![sign - Have A Nice Day Cafe](http://farm1.static.flickr.com/9/12822562_8991ad1418_m.jpg)
பாரதி
சாந்தா வரதராஜன்
எட்டய புறத்தில் பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணி
எட்டயபுரம் சமஸ்தானம் அளித்த பட்டம் 'பாரதி'
'பாரதி' எனும் பெயரை சொன்னால் - கெட்ட
பயமென்னும் பகைவனை வெல்லும் என்பர்!
சுப்பிரமணிய பாரதியின் பாடல் பாடினால்
சோம்பல், மனச்சோர்வு ஓடும் என்பர்.
சுப்பிரமணிய பாரதியை நினைத்து விட்டால்
சுதந்தரத்தின் வேகம் எழும் என்பர்
எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும்
எல்லையற்ற உற்சாகம் எழும் என்பர்!
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையை கொளுத்துவோம் - எனப்
பாடி
பெண் உருவத்தில் பராசக்தியைக் கண்டு
பெருமைக்கு ஏற்றம் அளித்த புலவன் என்பர்
சாதிகள் இல்லையடி பாப்பா எனப் பாடி - சமூக
சீர்திருத்தங்கள் பற்பல செய்த தொண்டன் என்பர்
எதனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று
எட்டு திசையிலும் இசைக்க வைத்த கலைஞ்ஞன் என்பர்
இயற்கை எழிலை ரசித்தார் - உலகில்
எவ்வுயிரிலும் இறைவனை கண்ட ரசிகன் என்பர்
பெற்ற தாயையும், தாய் நாட்டையும் - இரு
கண்களாக போற்றி வளர்த்த தலைவன் என்பர்
தமிழ் மொழியை / இனத்தை நேசித்த கவிஞ்ஞன் என்பர்
தரணியில் உன் புகழ் ஓங்கி வளர்ந்தது என்பர்
தமிழ்ப் புலவனா? மகாகவின்ஞனா?
இசைக் கலைன்ஞனா?
தேசத் தலைவன? சமூகத் தொண்டனா?
பார் எங்கும் புகழ் மணக்கும் பாரதி (நீ) யார்?
தமிழ்த் தாயின் தவப்புதல்வன் - பாரதியார்
பாரதம் கண்ட அரும்பெரும் கவிஞ்ஞன் பாரதியார்
வாழ்க பாரதி! வளர்க அவர் தொண்டு!
சுபம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments