HAVE A NICE DAY
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-5
திருமதி சாந்தா வரதராஜன்
விநாயகர் - சங்கட (ஹர) சதுர்த்தி விரதம்-5
திருமதி சாந்தா வரதராஜன்
இவைகலைத தவிர மேலும் ஒரு புராணக் கதை உண்டு.அதாவது சந்திரனின் சங்கடம் தீர்த்தவர் விநாயகர். ஒரு சமயம், சதுர்த்தி தினம் அன்று ஏகப்பட்ட "மோதகங்களை"த தின்று விட்டு ஏகாந்தமாக உலாவிக் கொண்டிருந்தார் ஏகதந்தர். சந்திரன்தான் அறிவுக்கு அதிபதி என்றும் மதிக்கு (காரணமானவன் என்பதால் சந்திரனுக்கு 'மதி' என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவார்.ஒரு சமயம் சந்திரனுக்கு விதியின் செயலால் மதி கெட்டுப போயிற்று. அங்கு உலாவிக்கொண்டிருந்த விநாயகரின் உருவத்தைப் பார்த்துக கேலிசெய்து பேசத் தொடங்கினான் சந்திரன்.(சாமகர்ண) முறம் போல காது உள்ளவனே, (லம்போதரா) பெரிய வயிறு உள்ளவனே என்று ஆணைமுகனுக்கே ஆத்திரம் ஏற்படும்படி அளவுக்கு மீறிப் போனது சந்திரனின் கேலிப்பேச்சு. உடனே விநாயகர் "சந்திரனைப் பார்த்து உன் அழகு மீது உள்ள ஆணவத்தால், இவ்வாறு கேலி பேசுகிறாய். உன் அழகைப் பார்த்து ரசிப்பவர்கள்,இனி உன்னைப் பார்த்தாலே பாவதுக்குள்ளாவார்கள்" என்று சாபம் இட்டார்.
மறுகணமே ஒளி குன்றிக் குறைந்து,தேய்ந்து போகத் தொடங்கினான் சந்திரன். சந்திரனைப் பார்த்தல் பாவம் வரும் என்பதால் எல்லோரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.பிள்ளையா ரைக் கேலி செய்தது 'பிழை' என்பதை 'பிறை' யாக மாறிய பின்தான் உணர்ந்தான். தன் தவற்றை உணர்ந்து தன் பிழையைப் பொருத்து மன்னித்துக் குறையை நீக்கும்படி வேண்டினான். கருணைமிக்க கணேசர்,மனம் இறங்கினார். 'மதி' யின் தவறை மன்னித்தார்.
அவனுக்கு சாபம் அளித்த ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தன்று மட்டும் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்றும்,மற்ற தினங்களில் நிலவைப் பார்பதால் எந்தப் பாவமும் வராது என்றும் அருளினார்.தேகம் தேய்ந்து மறைந்தாலும் மீண்டும் வளர்வான் என்று வரமளித்தார்.எல்லோருக்கும் மேலாக, பிறையாக இருந்த சந்திரனை, தம் சிரசின்மேல் ஏற்றி, 'பாலச்சந்திரன்' என்ற நாமம் பெற்றார் விநாயகர்.
தொடரும்