தன்வந்திரி பகவான் |
DHANVANTHIRI-MARUTHUVAKKADAVUL-4
திருமதி சாந்தா வரதராஜன்
அனைத்து விதமான சர்ப்ப தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் வகையில் இவ்வுருவம் அமைந்துள்ளது. மேலும் இதே சமயத்தில் சக்கரத்தாழ்வாரும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
27 நட்சத்திரங்களுக்கும் 12 ராசிகளுக்கும் முறையே அமைந்துள்ள யாக குண்டங்களில் அவர் அவர்களுக்குரிய ஹோம குண்டங்களில் அவர்களே உலக ஷேமதிற்காகவும், குடும்ப ஷேமதிற்காகவும் விசேஷ நாட்களில் ஹோமங்கள் செய்து பலன் பெற்று வருகின்றனர்.இங்கு வரும் பக்தர்கள், இங்கு அமைந்துள்ள நித்திய நோய் நிவாரண ஹோமத்தில் தங்கள் வேண்டுதலுக்கேற்ப, பலவிதமான மூலிகளைக் கொண்டு சங்கல்பம் செய்து, மந்திரங்கள் ஜபித்து ஹோமங்கள் செய்து நோய்களிலிருந்து நிவாரணம் பெறுகின்றனர். அமாவாசை, பௌர்ணமி, சுவாதி, அஸ்தம்,திருவோணம் நாட்களில் நோய் தீர்க்கும் ஒவ்ஷதம் வழங்கப்படுகிறது. சங்கடங்களை தீர்க்கும் ஸ்ரீ சுதர்ஷன ஆழ்வார், இங்கு விசேஷமான சக்கர வடிவில் 16 விதமான கைகளைக்கொண்டு 16 விதமான ஆயுதங்களுடன், சங்கு சக்கரத்துடன் அழகிய திருமுகத்துடன் ஷட்கொணத்தில் சிரித்த முகத்துடன் அமைந்துள்ளார். இவரை வழிபட்டால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷ வாழ்வைப் பெறலாம். இங்கு ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுக் காட்சி அளிக்கின்றார்.இவர் ஒரு கையில் சஞ்சீவி மலை, மற்றொரு கையில் கதை தாங்கி தன் மார்பில் ஸ்ரீஇராமபிரானை ஏற்றுக்கொண்டு வாலில் மணியைக் கொண்டு 8-1/2 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் உருவாக்கப்பட்டு விளங்குகிறார்.
'Service to mankind is service to God' என்பதற்கேற்ப, இங்கு ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமைகளில் அன்ன தானமும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச மருத்துவ முகாமும் நடைபெறுகிறது. இலவச மருத்துவப் பரிசோதனையுடன், இலவசமாகத் தேவையான மருந்துகளும் மருத்துவ முகாமிலேயே உடனே வழங்கப்படுகிறது.
தொடரும்
Dhanvantari
Studies on Medicinal Plants and Drugs on Dhanvantari Nighantu
Bharata ke pranacarya =: Indian masters of the science of life : Asvinikumara, Dhanvantari, Susruta, Atreya Punarvasu, Kasyapa, Kumara Bhartr Jivaka, Caraka, ... aura samskrti ka gaveshanapurna paricaya
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments