POST A COMMENT
ஞாயிறு, 13 ஜூன், 2010
KAVITHAI
கண்ணதாசன்
திருமதி சாந்தா வரதராஜன்
அரிது அரிது கவிதை எழுதுவது - அதனினும்
அரிது தமிழ் இலக்கிய இலக்கணத்துடன் எழுதுவது
கவிதை உலகில் வரலாறு படைத்த
கதாநாயகன் கவியரசு கண்ணதாசன்
கவிஞ்ஞர் கண்ணதாசனின் எழுத்தக்கள்
கவினார் வெண்முத்துக்கள் - அவை
தமிழ் நாட்டின் பெரும் சொத்துக்கள்
தன்னிகரற்ற காவிய பெட்டகங்கள்௧!
பழமைக்குள் புதுமையைப் புகுத்தியவன்
புதுயுகம் படைத்த சரித்திர நாயகன்
மரபு,புதுக் கவிதைகள் புனைந்த கவியரசன்
'மாங்கனி'முத்தமிழ் காப்பியம் படைத்தவன்!
நாயகன் ஓர் புதிர். முரண்பாட்டின் மொத்த உருவம்
நாத்திகராக இருந்து, ஆத்திகரானவர் - இந்து
மதத்திற்கு புதுவிளக்கம் அளித்தவன் -மற்ற
மதங்களை வெறுக்கவும்,ஒதுக்கவும் இல்லை - அவன்
இயற்கையை ரசித்த கவிதைகள் புனைந்தாலும்
இயற்கையோடு காதலை இணைத்து - திரை இசைப்பாடல்களில் முத்திரை பதித்த கவிஞ்ஞன்
இன்பம், துன்பம் சமமாக கருதும் ததுவன்ஞானி
கடவுள் தத்துவத்திற்கு மெய்யுரை கண்டவர்
கடவுளின் படைப்பு அழிந்தாலும்,அழியாதது
கவின்ஞனின் அற்புத படைப்புகள் என்றார் - இவரைக்
கண்ணனைப் பாடிய ஆழ்வார் என்று போற்றுவர் மக்கள்!
சுபம்
HAVE A NICE DAY
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments