HAVE A NICE DAY
பொங்கல் கொண்டாடுவோம்
திருமதி சாந்தா வரதராஜன்
ஏற் பிடிக்கும் உழவர் வாழ
ஏற்றத்தாழ்வு தகர்ந்திட
தன்னலத்தார் திருந்திட
தாயகத்தின் பகை ஒழிய
கார் முகிலை வாழ்த்திட
கன்னித் தமிழ் வளர்ந்திட
கருமித்தனம் நீங்கிட
கருணையுள்ளம் மலர்ந்திட
போர் அரக்கன் பொசுங்கிட
பொழுதெல்லாம் மகிழ்ந்திட
பக்தி மனம் வளர்ந்திட
பழமையினை மறந்திடாமலே
- பொங்கல் கொண்டாடுவோம்
தொழில் புரிவோர் உயர்ந்திட
தோழர்களாய் வாழ்ந்திட
சாந்தி பண்பு வளர்ந்திட
சாதிப் பேய்கள் ஒழிந்திட
காந்தீய வழி கடை பிடிக்க
கடமை யினை உணர
கால்நடைகள் பெருகிவாழ
கருத்தினிலே ஒளி மிளிர
ஓர் இனமாய் வாழ
ஒற்றுமையை காத்திட
சக்தி உணர்வு பெருகிட
சமாதானம் ஓங்கிட
- பொங்கல் கொண்டாடுவோம்
-----------
WISH YOU HAPPY PONGAL |
பொங்கல் கொண்டாடுவோம்
திருமதி சாந்தா வரதராஜன்
ஏற் பிடிக்கும் உழவர் வாழ
ஏற்றத்தாழ்வு தகர்ந்திட
தன்னலத்தார் திருந்திட
தாயகத்தின் பகை ஒழிய
கார் முகிலை வாழ்த்திட
கன்னித் தமிழ் வளர்ந்திட
கருமித்தனம் நீங்கிட
கருணையுள்ளம் மலர்ந்திட
போர் அரக்கன் பொசுங்கிட
பொழுதெல்லாம் மகிழ்ந்திட
பக்தி மனம் வளர்ந்திட
பழமையினை மறந்திடாமலே
- பொங்கல் கொண்டாடுவோம்
தொழில் புரிவோர் உயர்ந்திட
தோழர்களாய் வாழ்ந்திட
சாந்தி பண்பு வளர்ந்திட
சாதிப் பேய்கள் ஒழிந்திட
காந்தீய வழி கடை பிடிக்க
கடமை யினை உணர
கால்நடைகள் பெருகிவாழ
கருத்தினிலே ஒளி மிளிர
ஓர் இனமாய் வாழ
ஒற்றுமையை காத்திட
சக்தி உணர்வு பெருகிட
சமாதானம் ஓங்கிட
- பொங்கல் கொண்டாடுவோம்
-----------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please send your comments