SIDHI BUDHI விநாயகர்
வினை தீர்க்கும் விநாயகர் -2
திருமதி சாந்தா வரதராஜன்
தேவர்கள் துயர் தீர்க்க தேவியிநிடமிருந்து உண்டானவர்.ஐந்து முகங்களோடும்,பத்துக் கைகளிலும் ஆயுதங்களை எந்தியவராகவும் காட்சி அளித்தார். அவருக்கு 'வக்ரதுண்டர்' என்ற நாமம் இட்டு, சிங்கத்தை வாகனமாக கொடுத்தாள் தேவி. 'மகோர்கடர்' என்ற இயற்பெயர் இவருக்கு தந்தை மகேஸ்வரன் பினாகம்,சூலம், உடுக்கை, மழு, சடை,மதி முதலிய ஆயுதங்கள் கொடுத்து 'விரூபாட்சன்' 'பரசுபாணி', 'பால சந்திரன்' என்ற பெயர்கள் விளங்கசெய்தார்.தேவேந்திரனை போரில் வெற்றி கொண்டு, அவன் கர்வத்தை அடக்கியதால் 'தேவ தேவன்' என்ற பட்டமும் பெற்றார். பின்னர் ஈசன் இவருக்கு கற்பக விருட்சம், அங்குசம வச்சிராயுதம் ஆகியவற்றை கொடுத்து கௌரவித்தார். எந்த காரியத்திலும் விக்கினங்கள் (இடையூறுகள்) வராமல் நம்மை காப்பவர் 'விக்னேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். நான் முகனின் புதல்விகளான 'சித்தி' (ஞானசக்தி) 'புத்தி'(கிரியாசக்தி) இருவரையும் மணந்து கொண்டு 'கற்பக விநாயகராக' விளங்குகிறார்.
நம் நாட்டில் எல்லாவிதமான தெய்வ வழிபாட்டிற்கும் 'விநாயகர் வழிபாடு' முதன்மை ஸ்தானம் பெற்றுள்ளது. சிறுவர் முதல் பெரியவர் வரை அவரை போற்றி வணங்குகிறார்கள். விநாயகர் பூசையில் மற்றொரு சிறப்பு அம்சம் உண்டு. அவரை வழிபடும் போது இரண்டு கை முட்டிகளாலும் தலையில் நெற்றிக்கொடியில் குட்டிக் கொள்கிறோம். நாம் நமஸ்காரம் செய்வதை விட விநாயகருக்கு இவை இரண்டுமே அதிக பிரியமானவை என கருதப்படுகிறது. கஜமுகன் என்ற அசுரனின் தொல்லை பொறுக்க முடியாததால் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். பிள்ளையார் ,தந்தையின் ஆணையை ஏற்று அந்த அசுரனை கொல்லத் தன் பூதகனங்களுடன் சென்று அந்த அசுரனை கொல்லத் தம் பூதகனங்களுடன் சென்று 'பெருச்சாளி' வடிவில் இருந்த அவன் அகந்தையை அடக்கி அவனை அவனை தமக்கு ஊர்தியாகக் கொண்டார்.தேவர்கள் மகிழ்ந்தனர்.பிள்ளையாரை வணங்கி அருள் பெற்றார்கள்.தேவர்கள் மகிழ்ந்தனர்.பிள்ளையாரை வணங்கி அருள் பெற்றார்கள்.அசுரனுக்கு தோப்புகரணம் இட்டது போல் 1008 முறை இட்டனர்.அது கண்ட பிள்ளையார் அவ்வளவு போடவேண்டாம்,மூன்று முறை போட்டால் போதும் எனக் கூறினார்.அதிலிருந்தே பக்தர்களுக்கு பிள்ளையாரின் முன் தோப்புக்கரணம் போடும் பழக்கம் ஏற்பட்டது. பிள்ளையாரை வணங்கும் போது தலையில் குட்டிக் கொள்வதற்கும் ஒரு புராண கதை உண்டு.அகத்தியரின் கமண்டலத்தை காக்கை வடிவில் வந்த பிள்ளையார் காலால் உந்திவிட்டு கமண்டல நீர் காவிரியாக ஓடச் செய்தார். அகத்தியர் காக்கையை சீறினார். அது சிறுவனாக உருமாறி நின்றது. சிறுவனை இருகைகளாளுளும் தலையில் குட்ட ஓடினார். பிள்ளையார் தம் உண்மை வடிவை காட்டவே, அகத்தியர் தன் தவறை உணர்ந்து தாமே தம் தலையில் குட்டிக் கொண்டார். பிள்ளையார் 'அன்பனே, இன்று முதல் பக்தியுடன் நின்று தம் தலையில் குட்டிக் கொள்வோர் கூறிய அறிவும், சீரிய செல்வமும் பெற்று வாழ்வர்" என்றார்.
தொடரும்