HAVE A NICE DAY
பங்குனி - உத்திரம்
saturday, 19th march 2011
திருமதி சாந்தா வரதராஜன்
பெருணை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கேரளா |
saturday, 19th march 2011
பெருனை- சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் -1
திருமதி சாந்தா வரதராஜன்
நல்லவர்களைக் காக்கவும், தீயவர்களை அடக்கவும், தர்மத்தை நிலை நாட்டவும் இறைவன் யுகந்தோறும் திருஅவதாரம் செய்கிறான். இராம, கிருஷ்ண அவதாரங்கள் போன்று முருகப்பெருமானும், சூரபத்மனை சம்ஹாரம் செய்ய அவதாரம் எடுத்து அமரர்களை காத்தார் என்பது புராண வரலாறு.
பெருணை என்ற திருத்தலம் கேரள மாநிலம் சந்கனாச் சேரியிலிருந்து திருவல்லா செல்லும் பாதையில் எம்.சி.ரோடில் அமைந்திருக்கிறது. அங்குள்ள புகழ்பெற்ற கோவில் பெருணை சுப்பிரமணிய சுவாமி கோயில். தாரகாசுரனை சம்ஹாரம் செய்த பின் வெற்றி புன்னகையுடன் சுப்பிரமணியர் வந்து நின்ற தலம் இது.இனி புராணகதை, கோயில் அமைப்பு, அதன் சிறப்பு முதலியன நோக்குவோம்.
சூரபத்மனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் சம்ஹாரம் செய்து, தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து, தர்மத்தை நிலை நாட்டி வெற்றிபெற்று வரும்படி ஈசன், இளைய மகன் முருகனிடம் ஆணையிட்டார். தந்தையின் சொல்லை மந்திரமாக ஏற்று போருக்கு புறப்பட்டார் முருகப் பெருமான். செல்லும் முன் சிவபெருமான் பதினொரு உத்திரர்களை பதினொரு படைக்கலங்களாக மாற்றி கந்தனிடம் கொடுத்தார்.
தொடரும்