HAVE A NICE DAY
விநாயகர் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தான் விப்ரதன். முனிவர் முர்களர் சொன்னபடியே முழுமனதோடு முக்காலமும் கணேச மந்திரத்தை விடாமல் சொன்னான். துளித்துளியாய் அவனது தீய குணம் மறைந்து பக்தி வேர் விடத் தொடங்கியது. அதே சமயம் முனிவர் நட்டுவிட்டுப் போயிருந்த பட்டுப்போன கொம்பும்,வேர் விட்டு,பசுமைக்கு மாறித் துளிர்க்கத் தொடங்கியது. பல வருடங்கள் கடந்த பின் மீண்டும் வேடன் விப்ரதனைக் காண வந்த முரகல முனிவர் அவன் மனமும், மெய்யும்,உள்ளும் புறமும் முழுக்க முதர்கடவுளையே நினைத்துக் கொண்டிருப்பது முனிவருக்குப் புரிந்தது.இதன் விளைவாக அப்பொழுது,விப்ரதனுக்குப் புருவ மததியில் துதிக்கை தோன்றி,அவனது வடிவமும்கூட ஆனைமுகனை நினைவுபடுத்துவதுபோலவே மாறத் தொடங்கியது. முரகல முனிவர் விப்ரதனை ஆசீர்வதித்தார். மேலும், "விப்ரதா, துபிக்கையானைத் துதித்து அவரைப் போன்ற துதிக்கையும் பெற்றுவிட்ட நீ இன்று முதல் 'புருசுண்டி முனிவர்' என்று அழைக்கப்படுவாய்.மேலும் உன்னைக் கான்போருக்கும்கூட புண்ணியம் சேரும்' என்று ஆசீர்வதித்தார் முர்களர். எனவேதான் முக்காலமும் உணர்ந்த முரகல முனிவர் போற்றிப் பாராட்டிய அந்தப் புண்ணிய சீலர், "புருசுண்டி முனிவரைத்தான்,இப்பொழுது தரிசித்து வருகிறேன்" என்று மன்னன் சூரசேனன் வினாவிற்கு விடையைக் கதைமூலம் கூறினான் இந்திரன்.
சதுர்த்தி தினங்கள் எல்லாமே சங்கடங்கள் போக்கிச் சந்தோஷம் தரக்கூடியவைதான் என்றாலும், செவ்வாய்கிழமைகளில் வரும் சதுர்த்தி தினங்களுக்கு 'சங்கடஹர சதுர்த்தி' என்றே பெயர். சங்கட ஹர சதுர்த்தியின் மகிமை பற்பல இருப்பினும் செவ்வாய் (அங்காரகன்) அருள் பெற்றதை நோக்குவோம். பாரத்வாஜ முனிவர் மகனாகப் பிறந்து, பூமொதேவியால் வளர்க்கப்பட்டவன் அங்காரகன் எனும் செவ்வாய்.அம்மாவின் அரவணைப்பிலேயே வளர்ந்த தக்க வயது வந்ததும் அப்பாவான பாரத்வாஜ முனிவரைப் பார்க்கப் போனான்.
தொடரும்
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-3 திருமதி சாந்தா வரதராஜன் |