாமலையார் குறித்து மிகவும் சிறப்புடன் கூறியுள்ளார்.


   கங்கை நதியின் மகிமையும் இதில் திறம்பட எடுத்துக் கூறப்பட்டுள்ளது.


   சிவபக்தர்களுக்குரிய விரதங்களும் அவற்றைக் கடைபிடிக்கும் முறைமைகளும் இதில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.


    "அன்பே சிவம்" என்கின்ற ததுவக் கருத்து தம்மை மிகவும் தெளிவுபட இதிலே வார்த்திருப்பது சுவைபட உள்ளது.


   அத்தோடு விபூதியின் மகிமையும்,விபூதி அணிதலால் ஏற்படும் நன்மையும், சிறப்புற இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது.


    பல்வேறு நூல்கள்  இந்த நூலினை சமைப்பதற்கு உரிய வடிகாலாக அமைந்துள்ளது பாராட்டுதற்குரியதாகும். சிவபெருமான் மீது பக்தி கொண்டோருக்கு இந்த நூல் வழிகாட்டியாக விளங்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.


    இது முதல் பாகந்தான். இன்னும் இரண்டாம் பாகத்தில் பல செய்திகளை சொல்லியிருப்பது தெளிவுறத் தெரிகின்றது.


  ஆன்ம நேயமும், ஆன்மீக பக்தியும் கொண்டு விளங்கும் இந்நூலாசிரியர் திருமதி. சாந்தா வரதராஜன்  அவர்கள் தமிழ்போல் வாழ்க என்று வாழ்த்தி இந்நூலினை வாங்கிப் படியுங்கள் என்று பாராட்டுரை வழங்குகின்றேன்.


தங்கள் அன்புள்ள,


எஸ்.இரகுநாதன் 


HAVE A NICE DAY