OWL

OWL
OWL

WELCOME

WEB HOTING

Web.com Web Hosting

T.NAGAR SHOPS


View Retail stores in T-Nagar in a larger map

traffic

click bank

amazon

POST A COMMENT

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

THIRUVAVINANKUDI




உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-திருவாவினன்குடி   -Part-1
திருமதி சாந்தா வரதராஜன் 


"படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர்தான் முடிக்கின்றிலை முருகா வேன்கிலை முசியமாலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற் கொளவிம்மி விம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே" என்பது கந்தரலங்காரம் செய்யுள். இந்த ஸ்தலத்தின் சிறப்பினை பல புலவர்கள், பக்தர்கள், தொண்டர்கள் ஆகியோர் பிள்ளை தமிழ், கோவை,மாலை, அந்தாதி,வண்ணங்கள்,பள்ளு போன்ற பாக்களை இயற்றியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


4 .திருவேரகம் - சுவாமிமலை 


 இது முருகப்பெருமானின் நான்காம் படை வீடு. இங்கு சுவாமிநாதனாக முருகர் காட்சியளிக்கிறார். கி.பி.15  ம் நூற்றாண்டில் இருந்ததாக கருதப்படும்அருணகிரிநாதர்,திருவேரகம் என்பது கும்பகோணதிர்கருகில் உள்ள சுவாமி மலை என்று பல திருப்புகழ் பாடல்களில் பாடியுள்ளார்.அவர் "நடியிர்காவிரியாற்றுக்குள்ளே பயில் வளமை சோழ நன்னாட்டுக்குள் ஏறக நகர், என்றும், வளைகுல மலங்கு காவிரியின் வடபுரன்சுவமி மலை மிசை விளங்கு தேவர் பெருமானே" என்றும் கூறியிருக்கிறார்.இதனால் சோழ நாட்டிலுள்ள காவிரிக்கு வடகரையிலுள்ள இக்கோவில் சுவாமி மலைக்கு அண்மையிலுள்ள ஏரகம் என்று மருவியதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூருகின்றனர்.


  ஈர ஆடையுடன் சுவாமியை தரிசனத்திற்கு செல்லும் வழக்கம் சுவாமிமலையிலும் காணப்படுகிறது
வழிபடசெல்பவர்கள் காவிரியில் நீராடி,பெரும்பாலும் ஈர ஆடையுடன் தான் சுவாமிநாதனை வணங்கச் செல்கின்றனர்.


தொடரும் 
   


புதன், 23 டிசம்பர், 2009

PAZHANI-3


உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-பழனி-Part-2
திருமதி சாந்தா வரதராஜன் 


 "கூருடையாளுங்குன்றாக் குணப் பெருங்குன்று - ஞானப் 
பேருடைப் பழனி என்னப் பெயரது மருவிஎங்கள்
ஆறுமா முகுவன் வைகும் நகரமும் அன்று தொட்டு 
வீறு தொல் பழநீஎன்றே விளம்பின் உலக மூன்றும்"


என்று பழனித்தல புராணம் கூறுகிறது.


 எங்களுக்கு ஞானப்பழம் நீ என்று சிவபெருமானும் உமையும் கூறியதால் பழம்நீ என்பது பழனி என்றும் பழாதியம்பதி என்றும் மருவியது. இக்கோவிலில் திருகுமரன் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். அங்கு குமரப்பெருமான் இடும்பா சூரனை வதம் செய்தார். அவன் கேட்ட வரம் காரணமாக, ஒன்று வாயில் காவலனாக இருப்பது, மற்றது, தன்னை போல் காவடி தாங்கி வரும் அன்பர்களுக்கு கருணை சுரப்பதாகும்.இங்கு பக்தர்கள் காவடிகளில் தேன், பால், சர்க்கரை, இளநீர், பன்னீர் திருநீறு இவைகளைக் கொண்டு வருதல், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தல், இவை இடையறாது, நிகழ்ந்த வண்ணம் இருக்கும். பழனி முருகனுக்கு வைகாசி விசாகம்,ஐப்பசியில் சஷ்டி, கார்த்திகையில் கிருத்திகை, தைப்பூசம் பங்குனி உத்திரம் இந்த நாட்களில் சிறப்பான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மாதம் தோறும் கிருத்திகை, சஷ்டி விசாகம், அமவாசைகளிலும் விழாக்கள் உண்டு. சித்திரை, வைகாசி மாதங்களில் அக்னி நட்சத்திர காலத்தில் மக்கள் திரளாக வந்து மலைவலம் வருகின்றனர்.


திருவாவினன்குடி 


  திருவாவினன்குடி என்ற கோவில் பழனி அருகில் உள்ளது.இங்கு முருகப் பெருமான் தெய்வயானையுடன் காட்சி அளிக்கிறார்.
 "ஆதியந்தம் உலா ஆசுபாடிய சேரர் கொங்குவை 
 காவூர் நனாடத்தில், ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே"
என்று அருணகிரிநாதர் பாடியுள்ளார்.


தொடரும் 
                           


புதன், 16 டிசம்பர், 2009

pazhani-2

உ 
முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்கள்-பழனி-Part-2
திருமதி சாந்தா வரதராஜன் 


இதை அடைய 660 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். படிவரிசைகளில் சுமார் கால் பாகம் சென்றதும் யானைப்பதை என்ற மலை வழிப்பாதை ஒன்றும் பிரிந்து செல்கிறது. அதன் வழியாகவும் சென்று சேரலாம். இது பழமையும்,புதுமையும் கலந்து நிற்கும் பான்மை போலும். வெளிச்சுற்றில் வலம் வரும் போது ஒரு பக்கம் பாங்கர் மலைத்தொடர்ச்சி , மற்றொரு பக்கம் வையாவிபுரி ஏறி, இன்னொரு சார் பச்சைப்பசேல் என்று தோன்றும் வயல்கள் இவைகளை காணலாம்.கரடு முரடான மலைப்பாறைகள் இறைவன் திருச்சடையும், பசும் வயல்கள் உமையம்மையின் தோற்றத்தையும் வையாவிபுரி ஏரியின் நீர் நடுநாயகமாய் நின்று அருள் கந்தன் (அருள்) கருணை வெள்ளம் என்றும் கொள்ளலாம் போல் தோன்றுகிறது.       


  பழனி ஆண்டவர் சன்னதி மேற்கு நோக்கியது. திருவாயிலில் நுழைந்து மயில் மண்டபம், மணிகட்டி மண்டபம் தாண்டி இராஜ கோபுர வாயில் வழியாக பாரவேல் மண்டபத்தை அடையலாம். பாரவேல் மண்டபத்தின் கற்றூண்கள் அற்புத சிற்ப அமைப்புடன் பொற்புடன் நிற்கின்றன. அதை தாண்டினால் நவரங்க மண்டபத்தை சேரலாம். அங்கிருந்துதான் பழனியாண்டவர் திருகோலத்தை வணங்க வேண்டும். ஆண்டவனுக்கு அபிஷேகங்களும் பலவித அலங்காரங்களும் எந்நேரமும் நடந்து கொண்டேயிருக்கும்.                                      


  மலைக்கோயிலுள்ள பாண்டிய மன்னர் கல் வெட்டில் வைகாவூர் நாட்டு பழனிமலை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழனி என்ற பேர் வந்ததற்கு புராண கதையும் உண்டு.                                                                                
தொடரும்                                                                                                                        
                                                                      


      

சனி, 5 டிசம்பர், 2009

Thirchendhur-2

முருகப் பெருமானின் முக்கிய திருத்தலங்கள் 
திருச்செந்தூர் Part-3                                                                                           
 திருமதி சாந்தா வரதராஜன்                               
மாதம் தோறும் சஷ்டி கிருத்திகை போன்றவை முக்கிய நாட்கள் ஆகும்.               
 "வந்த வினையும்  வருகின்ற வல்வினையும் கந்தநென்று சொல்லக்கலங்குமே செந்தினார்செவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வாராதே வினை" 
என்பது நம்பிக்கை மேலும்,                             
"சாகா வரமும் தந்திடும்,உடம்பிற்,               
போகாப்பீடை போக்கிரட்சிக்கும்,வறுமை நீங்கும், வாழ்வு உண்டாகும்"                                                           
என்று திருச்செந்தூர் அகவல் தெரிவிக்கிறது.                                                                     
3.பழனி   
   தமிழ்க்கடவுளான திருமுருகன் கோவில்   கொண்டிருக்கும்  பல தலங்களில் இது தலை சிறந்தது. பழநியம்பதி மூன்றாம் படை வீடாகும். இதற்கு சிவகிரி,பழனாபுரி, பொதினி என்ற பெயர்களும் உண்டு. தமிழ்ச்சங்க நூலாகிய அகநானூற்றிலே இந்த பதி பொதினி என்று கூறப்பட்டிருக்கிறது. அந்த சொல்லே மருவி பழநிஎன்றாயிற்று என்பர். பழனங்கள் (வயல்கள்) சூழ்ந்த    
இவ்வூர் பழனி என்றும் கூருவர்.               


    இப்பழனி மலை மேற்கு தொடர்ச்சி மலையை சேர்ந்தது. இவ்வூர் கடல் மட்டத்திற்கு 668 அடி உயரத்திலுள்ளது. அம்மலையின் உயரம் 450 அடி. இம்மலையைச் சுற்றி வர 1 1/4 மைல்  தொலைவிலுள்ள ஓர்   
அழகிய சாலையும் அமைந்துள்ளது. பல சிறு கோயில்களும், சாதுக்களின் மடங்களும் அறச்சாலைகளும், மயில் மண்டபங்களும் அந்தக் கிரிவீதி மருங்கில் திகழ்கின்றன. மலைக்கு         
2 1/4  மைல் தூரத்தே ஷண்முக நதியெனும் புனித ஆறு ஓடிக்  கொண்டிருக்கிறது. இடும்பன் மலை அருகே எழில் பெற நிற்கின்றது. இயற்கை வளங்களின் நடுவே பழனிமலை நிற்கும் காட்சி கண்கவர் வனப்புடையது. அம்மலையின் மணிமுடிமேல் விளங்குவது இளங்குமரனின் திருக்கோயில்.                               
தொடரும்.