அருள்மிகு மணக்குள விநாயகர்
புதுச்சேரி
திருமதி சாந்தா வரதராஜன்
பொதுவாகத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையில்
கோயில்களோடு கொண்டுள்ள தொடர்புகளால், தங்கள் சமய வாழக்கை, கலாசாரம், பண்பாடு மற்றும் பக்திநெறிகள் தனித்தன்மையான வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை உலகுக்கு எட்டுதுக்காட்டுகின்றனர். கோயில்களுக்குப் புராண மெருகேற்றி இறைதன்மை மிளிரவிட்ட பெருமை தலபுராணங்களை சாரும். வாழ்த்த வாயும், நினைக்க மட நெஞ்சும், தாழ்ந்த சென்னியும் அளித்த இறைவனை நமது (பணிகள்) கடமைகளைச் செய்யத் தொடங்கினால் அவர் செவ்வனே அப்பணியை முடித்து வைப்பார்.
"பிள்ளையாரைத் தொழுது நாம்
பெருஞ் செயல்கள் தொடங்கினால்
உள்ளாரச் செய லெல்லாம்
உயர்வாய் முடியும்"
என்பது பக்தர்களின் நம்பிக்கை. புவனேச விநாயக பெருமாள், புண்ணிய பூமியாம் புதுச்சேரியில் கடற்கரை அருகில் மணக்குள விநாயகர்" என்னும் திருப்பெயர்கொண்டு எழுந்தருளியிருக்கிறார். புதுச்சேரி என்ற பெயரைக் கேட்டவுடனே மக்களுக்கு நினைவிற்கு வருவது 'மணக்குள விநாயகர்' திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலம். எல்லாம் வல்ல பரம்பொருளை வழிபடும் மார்கங்களை 'ஆறு சமயங்கள்' என்பர். "ஷண்மதங்கள்" என வட மொழியில் கூறப்படுகிறது. முதல் கடவுளாக விநாயகப் பெருமானை வழிபடுவது "காணபத்யம்" எனப்படும். கணபதியை வழிபடும் மதம் "காணபத்யம்".
தொடரும்
தொடரும்