HAVE A NICE டே
தன்வந்திரி பகவான் |
திருமதி சாந்தா வரதராஜன்
தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் எதிர்காலத் திட்டங்கள் பல உள்ளன. முதியோர் இல்லம்,மருத்துவமனை, அன்னதானக் கூடம், தியான மண்டபம் போன்றவை அமைக்கத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது.
இத்தகைய பெருமையுடைய,சக்தி வாய்ந்த ஸ்ரீதன்வந்திரி பகவானை எளிய முறையில் இல்லறங்களில் வழிபடலாம். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து, நீராடிவிட்டுப் பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். தன்வந்திரி, திருமாலின் அம்சம் என்பதால் மகாவிஷ்ணுவின் படம் வைத்து அதற்குப் பொட்டு வைத்துப் பூப்போட்டு, துளசி மணி மாலை அணிவிக்க வேண்டும். தன்வந்திரி மந்திரங்களைப் பக்தியுடன் சொல்லி,
"அமுதத்தை ஏந்தி நிற்கும் அருள் கரத்தாய் சரணம்
குமுதச் செல்வி மணவாளன் குனவடியே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய்போல தரணி காக்கும் தன்வந்திரியே சரணம்"
என வேண்டிக் கொள்ள வேண்டும்.
தூப,தீபம் காட்டிய பின், பாயசம் நிவேதனம் செய்யலாம்.
இவ்வாறு ஸ்ரீ தன்வந்திரி பகவானை மனதார வணங்கி வழிபாடு செய்தால் பக்தர்களின் இல்லம் நோய்கள் ஏதும் அண்டாத ஆரோக்கியமான வீடாக விளங்கும் என்பது திண்ணம்.
சுபம்
Thridosha Siddhaantha
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments