OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

ஞாயிறு, 30 டிசம்பர், 2012

ilakkiya solai nool veliyeetu vizhaa

HAVE A NICE DAY




                                               இலக்கியசோலை 
                       நூல் வெளியீட்டு விழா 


    இலக்கியச்சோலை அமைப்பின் பல சுவையான நிகழ்ச்சிகள் கொண்ட விழா கடந்த 16.12.2012 அன்று திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்றது.

      சாந்தாவரதராஜன் தம்பதியர் தமிழ் வாழ்த்துப் பாட, கவிஞ்ஞர் துருவன் வரவேற்புரையாற்றினார்.இலக்கியச்சோலை சிறப்பிதழை மாம்பலம் ஆ.சந்திரசேகர் வெளியிட,முதர்ப்ரதியை தங்க ஆரோகியதாஸ் பெற்றுக்கொண்டார்.  

     இவ்விழாவில் கவியரங்கம், பரதநாட்டிய நிகழ்ச்சி ,கருத்தரங்கம்,விருது வழங்குதல் போன்றவையும் இடம் பெற்றன.இவ்வகையில் எஸ்.வி.வரதராஜன் அவர்களுக்கு "எழுதுச்சுடோரொளி" விருதும்,சாந்தா வரதராஜன் அவர்களுக்கு "பாரதி கவிச்செல்வர்", விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மு.கவிமதி தொகுத்து வழங்க,நம்ம ஊர் கோபிநாத் நன்றிஉரையாற்றினார். சோலை தமிழினியன் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

                                 சுபம் 
                      

 


புதன், 21 நவம்பர், 2012

virudhu

HAVE A NICE DAY





     உரத்த சிந்தனை -விருது அளிக்கும் விழா 

 உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் அமைப்பின்  'சிந்தனை சங்கமம் 'என்ற விழா 28-10-2012 ஞ்யாயிறு காலை மைலாப்பூரில் சிறப்பாக நடைபெற்றது.தமிழமுதம் நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.முன்னாள் நீதியறசர் உச்ச நீதி மன்றம் எஸ்.மோகன் அவர்கள் விழாவுக்குத தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.அவ்விழாவில் விருது வழங்குதல் ,நூல் வெளியீடு ,  DVD வெளியீடு போன்ற நிகழ்சிகள் நடைப்ற்றன. அவ்வகையில் நீதியரசர் எஸ்.மோகன் அவர்கள், திருமதி சாந்தா வரதராஜன் -கவிஞர்,எழுத்தாளர் ,ஓவியர் ,பாடகர் போன்ற பன்முக சிறப்பு பெற்றவருக்கு 'பெருமைக்குரிய உறுப்பினர் விருது ' வழங்கி கோஎரவிக்கப்பட்டார்.திருமதி சாந்தா வரதராஜன் ஏற்புரை வழங்கினார். கல கல பட்டி மன்றத்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.     



 

சனி, 20 அக்டோபர், 2012

mudhiyor nalan

HAVE A NICE DAY


                               
           

                            senior-couple-enjoying-a-day-at-the-lake


       முதியோர் நலன் 
     திருமதி சாந்தா வரதராஜன்

  மூப்பென்பது எல்லோர்க்கும் பொது தான் 
   முதுமையே இளையோரின் வழிதானே!
   மூப்பென்பது நோயோ,பாவமோ அல்ல;
   முதியோரை எப்போதும் மதிக்கலாமே!

    அடிமையாக முதியோரை நடதிடாமல் 
    ஆறறிவை ஐந்தறிவாய் ஆக்கிடாமல் 
    துடிக்குமவர் மனதிலுள்ள துன்பம் கேட்டு 
    துயற்படுவோரின் குறைகளை நீக்கலாமே!

     மனிதநேயம் பேசுவது வெறும் பேச்சுதானா?
    மனதிலதைக் கடைப்பிடித்தால் முதுமை              வாழுமே!
      தப்பொன்றும் அவர் செய்ய வில்லையே! 
     தர்ம சிந்தனையுடன் முதியோரில்லம் தவிர்க்கலாமே!

      முதுமையில்தான் பெருமை எல்லாம் தேடிவரும் 
      முற்றாத காயில் என்ன இனிமை வரும்?
      முதுமையில்தான் சிந்தனையில் தெளிவு வரும்!
      மூர்கதனம் நீங்கி பொறுமை வரும்!

       நெஞ்சிலே இளமை பொங்கும் இனிய நினைப்பும் 
       நிம்மதியும் முதுமைக்கு இளமை சேர்க்கும்!
      முதுமையில்தான் சீலமெல்லாம் சேர்ந்து வரும்.
       மொத்தத்தில் முதுமைதான் பெருமையின் சிகரம்.

      இளமையில் உறுதுணையாய் வழிகாட்டிய 
      முதியோரின் பெருமை உணர்ந்து - நாம் 
      விழுதுகளாய் முதியோரின் நலன் பேணினால் 
      விண்ணும் மண்ணும் நம்மை வாழ்த்துமே!

                                    சுபம் 

 

சனி, 25 ஆகஸ்ட், 2012

book release

HAVE A NICE DAY








 

சனி, 28 ஜூலை, 2012

kandha sashti vizhaa-1

HAVE A NICE DAY

                                     

        ஸ்கந்த சஷ்டி -திருச்செந்தூர்


      கந்த சஷ்டி விழா -1 
     திருமதி சாந்தா வரதராஜன்  


      ஸ்கந்த சஷ்டி என்பது சூரபத்மன் என்ற அரக்கனை முருகப்பெருமான் வதம் செய்த நாளைக் குறிக்கும்.தீபாவளி சமயத்தில் வரும் அமாவாசையிலிருந்து வரும் ஆறாம் நாள் சஷ்டியன்று, ஸ்கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது. 


     முருகப்பெருமான்,கயிலை நாதன் முக்கன்னனுக்கும்,மலைமகள் பார்வதி தேவியாருக்கும் இளைய மகனாக அவதரித்தார்.அசுரர்களை அழித்து, தேவர்களை காப்பதே இந்த அவதாரத்தின் நோக்கமாகும். ஐங்கரனின்  அருமை சகோதரர் ஆவார்.தந்தைக்கு 'பிரணவ' மந்திரத்தின் பொருளை உணர்த்தியதால் சுவாமிநாதனும் இவரே.குமரன்,சரவண பொய்கையில் தோன்றி, கார்த்திகை பெண்டிர்களால் வளர்க்கப்பட்ட சிறப்பினையுடையவர்.'வடிவேலன்','ஞானசக்தி' என்னும் வேலாயுதத்தை கொண்டவர்.திருத்தணிகை குமாரரஆய்  'இச்சா சக்தி'யான தெய்வானை அம்மையாரையும் மணந்தார். சண்முகநாதன்,தன் இருதேவியருடன் மயிலை வாகனமாகவும்,சேவலை கொடியாகவும் கொண்டு ஆறுமுகத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


       தேவர்கள், முனிவர்கள்ஆகியோரை காக்கவே சூரபத்மன், சிங்கமுகன்,தாருகாசுரன் போன்ற கொடிய அசுரர்களை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த நாள் தான் ஸ்கந்த சஹ்டி ஆகும்.சூரன் மூன்று தேவர்களாலும் கொள்ளமுடியாதபடி வரம் பெற்று மிகவும் அட்டூழியம் செய்து, தேவர்களை உபதிரவப்படுத் தி வந்தான். இந்திரனின் மனைவி இந்திராணியையும், தேவர்களையும் சிறையில் அடைத்து துன்புறுத்தினான்.பலகாலம் தேவர்கள் சிறையில்    கஷ்டப்பட்டார்கள்.அச்சமயம் தேவர்களுக்கு உதவும் பொருட்டு நாரத முனிவர் ஒரு உபாயம் செய்தார்.அதாவது தேவர்கள் அனைவரும் பரம்பொருளான சிவனஐ குறித்து தவம் செய்தால் பலன் கிடைக்கும் ,விடுதலையும், நல்வாழ்வும் கிட்டும் என்றார். பல நூற்றாண்டுகள் தேவர்கள் அவ்வாறே சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார்கள்.


தொடரும் 
 
 

வியாழன், 7 ஜூன், 2012

sangada hara chathurthi viradham-6

HAVE A NICE DAY
                               2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
   
        விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-6
                    திருமதி சாந்தா வரதராஜன்                                 


          இத்தகய சிறப்புமிக்க சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கும் முறையை காண்போம்.முதன்முதலாக, சதுர்த்தி விரதம் ஆரம்பிக்க விரும்புவோர் மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி தினத்தில் இந்த விரதத்தை தொடங்க வேண்டும். அதுவும் செவ்வாய்கிழமைகளில் அமைந்தால் மிகவும் விசேஷம். சதுர்த்தி தினத்தன்று காலையில் ஸ்நானம் செய்துவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். விநாயகர் விக்ரகம் அல்லது படத்தைப் பூஜையறையில் ஒரு மனைப் பலகையில் கோலம் போட்டு வைத்து, அதன்மேல் வைக்கவேண்டும். விநாயகருக்குப் பொட்டு வைத்து,பூச்சூடி அவர் முன்னால்  விளக்கேற்றி வைக்கவேண்டும் .


      தும்பிக்கையான் துதிகளை   மன்ம் உருகி,சொல்லி வழிபாடு செய்துவிட்டு,தூப,தீபம், நைவேத்யம் காட்டி வழபட்டு நமஸ்காரம் செய்யவேண்டும்."ஓம் கணபதயே நமஹா:" என்ற கணேச மந்திரத்தை வழக்கமான வேலைகளுக்கு நடுவில் அல்லது நேரம் கிடைக்கும்பொழுது மனசுக்குள்ளே சொல்லிக்கொண்டிருப்பது  நல்லது. மாலை நேரத்தில் சந்திரன் உதயமானதும் மறுபடியும் பிள்ளையாருக்குப் பூசை பண்ணிவிட்டு நிலவைப் பார்த்தபடியே சங்கடங்கள் எல்லாம் நீங்கவேண்டும் என்று மனசுக்குள் வேண்டிக் கொள்ள வேண்டும்.முடிந்தவர்கள்,அன்று முழுவதும் உபவாசம் இருக்கலாம். முடியாதவர்கள் பால்,பழம் சாப்பிடலாம்.இவ்வாறு சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்குச் சந்தோஷமும், சகல சௌபாக்கியமும்,சிறிதும் குறைவின்றிக் கிடைக்கும்.பக்தி உள்ளத்தோடு விரதம் இருப்பவர்கள் சங்கடங்களை எல்லாம் விநாயகர் தீர்த்து வைப்பார் என்பது திண்ணம்.


                                        சுபம் 

 திருமதி சாந்தா வரதராஜன்
சலங்கை பூஜை விளக்கு ஏற்றுதல்
சோளிங்கநல்லூர் 





செவ்வாய், 8 மே, 2012

sangada hara chathurthi viradham-5

HAVE A NICE DAY
2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.


          விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-5
  
                                                 திருமதி சாந்தா வரதராஜன்   


         இவைகலைத தவிர மேலும் ஒரு புராணக் கதை உண்டு.அதாவது சந்திரனின் சங்கடம் தீர்த்தவர் விநாயகர்.   ஒரு சமயம், சதுர்த்தி தினம் அன்று ஏகப்பட்ட "மோதகங்களை"த தின்று விட்டு ஏகாந்தமாக உலாவிக் கொண்டிருந்தார் ஏகதந்தர். சந்திரன்தான் அறிவுக்கு அதிபதி என்றும் மதிக்கு (காரணமானவன் என்பதால்  சந்திரனுக்கு 'மதி' என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவார்.ஒரு சமயம் சந்திரனுக்கு விதியின் செயலால் மதி கெட்டுப போயிற்று. அங்கு உலாவிக்கொண்டிருந்த விநாயகரின் உருவத்தைப் பார்த்துக கேலிசெய்து பேசத் தொடங்கினான் சந்திரன்.(சாமகர்ண) முறம் போல காது உள்ளவனே, (லம்போதரா) பெரிய வயிறு உள்ளவனே என்று ஆணைமுகனுக்கே ஆத்திரம் ஏற்படும்படி அளவுக்கு மீறிப் போனது சந்திரனின் கேலிப்பேச்சு. உடனே விநாயகர் "சந்திரனைப் பார்த்து உன் அழகு மீது உள்ள ஆணவத்தால், இவ்வாறு கேலி பேசுகிறாய். உன் அழகைப் பார்த்து ரசிப்பவர்கள்,இனி உன்னைப் பார்த்தாலே பாவதுக்குள்ளாவார்கள்" என்று சாபம் இட்டார்.
மறுகணமே ஒளி குன்றிக் குறைந்து,தேய்ந்து போகத் தொடங்கினான் சந்திரன். சந்திரனைப் பார்த்தல்   பாவம் வரும் என்பதால் எல்லோரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.பிள்ளையாரைக் கேலி செய்தது 'பிழை' என்பதை 'பிறை' யாக மாறிய பின்தான் உணர்ந்தான். தன் தவற்றை உணர்ந்து தன் பிழையைப் பொருத்து மன்னித்துக் குறையை நீக்கும்படி வேண்டினான். கருணைமிக்க கணேசர்,மனம் இறங்கினார். 'மதி' யின் தவறை மன்னித்தார்.

     அவனுக்கு சாபம் அளித்த ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தன்று மட்டும் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்றும்,மற்ற தினங்களில் நிலவைப் பார்பதால் எந்தப் பாவமும் வராது என்றும் அருளினார்.தேகம் தேய்ந்து மறைந்தாலும் மீண்டும் வளர்வான் என்று வரமளித்தார்.எல்லோருக்கும் மேலாக, பிறையாக இருந்த சந்திரனை, தம் சிரசின்மேல் ஏற்றி, 'பாலச்சந்திரன்' என்ற நாமம் பெற்றார் விநாயகர்.

தொடரும் 



சனி, 21 ஏப்ரல், 2012

sangada hara chathurthi viradham-4

HAVE A NICE DAY

                                      2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
                      விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-4
  
                                                 திருமதி சாந்தா வரதராஜன்   


            மகனைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் மாமுனிவர்.பின்பு முனிவரிடம் "அவனும் அவரைப்போல ஒப்பற்ற நிலை அடைந்து ,புகழ்மிக்க முனிவராக விளங்கவேண்டும். அதற்காக வழியை அவரே கூறவேண்டும் என்று அங்காரகன் பணிவுடன் வேண்டினான்.மகனின் புதிசாலிதனத்தை அறிந்து மனம் மகிழ்ந்தார் முனிவர்.தன் மகனின் எண்ணம் ஈடேற ஏகதன்தனை பூஜிப்பதுதான் ஏற்ற வழி என்றாலும், அதோடு முழு மூலப் பொருளின் மூலமந்திரத்தை மகனுக்கு உபதேசித்தார்,பாரத்வாஜ முனிவர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப,அவர் சொன்னபடியே ஆனைமுகனை நினைத்து அங்காரகன் தவமிருக்கதொடன்கினான்.

     தக்க சமயத்தில் "கணபதி" அன்காரகனுக்குக் காட்சி தந்து,வரங்கள் அருளினார். அதோடு கிரகங்களினால் ஒன்றாகத் திகழவும் அனுகிரகம் புரிந்தார்.அவன் அருள் பெற்ற (திதி) தினம் ஒரு சதுர்த்தி நாள் என்பதால் 'அங்காரக சதுர்த்தி' என்றும்,அன்றைய தினம் விநாயகரை வணங்குவோரின் சங்கடங்கள் யாவும் தீர வேண்டும் வேண்டினான்.அவன் விருப்பப்படியே ஆசியளித்தார் ஆனைமுகன். அன்று முதல் செவ்வைக்கிழமைகளில் வரும் சதுர்த்தி தினம் மிகச் சிறப்பானதாக மாரியதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன.

    "அங்காரக சதுர்த்தி சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தியாக இருக்க வேண்டும் " என்று செவ்வாய் வரம் கேட்டதால் 'சங்கடஹர சதுர்த்தி'என்று அழைக்கப்பட்டு பக்தர்கள் சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தியாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு மாதமுமே தேய்பிறைக் காலத்தில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுவதுண்டு. புதியதாக விரதம் தொடங்குபவர்கள் ,செவ்வாய்கிழமைகளில் வரும் சதுர்த்தி தினத்தில் விநாயகரை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கலாம். சதுர்த்தி விரதம் விநாயகருக்கு உகந்தது. செவ்வாய்கிழமைகளில் பூஜித்தால் சிறந்தது. 

தொடரும் 

                       
                                          திருமதி சாந்தா வரதராஜன்  &
                                               திரு வரதராஜன்                          
                 

செவ்வாய், 6 மார்ச், 2012

sangada hara chathurthi viradham-3

HAVE A NICE DAY


2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-3
  
 திருமதி சாந்தா வரதராஜன்   



     விநாயகர் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தான் விப்ரதன். முனிவர் முர்களர் சொன்னபடியே முழுமனதோடு முக்காலமும் கணேச மந்திரத்தை  விடாமல் சொன்னான். துளித்துளியாய் அவனது தீய குணம் மறைந்து பக்தி வேர் விடத் தொடங்கியது. அதே சமயம்  முனிவர் நட்டுவிட்டுப் போயிருந்த பட்டுப்போன கொம்பும்,வேர் விட்டு,பசுமைக்கு மாறித் துளிர்க்கத் தொடங்கியது. பல வருடங்கள் கடந்த பின் மீண்டும் வேடன் விப்ரதனைக் காண வந்த முரகல முனிவர் அவன் மனமும், மெய்யும்,உள்ளும் புறமும் முழுக்க முதர்கடவுளையே நினைத்துக் கொண்டிருப்பது முனிவருக்குப் புரிந்தது.இதன் விளைவாக அப்பொழுது,விப்ரதனுக்குப் புருவ மததியில் துதிக்கை தோன்றி,அவனது வடிவமும்கூட ஆனைமுகனை நினைவுபடுத்துவதுபோலவே மாறத் தொடங்கியது. முரகல முனிவர் விப்ரதனை ஆசீர்வதித்தார். மேலும், "விப்ரதா, துபிக்கையானைத் துதித்து அவரைப் போன்ற துதிக்கையும் பெற்றுவிட்ட நீ இன்று முதல் 'புருசுண்டி முனிவர்' என்று அழைக்கப்படுவாய்.மேலும் உன்னைக் கான்போருக்கும்கூட புண்ணியம் சேரும்' என்று ஆசீர்வதித்தார் முர்களர். எனவேதான் முக்காலமும் உணர்ந்த முரகல முனிவர் போற்றிப் பாராட்டிய அந்தப் புண்ணிய சீலர், "புருசுண்டி முனிவரைத்தான்,இப்பொழுது தரிசித்து வருகிறேன்" என்று மன்னன் சூரசேனன் வினாவிற்கு விடையைக் கதைமூலம் கூறினான் இந்திரன்.


      சதுர்த்தி தினங்கள் எல்லாமே சங்கடங்கள் போக்கிச் சந்தோஷம் தரக்கூடியவைதான் என்றாலும், செவ்வாய்கிழமைகளில் வரும் சதுர்த்தி தினங்களுக்கு 'சங்கடஹர சதுர்த்தி' என்றே பெயர். சங்கட ஹர சதுர்த்தியின் மகிமை பற்பல இருப்பினும் செவ்வாய் (அங்காரகன்) அருள் பெற்றதை நோக்குவோம். பாரத்வாஜ முனிவர் மகனாகப் பிறந்து, பூமொதேவியால் வளர்க்கப்பட்டவன் அங்காரகன் எனும் செவ்வாய்.அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்த தக்க வயது வந்ததும் அப்பாவான பாரத்வாஜ முனிவரைப் பார்க்கப் போனான்.


தொடரும் 


     

சனி, 4 பிப்ரவரி, 2012

sangada hara chathurthi viradham-2

HAVE A NICE DAY



                                  2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-2
  
 திருமதி சாந்தா வரதராஜன்   

              இன்முகத்தோடு இந்திரனை வரவேற்ற மன்னன் சூரசேனன் அமரர்கோன் அங்கு வந்த காரணம் வினவினான். அதற்கு இந்திரன் தான் புண்ணியசீலரான 'புருசுண்டி' முனிவரைத் தரிசிப்பதற்காக பூலோகம் வந்ததாகவும், அவரைப் பார்த்துவிட்டு விண்ணுலகம் செல்வதற்காக விமானத்தை கிளப்பும்போழுது தாழ்வான செயலில் ஈடுபடும் ஒருவனின் பார்வை பதிந்ததால், விமானம் மேலே பறக்காது, தாழ்ந்துவிட்டது. எனவே தேவலோகம் செல்ல முடியாது பூமியில் புண்ணியம் மிக்க மன்னன் நாட்டில் இறங்கியதாகக் கூறினான். மேலும் மன்னனிடம் ஓர் உதவி வேண்டினான். அதாவது,அவரது நாட்டில் சதுர்த்தி விரதம் கடைப்பிடிக்கும் எவராவது அவரை அழைத்து, அவரது விரத பலனை, அவர் இந்திரனுக்கு தந்தால், அவன் மீண்டும் தேவலோகம் செல்ல முடியும் என்று கூறினான்.

       உடனே சதுர்த்தி விரதம் இருப்பவரைத் தேடிப்
பணியாட்களை அனுப்பிய பின் அரசன் சூரசேனன் இந்திரனிடம், அவ்வளவு உயர்வான,ஒப்பற்ற பெருமையுடைய 'புருசுண்டி' முனிவர் யார்? என்று வினவினான். பின்னர் புராண வரலாற்றை இந்திரன் மன்னனிடம் கூறினான். கொலையும்,கொள்ளையும் செய்ய கொஞ்சமும் தயங்காத விப்ரதன் எனும் வேடன் ஒருவன் தண்டக ஆரண்யத்தில் வசித்து வந்தான். ஒருசமயம் , அவன் முர்களர் எனும் முனிவரை வழி மறைந்து கொள்ளையடிக்க முயன்றான். முற்றும் துறந்த அவரிடமிருந்து அவன் எதிர்பார்த்த பொருள் எதுவும் கிடைக்காததால் ஆத்திரமடைந்து, அவரை கொல்ல முயன்றான்.கோபத்தோடு தன்னை கொல்ல வந்த விப்ரதனை அனுதாபத்தோடு நோக்கினார் அந்த முனிவர். அவரது விழிகளில் இருந்த வீரியம் மிக்க ஒளி, விப்ரதனின் தீவினைகளை தீய்த்தது. அதன் காரணமாக முனிவரை அடித்து கொல்ல வந்த விப்ரதன், அவரது அடிகளைப் பிடித்து பணிந்தான்.கருணைமிக்க  முனிவர் 'ஓம் கணேசாய நம:' என்ற கணேச மந்திரந்தை அவனுக்கு உபதேசித்தார். அதோடு காய்ந்து போன கழி ஒன்றைத் தரையில் ஊன்றி, பட்டுப்போன இந்தக் கொம்பு, உன் பக்திக்கு துளிற்கும்வரை இந்த மந்திரத்தை இடைவிடாது சொல் என்று சொல்லிவிட்டுப் போனார் முரகல முனிவர்.

தொடரும்.

  

சனி, 7 ஜனவரி, 2012

sangada hara chathurthi viradham



HAVE A NICE டே






2-2-10: 9pm: Sangada Chathurthi Prayers.
 சங்கட ஹர சதுர்த்தி பூஜை         


                           HAPPY NEW YEAR 2012


  விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம் 
  
 திருமதி சாந்தா வரதராஜன்  


      மலையரசன் முக்கனணுக்கும்,மலைமகள் உமதேவியாருக்கும் மூத்த குமாரனாக அவதரித்தவர் விநாயகர் ஆவார். நம் வினைகள் எல்லாம் தீர்பவரும் அவரே. பிள்ளையார், ஆனைமுகத்தோன், ஏகதந்தன்,ஐங்கரன்,கணேசர்,கணபதி,வக்ரதுண்டர்,விநாயகர் போன்று பற்பல நாமங்களை உடையவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி நாள்தான் விநாயகரின் பிறந்த நாள். எனவே விநாயகர் பிறந்த திதியான சதுர்த்தி தினம் 'விநாயகர் சதுர்த்தி' என்று அனைவரும் ஆனந்தமாக கொண்டாடுவது வழக்கம்.


   ஒவ்வொரு மாதமும்  பிரதமை முதல் அமாவாசை அல்லது பௌர்ணமி வரையிலான திதிகள் பதினைந்தும் இருமுறை வருகின்றன. அவற்றுள் நான்காவதாக வரும் சதுர்த்தி தினம் ஐந்கரனான ஆனைமுகனை பூஜிக்க ஏற்ற தினமாகச் சொல்லப்பட்டுள்ளது.எல்லா நாட்களுமே ஏகதந்தனை வழிபட ஏற்றவை என்றாலும், சதுர்த்தி திதிக்கு சிறப்பு தனியானது.கணேச புராணத்தில் இந்திரன் சதுர்த்தியின் சிறப்பை கூறுகின்றான். 


   இனி புராணக் கதையை நோக்குவோம். ஜகத்ரபுரி நாட்டைச் சூரசேனன் எனும் மன்னன் தர்மம் தவறாது ஆண்டு வந்தான். அவன் மனைவி 
சுசீலை என்பவள் கற்புக்கரசியாக விளங்கினாள். ஒரு சமயம் அமரர்கள் அதிபதியான தேவேந்திரன்  புஷ்ப விமானத்தில் அரண்மனை அருகில் வந்து இறங்கினான்.


தொடரும்