HAVE A NICE DAY
அருள் மிகு மணக்குள விநாயகர் |
அருள்மிகு மணக்குள விநாயகர்-2
புதுச்சேரி
திருமதி சாந்தா வரதராஜன் இந்தத் திருக்கோயில் கடற்கரையைச் சார்ந்துள்ளதால் இது காணபத்திய ஆகமப்படி அமைந்ததாகும்.இதற்கான காரணங்கள்,சாத்திரங்கள் வாயிலாகக் கூறப்படுகிறது. அதாவது விநாயகருக்கு பதினாறு மூர்த்தங்கள் உண்டு.அவற்றில் பதினான்காவது மூர்தமானது புவநேசர் என்பதாகும்.அது சமுதிரக் கரையில் பிரதிஷ்டை செய்யப்படவேண்டும் என்று சாத்திரங்களில் விதி உள்ளது. எனவே,இத்திருத்தலம் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட தலமாகும். இந்த ஆலயமும் விநாயகரும் மிகப் பழமையானவை என்பதற்கு சரித்திரங்கள் சான்றாக உள்ளன.புதுச்சேரியில் டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்,பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் ஆட்சி செய்த காலத்தில் நடந்த முற்றுகைகளையும்,போற்குமுரல்களையும், இத்தலம் சந்தித்திருக்கிறது. பகைவரிடமிருந்து மக்களைக் காப்பாற்றிய புதுவைக்கு விடுதலை வாங்கித் தந்தவர் முதற்கடவுள் விநாயகப் பெருமான் ஆவார்.
இறைவனின் பெருமையையும், சக்தியையும் அக்காலத்தில் புதுவையில் தங்கியிருந்த பரங்கியர்கள் உணரச் செய்ய ஓர் அற்புத நிகழ்ச்சி நடந்தது. பரங்கியர்கள் தங்கள் பகுதியில் நமது ஆனைமுகப் பெருமான் தங்களுக்கு இடையுறாக இருப்பதாக எண்ணி எத்தனை எதிர்ப்புகளையும் தாங்கிநின்ற விநாயகப் பெருமானை இரவோடு இரவாகத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் எரிந்து விட்டு, அப்பாடா! இன்றோடு பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று எண்ணி தங்கள் இல்லத்திற்குச் சென்றனர். மறுநாள் காலை அவர்கள் கண்ட ஆச்சரியம்! அவர்கள் கண்களையே நம்ப முடியவில்லை! காலையில் பார்த்தால் விநாயகப் பெருமான் தான் எப்போதும் இருந்த இடத்திலேயே தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து கொண்டிருந்தார். இந்த வரலாற்றுக் கதை இன்றும் இத்தலத்தில் பேசப்பட்டு வருகிறது.
தொடரும்