HAVE A NICE DAY
அருள்மிகு மணக்குள விநாயகர் |
அருள்மிகு மணக்குள விநாயகர்-3
புதுச்சேரி
திருமதி சாந்தா வரதராஜன் இனி கோயிலின் அமைப்பைப்பைபற்றிச் சுருக்கமாக நோக்குவோம். புதுவை கடற்கரையை ஒட்டி அரவிந்தர் ஆஸ்ரமம் வீதியில் கிழக்கு நோக்கிய சன்னிதியாய் வெள்ளை நகரின் நடு நாயகமாய் அமைந்திருப்பது "மணக்குள விநாயகர்" திருக்கோயிலாகும்.
மணக்குள விநாயகர் திருக்கோயில், வெளிமண்டபம் இராசகோபுரம்,கொடிக்கம்பம்,முன்மண்டபம்,
கருவறை,சுற்றுச்சாலை,சுற்று கோயில்கள்,மடப்பள்ளி,அலுவலக அறை,உற்சவ மூர்த்திக்கு மணி மண்டபம்,திருமண மண்டபம் ஆகியவைகளுடன் அமைந்துள்ளது. கருவறையில் அமர் நிலையிலுள்ள மூலனாயகராகிய விநாயகரின் நான்கு திருக்கரங்களின் மேல் இரு கரங்களில் வலக்கையில் அங்குசமும்,இடக்கையில் பாசமும் உள்ளன. கீழ் இடக்கை வரதான அமைப்பிலும் உள்ளன. கருவறையில் மூல விநாயகப் பெருமானுடன் மற்றும் ஒரு விநாயகர் திருஉருவம் சிறிய அமைப்பில் காணப்படுகிறது. மூலவருக்கு அருகில் வடதிசையில் அமைந்துள்ள இந்தத் திருமேனி தொடக்கக் கால முதற்கொண்டே எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்பது உண்மையானதாகும்.
இதற்கடுதுத் தென்பால் இரட்டை நாகத் திருமேனி அமைந்துள்ளது. பாம்பு வழிபாட்டுடன் விநாயகர் விநாயகர் வழிபாடும் எளிதாக எங்கும் பரவும் எனக்கருதி இரட்டை நாகத் திருமேனியை அன்றே மனற்குளத்தின் கரையில் அமைத்து வஹிபட்டிருதல் வேண்டும். இரண்டு நாகங்கள் பின்னிப்பிணைந்து ஒன்றையொன்று முதமிடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளன.இந்த உருவத்தின் நடுவில் இலிங்கம் இடம்பெற்றுள்ளது.அரசும் வேம்பும் இணைந்த அது சிவமும் சக்தியும் இணைந்திருப்பதாகக் கருதப்பட்டது.இவ்விடத்தில் குளம் இருந்தது.இதன் காரணமாக இன்றும் விநாயகப்பெருமான் அருகில் வற்றாது நீர் சுரக்கும் ஒரு குழியாகக் காட்சி தருகிறது.
தொடரும்