OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

hullo !!

                                                                                                                                                                                                                                            

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               உ                                                                                                                                                                                                                                                                    
                                                   
                                                                                                                                         
            திருவேங்கடமுடையான்-திருப்பதி part-11                                                                                                                                                              
                                         திருமதி சாந்தாவரதராஜன்
  திருவேங்கட திருத்தலம் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.   தமிழகத்தின் வட எல்லையாக திருவேங்கடம் பழங்காலத்தில் விளங்கிஉள்ளது. இக்கருத்தினை தொல்காப்பிய பாடல் விளக்குகிறது
                 வடவேங்கடம்  தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகத்து
இத்தலத்தின்   சிறப்புகளை சங்க பாடல்கள் மூலம் நாம் அறியலாம் .சங்கத்தொகை நூல்களுள் அகநானுறு என்னும் தொகை நூலில்
                                                                                                                         
     பனிபடு சோலை  வேங்கடதும்பர் மொழிபெயர்த்த  எத்தர்
என்று மாமுலனார் என்ற சங்கப்புலவர் புகலுகின்றார்.

  மேலும், திருமாலைப்போற்றி  பாடிய ஆழ்வார்கள் பதிநோருருவரில் , தொண்டரடிப்பொடியழ்வார் தவிர ஏனைய  ஆழ்வார்கள் பதின்மரும் இத்திருத்தலத்தை  மங்களாசாசனம்  செய்துள்ளனர்.  ஆழ்வார்களின் பாசுரப்பெருக்க வகையில் இத்திருப்பதி இரண்டாவதாகும்.
திருவரங்கம் 247 பாசுரங்களை பெற்றுள்ளது. இத்திருப்பதி 203 திருப்பசுரங்கள்
 பெற்று விளங்குகிறது.
திருவேங்கடம் இறைவன் குடிகொண்ட பதி என்னும் பொருளில் திருப்பதி என
அழைப்பது வழக்கம். ஏழு மலைகளைக் கடந்து திருமலையில் உறைபவர் பெயர்கள்,
பாலாஜி , பிரபு,சீனிவாசன்,
     
                                              part-2
 வெங்கடாஜலபதி,எழுமலயான், திருவேங்கடமுடையான் ஆகியன.இம்மலை
யுக சிறப்பு பெற்றது. எம்ப்ருமானின் மூன்று திருக்கோயில்களை உள்ளடக்கியது. மோந்ருகோயில்கலில் இரண்டு கோயில்கள் கீழ் திருப்பதியிலும், ஒரு கோயில் மலை
மீது திருமலையிலும் உள்ளன.
       உலகிலேயே அதிக அணிகலன்களை                                                                                                                                                                                                                                
          அணிந்த இறைவன் இப்பெருமான் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
கருவறையில் கம்பீரமான தோற்றத்தில் தோளில் சுருண்ட முடி,இருபது அங்குல உயரமுள்ள அழகிய கிரீடம்,காதுகளில்
குண்டலங்கள்,முகத்தாடையில் ஒரு வெள்ளை தழும்பு, அருள் பொங்கும் விழிகள்,பரந்த எடுப்பான மார்பு,பாஞ்சஜன்யம் ஏந்திய இடது கை,
வலது கையில் சுதர்சன சக்கரம்,வலது புரக்கை தன் பாதங்களில் சரணாகதி ஆவோற்கு எல்லாம் சித்திக்கும் என்று தன் தாமரைத்தாள்களை காட்டுகிறது இதனை அபய ஹஸ்தம் என்பர்.இது கையை கீழ் நோக்கிய நிலையில் நான்கு விரல்கள் தொடை மீதும்,கட்டை விரல் மட்டும்
இடுப்பை நோக்கியும் விரிந்து கம்பீரமான தோற்றம்.எவர்க்கும் அப்பன் பெருமாளை அப்படியே
பார்த்துக்கொண்டு இருந்து விடமாட்டோமா என்று என்னச்செயும் தோற்றம்.
 திருப்பதி சர்வ சமய தெய்வீக ஒருமைப்பாட்டை வலயுருத்துகிறது எனவும், ஆதிபராசக்தி,முருகப்பெருமான்,நாராயணன்,சிவபெருமான்,வைணவி,
ஆகியோரின் தத்துவங்களை விளக்கும் பொதுத்தளம் எனவும் கூருவர். திருமலை திருக்கோவிலில் தினமும்
                                      part-3

   திருவிழாக்கோலம்தான் என்றாலும், புரட்டாசி மாதம் நடைபெறும் ஒன்பது நாள் பிரம்மோத்சவம் தனி சிறப்புவாய்ந்தது.
அதனை பிரம்மனே நடத்தி வைப்பதாக நம்பிக்கை.ப்ரம்மோர்சவ வேளையில் வேங்கடவனை சேவிப்பவர்களின் அனைத்து பாவங்களும் தொலைகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.காலையும் மாலையும் உற்சவம் புறப்பாடு,திருதேர்விழா
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் உலா என்று மிக விமரிசையாக நடைபெறும்.இவ்விழாவில் குறிப்பிடத்தக்க விழா ஐந்தாம் நாள்
விழாவான "கருட சேவை" தான்.இதனைக்கான அன்பர்கள் ஆர்வம் பக்திஉடன் திரளாகக்  கூடுகின்றனர். பெருமானைப் பாடிவரும் கூட்டம்,கோலாட்டம்,கும்மி,என்று
வண்ணமயமான
 விழாவாகும்.கூடும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு அளவே கிடையாது.
              திருமலை
 ஒரு மிகப்பெரிய தீர்த்த த்ஷேத்ரம்.
 புராண
 நூல்களில் இங்கு 108  தீர்த்தங்கள் உள்ளன என விவரிக்கக் காணலாம். அரூபமாக கண்ணால் காணப்பெறாத தீர்த்தங்களும் ஆண்டுக்கு ஒரு முறை இங்கு வந்து கூடுகின்றன.மேலும்,சுவாமி புஷ்கரிணி,ஆகாச கங்கை,பாபவினாச
தீர்த்தம்
 பாண்டு தீர்த்தம்,குமாரதீர்தம்,தும்புரு தீர்த்தம்,இராமகிருஷ்ண தீர்த்தம் ஆகியவை விசேஷமானவை.இவ்வாறு ஆலய தரிசனம் முடித்து வரும்
பக்தர்களுக்கு
 இலவசமாக சிறிய லட்டு பிரசாதம் வழங்கப்பெறுகிறது.திருப்பதி ப்ரசாதர்த்திக்கே
தனியாக
 ஓர் உயர்ந்த சுவை உண்டு.
                                                          part-4

பொதுவாக செல்வச்சிறப்பு வேண்டுவோர் திருவேங்கடவனைய் வழிபடுதல் வேண்டும் என்பர்.ஏனென்றால் அவர் செல்வக்கட்வுளாகவும்,
புருஷார்த்தங்களை வழங்கி அருளக்கூடிய புருஷோதமனாகவும்   திகழ்கின்றார்.
வேண்டுவோர் வேண்டுவதைஎல்லாம் வழங்கியருளககூடியா வள்ளர்
பெருமான் வடவேங்கடநாதன்.
   தீராப்பிணிகளை உடையவர்களுக்கு நோய் நீக்கத்தையும்,கல்வி பயிலுவோற்கு கல்விபெருக்கதயும், ந்ஞானத்தை விரும்புவோர்க்கு நல்ன்ஞானதையும்,
வீடுபேறு விரும்புவோர்க்கு பரமபதத்தையும் உண்டாகியருள்கிறார்
 உத்தமர் வேங்கடவர்.

           சென்னையிலிருந்து அடிக்கடி பேருந்த்கள் திருப்பதிக்கு செல்கின்றன.சென்னையிலிருந்தும்,மதுரை முதலான வேறு 
தென் மாவட்டப் பகுதிகளிலிருந்தும் தொடர் வண்டிகள் உள்ளன.    
இத்தகைய சிறப்பு மிக்க புராண தல பெருமை பெற்ற கலியுக கண்கண்ட 
தெய்வமாகிய திருவேங்கட நாதனை தரிசித்து வழிபட்டால் இம்மை,மறுமை 
பேரு பெறுவது திண்ணம்.
                                                                      திருமதி சாந்தாவரதராஜன்  
                                                               om       

                                                   .                           

    
                                                                            
 


























































































































llll
llllllllllllllllllll


                                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please send your comments