உ
திருவேங்கடமுடையான்-திருப்பதி part-11
திருமதி சாந்தாவரதராஜன்
திருவேங்கட திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். தமிழகத்தின் வட எல்லையாக திருவேங்கடம் பழங்காலத்தில் விளங்கிஉள்ளது. இக்கருத்தினை தொல்காப்பிய பாடல் விளக்குகிறது
வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகத்துஇத்தலத்தின் சிறப்புகளை சங்க பாடல்கள் மூலம் நாம் அறியலாம் .சங்கத்தொகை நூல்களுள் அகநானுறு என்னும் தொகை நூலில்
பனிபடு சோலை வேங்கடதும்பர் மொழிபெயர்த்த எத்தர்என்று மாமுலனார் என்ற சங்கப்புலவர் புகலுகின்றார்.
மேலும், திருமாலைப்போற்றி பாடிய ஆழ்வார்கள் பதிநோருருவரில் , தொண்டரடிப்பொடியழ்வார் தவிர ஏனைய ஆழ்வார்கள் பதின்மரும் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆழ்வார்களின் பாசுரப்பெருக்க வகையில் இத்திருப்பதி இரண்டாவதாகும்.
திருவரங்கம் 247 பாசுரங்களை பெற்றுள்ளது. இத்திருப்பதி 203 திருப்பசுரங்கள்
பெற்று விளங்குகிறது.
திருவேங்கடம் இறைவன் குடிகொண்ட பதி என்னும் பொருளில் திருப்பதி என
அழைப்பது வழக்கம். ஏழு மலைகளைக் கடந்து திருமலையில் உறைபவர் பெயர்கள்,
பாலாஜி , பிரபு,சீனிவாசன்,