HAVE A NICE DAY
அருள்மிகு மணக்குள விநாயகர்-6
அருள் மிகு மணக்குள விநாயகர் |
புதுச்சேரி
திருமதி சாந்தா வரதராஜன் இங்கு படிகலிங்கம் இருப்பதால் பிரதோஷ காலப் பூசையும் நடைபெறும். மணக்குள விநாயகர் கோயில் பிரம்மோற்சவம் (ஆண்டு பெருவிழா) பதினெட்டு நாள் விழாவாக, கொடியேற்றத்துடன் நிகழ்தப்பெருகிறது. காலை வேளையில் ஒவ்வொரு நாளும் பல்லக்கிலேலேயே உலா நாயகர் பவனிவருகிறார். முதல் நாள் இரவில் சூரிய பிரபையிலும், இரண்டாம் நாள் காலையில் சந்திர பிரபயிலும் மாலை வெள்ளி மயில் மீதும் வீதியுலா வருவார். மூன்றாம் நாள் வெள்ளி அதிகார நந்தி உலா, ஐந்தாம் நாள் மாலை 4 மணியளவில் திருக்கல்யாணம். இரவு தங்க ரதம், ஆறாவது நாள் இரவு கற்பகவ்ரிட்சம் , ஏழாவது நாள் நாள் இரவு பெருச்சாளி வாகனம் , எட்டாம் நாள் இரவு குதிரை வாகனத்தில் விநாயகப் பெருமான் எழுந்தருள்வார்.ஒன்பதாம் நாள் திருத்தேர் பவனிவரும்.பத்தாம் நாள் நிறுத்த கணபதி காலையில் உலா வருவார். அன்று இரவு மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்த வாரி நடைபெறும். அன்றைய தினம் பெளர்ணமியாகும். பதினொன்றாம் நாள், மின்விளக்குகளால் அணி செய்யப்பட்ட தேரில் விநாயகர் பவனி வருவார். 12ம் நாள் இரவு மலர் பல்லக்கு பவனி வரும். 13ம் நாளிலிருந்து 17ம் நாள் வரை விநாயகர் சிறப்பு வீதி உலா நடை பெறும். 18ம் நாள் உற்சவ சாந்தியும் 108 சங்கு அபிஷேகமும் நடைபெறும். இக்கோயிலில் 'வாதுலாகமம்' பின்பற்றப்படுகிறது..
இவ்வாறு முறைப்படி, சாஸ்திரப்படியும், பக்தி சிரத்தையுடனும் விழா வழிபாடு நடப்பது பெருமைக்குரிய செய்தியாகும்.பக்தர்கள் மணக்குள விநாயகப் பெருமானை மனம் உருக சிந்தை குளிர வழிபாடு செய்தால் அவர் திருவருள் பெற்று வளமாக வாழ்வர் என்பது உறுதி. முதற்கடவுளான கணநாதனின் முன், பக்தியுடன் நின்று வணங்குபவர்க்கு எத்தகைய துன்பங்களும் விலகி ஓடிவிடும் என்பது அனுபவப்பூர்வமாக அறிந்த உண்மை. இம்மை நலனையும், மறுமைப் பெருவாழ்வையும் ஒருங்கே அளிக்கும் இறைவன் அருள்மிகு "மணக்குள விநாயகர்" ஆவர் என்பது திண்ணம்.
சுபம்