இறைமாமணி விருது
சிவ நேயப் பேரவை, மகளிர் தின விழா சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் கடந்த மார்ச் 12ம் தேதி நடைபெற்றது. இதில் பேரவை தலைவர் ஈசனேசன் மகஸ்ரீ வரவேற்புரயாற்றினார். இன்னிசை கீதம், பரதநாட்டியம், வேதபடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 10 பெண்மணிகளுக்கு 'விருது' அளிக்கப்பட்டது.அவ்வகையில் கலை,இலக்கியம், ஆன்மீக படைப்பாளரான திருமதி திருமதி சாந்தாவரதராஜன் அவர்களுக்கு "இறைமாமணி" என்ற விருதினை சிவநேயப் பேரவையால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பல பிரமுகர்கள் கவிஞ்ஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்த்துரை
வழங்கினார்கள். நன்றியுரையுடன் மகளிர் தின விழா இனிதே நிறைவு பெற்றது.