HAVE A NICE DAY
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-4
திருமதி சாந்தா வரதராஜன்
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-4
திருமதி சாந்தா வரதராஜன்
மகனைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் மாமுனிவர்.பின்பு முனிவரிடம் "அவனும் அவரைப்போல ஒப்பற்ற நிலை அடைந்து ,புகழ்மிக்க முனிவராக விளங்கவேண்டும். அதற்காக வழியை அவரே கூறவேண்டும் என்று அங்காரகன் பணிவுடன் வேண்டினான்.மகனின் புதிசாலிதனத்தை அறிந்து மனம் மகிழ்ந்தார் முனிவர்.தன் மகனின் எண்ணம் ஈடேற ஏகதன்தனை பூஜிப்பதுதான் ஏற்ற வழி என்றாலும், அதோடு முழு மூலப் பொருளின் மூலமந்திரத்தை மகனுக்கு உபதேசித்தார்,பாரத்வாஜ முனிவர். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதற்கு ஏற்ப,அவர் சொன்னபடியே ஆனைமுகனை நினைத்து அங்காரகன் தவமிருக்கதொடன்கினான்.
தக்க சமயத்தில் "கணபதி" அன்காரகனுக்குக் காட்சி தந்து,வரங்கள் அருளினார். அதோடு கிரகங்களினால் ஒன்றாகத் திகழவும் அனுகிரகம் புரிந்தார்.அவன் அருள் பெற்ற (திதி) தினம் ஒரு சதுர்த்தி நாள் என்பதால் 'அங்காரக சதுர்த்தி' என்றும்,அன்றைய தினம் விநாயகரை வணங்குவோரின் சங்கடங்கள் யாவும் தீர வேண்டும் வேண்டினான்.அவன் விருப்பப்படியே ஆசியளித்தார் ஆனைமுகன். அன்று முதல் செவ்வைக்கிழமைகளில் வரும் சதுர்த்தி தினம் மிகச் சிறப்பானதாக மாரியதாகப் புராணக் கதைகள் கூறுகின்றன.
"அங்காரக சதுர்த்தி சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தியாக இருக்க வேண்டும் " என்று செவ்வாய் வரம் கேட்டதால் 'சங்கடஹர சதுர்த்தி'என்று அழைக்கப்பட்டு பக்தர்கள் சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தியாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு மாதமுமே தேய்பிறைக் காலத்தில் வரும் சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுவதுண்டு. புதியதாக விரதம் தொடங்குபவர்கள் ,செவ்வாய்கிழமைகளில் வரும் சதுர்த்தி தினத்தில் விநாயகரை வேண்டிக் கொண்டு ஆரம்பிக்கலாம். சதுர்த்தி விரதம் விநாயகருக்கு உகந்தது. செவ்வாய்கிழமைகளில் பூஜித்தால் சிறந்தது.
தொடரும்