HAVE A NICE டே
சங்கட ஹர சதுர்த்தி பூஜை |
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்
திருமதி சாந்தா வரதராஜன்
மலையரசன் முக்கனணுக்கும்,மலைமகள் உமதேவியாருக்கும் மூத்த குமாரனாக அவதரித்தவர் விநாயகர் ஆவார். நம் வினைகள் எல்லாம் தீர்பவரும் அவரே. பிள்ளையார், ஆனைமுகத்தோன், ஏகதந்தன்,ஐங்கரன்,கணேசர்,கணபதி,வக்ரதுண்டர்,விநாயகர் போன்று பற்பல நாமங்களை உடையவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி நாள்தான் விநாயகரின் பிறந்த நாள். எனவே விநாயகர் பிறந்த திதியான சதுர்த்தி தினம் 'விநாயகர் சதுர்த்தி' என்று அனைவரும் ஆனந்தமாக கொண்டாடுவது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் பிரதமை முதல் அமாவாசை அல்லது பௌர்ணமி வரையிலான திதிகள் பதினைந்தும் இருமுறை வருகின்றன. அவற்றுள் நான்காவதாக வரும் சதுர்த்தி தினம் ஐந்கரனான ஆனைமுகனை பூஜிக்க ஏற்ற தினமாகச் சொல்லப்பட்டுள்ளது.எல்லா நாட்களுமே ஏகதந்தனை வழிபட ஏற்றவை என்றாலும், சதுர்த்தி திதிக்கு சிறப்பு தனியானது.கணேச புராணத்தில் இந்திரன் சதுர்த்தியின் சிறப்பை கூறுகின்றான்.
இனி புராணக் கதையை நோக்குவோம். ஜகத்ரபுரி நாட்டைச் சூரசேனன் எனும் மன்னன் தர்மம் தவறாது ஆண்டு வந்தான். அவன் மனைவி
சுசீலை என்பவள் கற்புக்கரசியாக விளங்கினாள். ஒரு சமயம் அமரர்கள் அதிபதியான தேவேந்திரன் புஷ்ப விமானத்தில் அரண்மனை அருகில் வந்து இறங்கினான்.
தொடரும்