SIDHI BUDHI விநாயகர்
வினை தீர்க்கும் விநாயகர் -5
திருமதி சாந்தா வரதராஜன்
HAVE A NICE DAY
பிறகு கற்பூர ஆரத்தி காட்டி,பாடல்கள் பாடி பூசையை முடிக்கவேண்டும்.மறுநாள் 'புனர் பூசை' செய்யவேண்டும்.பிறகு அந்த பிள்ளையாரை ஆற்றிலோ குளம்,கிணறு முதலிய இடங்களிலோ தண்ணீரில் போட்டுவிடுவார்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் நமது இடையூறுகள்,தீயசக்திகள் கரைந்து நல்லது நடக்கும் என்பது ஐய்தீகம். நாம் பிள்ளையாரை அடுத்த ஆண்டு வந்து அருள்புரியுமாறு வேண்டுகிறோம்.
நம் நாட்டில் விநாயகர் வழிபாடு தென் இந்தியாவைத் தவிர மகாராஷ்டிரம்,வங்காளம் ஆகிய இரு இடங்களிலும் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரம் முதலிய இடங்களில் விநாயகரை உழவுத் தெய்வமாகவும் கொண்டாடுகிறார்கள்.(நாம் பொங்கல் திருவிழாவில் சூரிய பகவானை உழவர் கடவுளாக கொண்டாடுகிறோம்).ஆகவே விநாயகர் வழிபாட்டில் 'நெற்கதிர்' உண்டு.
அயல்நாடுகளிலும் விநாயகர் வழிபாடு உண்டு. முக்கியமாக இந்திய நாகரிகம் வியாபித்த இடங்களில் இவ்வழிபாடு பரவியிருக்கிறது. இந்து மதத்தை போல,பௌத்தமததிலும் விக்கிரகங்களுள் 'விநாயகர்' உருவத்தை சகஜமாக காணலாம். ஆகவே,சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் மக்கள் விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். நம் நாட்டில் உள்ள சில முக்கிய சிறப்பு வாய்ந்த விநாயகர் ஆலயங்களை நோக்குவோம். அவைகள் 1. சேலம்- ராஜ கணபதி, 2 . காளஹச்தி - பஞ்சசக்தி விநாயகர். 3 . திருச்சி - மலைக்கோட்டை - உச்சிப்பிள்ளையார், 4 . மதுரை - சந்தான கணபதி, 6 . பாண்டிச்சேரி - மணக்குள விநாயகர், 7 . ஹம்பி - கடலைகல்லு பிள்ளையார்,8 . திருவையாறு,(தஞ்சை) - பிரசன்ன கணபதி, 9 .விருதாசலம் - வல்லப கணபதி இன்னும் பல கோயில்களிலும் விசேஷமாக கணபதி எழுந்தருளியுள்ளார்.
இக்கோயில்களுக்கு சென்று 'விநாயகப் பெருமானை' வணங்கி முழு மனதுடன் வழிபட்டால்,எடுத்த காரியம் நிறைவேறும். இன்னல்கள் தீரும். வாழ்வில் வெற்றி கிடைப்பது என்பது திண்ணம்.
சுபம்