உ
திருமதி சாந்தா வரதராஜன் எழதிய
வினாயகர் பெருமை நூல் வெளியீட்டு விழா
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கத்தின் இலக்கியத் திருவிழா 06-12-2014 சனிக்கிழமை மாலை மாம்பலம் சந்திரசேகர் கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் மாம்பலம் திரு.ஆ .சந்திரசேகர் (ஒய்வு) முன்னிலை வகித்தார். திரு தா.சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ்(ஓய்வு) தலைமை வகித்தார்.கவிஞ்ஞர் எழுத்தாளர் திருமதி சாந்தா வரதராஜன் எழுதியுள்ள "விநாயகப் பெருமானின் மகிமையும் திருகோயில்களும்" என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். இநநூலுக்கு திருப்புகழ் திலகம் திரு.மதிவண்ணன் மதிப்புரை வழங்கினார்.
இவ்விழாவில் திருமதி சாந்தா வரதராஜன் , திரு . எஸ்.வி. வரதராஜன் ஆகியோருக்கு திரு.தா.சந்திரசேகரன் நினைவுப்பரிசு வழங்கி சிறப்புச் செய்தார்.திருமதி சாந்தா வரதராஜன் ஏற்புரையாற்றினார்.
மற்றும் இவிழாவில் நூலின் பிரதிகளைப் பெற்றுகொண்டவர்கள், நூலுக்கு அணிந்துரை எழுதியவர்கள்,மேலும் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த உரத்த சிந்தனை அமைப்பின் தலைவர் திரு.எஸ்.வி. ராஜசேகர், பொதுச் செயலாளர் திரு.உதயம் ராம் மற்றும் விழா ஏற்பாடு செய்வதில் உதவிய அனைவரும் கௌரவிக்கப்பட்டனர்.
சுபம்