![](http://tiruchendur.org/pix/dn161107e1010320cniok3.jpg)
ஸ்கந்த சஷ்டி -திருச்செந்தூர்
கந்த சஷ்டி விழா -1
திருமதி சாந்தா வரதராஜன்
ஸ்கந்த சஷ்டி என்பது சூரபத்மன் என்ற அரக்கனை முருகப்பெருமான் வதம் செய்த நாளைக் குறிக்கும்.தீபாவளி சமயத்தில் வரும் அமாவாசையிலிருந்து வரும் ஆறாம் நாள் சஷ்டியன்று, ஸ்கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது.
முருகப்பெருமான்,கயிலை நாதன் முக்கன்னனுக்கும்,மலைமகள் பார்வதி தேவியாருக்கும் இளைய மகனாக அவதரித்தார்.அசுரர்களை அழித்து, தேவர்களை காப்பதே இந்த அவதாரத்தின் நோக்கமாகும். ஐங்கரனின் அருமை சகோதரர் ஆவார்.தந்தைக்கு 'பிரணவ' மந்திரத்தின் பொருளை உணர்த்தியதால் சுவாமிநாதனும் இவரே.குமரன்,சரவண பொய்கையில் தோன்றி, கார்த்திகை பெண்டிர்களால் வளர்க்கப்பட்ட சிறப்பினையுடையவர்.'வடிவேலன்','ஞானசக்தி' என்னும் வேலாயுதத்தை கொண்டவர்.திருத்தணிகை குமாரரஆய் 'இச்சா சக்தி'யான தெய்வானை அம்மையாரையும் மணந்தார். சண்முகநாதன்,தன் இருதேவியருடன் மயிலை வாகனமாகவும்,சேவலை கொடியாகவும் கொண்டு ஆறுமுகத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தேவர்கள், முனிவர்கள்ஆகியோரை காக்கவே சூரபத்மன், சிங்கமுகன்,தாருகாசுரன் போன்ற கொடிய அசுரர்களை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த நாள் தான் ஸ்கந்த சஹ்டி ஆகும்.சூரன் மூன்று தேவர்களாலும் கொள்ளமுடியாதபடி வரம் பெற்று மிகவும் அட்டூழியம் செய்து, தேவர்களை உபதிரவப்படுத் தி வந்தான். இந்திரனின் மனைவி இந்திராணியையும், தேவர்களையும் சிறையில் அடைத்து துன்புறுத்தினான்.பலகாலம் தேவர்கள் சிறையில் கஷ்டப்பட்டார்கள்.அச்சமயம் தேவர்களுக்கு உதவும் பொருட்டு நாரத முனிவர் ஒரு உபாயம் செய்தார்.அதாவது தேவர்கள் அனைவரும் பரம்பொருளான சிவனஐ குறித்து தவம் செய்தால் பலன் கிடைக்கும் ,விடுதலையும், நல்வாழ்வும் கிட்டும் என்றார். பல நூற்றாண்டுகள் தேவர்கள் அவ்வாறே சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார்கள்.
தொடரும்